zip கோப்புகளின் கடவுச்சொல்லை ( பாஸ்வேர்டு ) மீட்டுத்தரும் பயனுள்ள இலவச மென்பொருள்.

ஓகஸ்ட் 25, 2011 at 3:43 பிப பின்னூட்டமொன்றை இடுக

கோப்புகளின் அளவை சுருக்கவும் , மொத்தமாக அத்தனை கோப்புகளையும் ஒரே இடத்தில் சேர்க்கவும் நாம் Zip Compress செய்து அனுப்புவோம், சில நேரங்களில் இப்படி நாம் சுருக்கும் கோப்புகளுக்கு கடவுச்சொல் கொடுத்திருப்போம், ஆனால் சில நாட்களுக்கு பின் என்ன கடவுச்சொல் கொடுத்தோம் என்று நினைவிருக்காது அப்படி கடவுச்சொல் மறந்துவிட்ட Zip கோப்புகளின் கடவுச்சொல்லை  கொடுக்க ஒரு இலவச மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

இணையத்தில் தனித்தனி கோப்புகளாக அனுப்பாமல் பல நேரங்களில் அனைத்து கோப்புகளையும் ஒன்று சேர்த்து Zip கோப்பாக அனுப்புவது வழக்கம் இப்படி அனுப்புவதால் எந்த சிறிய கோப்புகளும் விடுபடாது கூடவே கடவுச்சொல் கொடுத்தும் வைக்கலாம், கடவுச்சொல் மறந்திவிட்ட Zip கோப்புகளை திறக்க ஒரு இலவச மென்பொருள் உள்ளது.

தறவிரக்க முகவரி : http://www.appnimi.com/file/zip-password-unlocker

இத்தளத்திற்கு சென்று Download என்ற பொத்தானை சொடுக்கி இந்த மென்பொருளை இலவசமாக தறவிரக்கலாம். இந்த மென்பொருளை நிறுவி இயக்கியதும் வரும் திரையில் Select என்ற பொத்தானை சொடுக்கி எந்த Zip கோப்பின் கடவுச்சொல்லை  கண்டுபிடிக்க வேண்டுமோ அதை தேர்ந்தெடுக்கவும் அடுத்து Destination என்று இருக்கும் கட்டத்திற்குள் எந்த இடத்தில் சேமிக்க வேண்டுமோ அதையும் கொடுத்து Start என்ற பொத்தானை சொடுக்க வேண்டியது தான், ஒவ்வொரு கடவுச்சொல்லை பொருத்தும் நேரம் மாறுபடும் கடவுச்சொல் கண்டுபிடித்த பின் Message என்று சிறிய விண்டோவில் கடவுச்சொல்லை காட்டும். Zip கோப்புகளின் கடவுச்சொல்லை மறந்துவிட்ட நண்பர்களுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

பாதுகாப்பான கடவுச்சொல் (Password) எளிதாக ஆன்லைன் மூலம் உருவாக்கலாம்.

கடவுச்சொல் இல்லாமல் நம் முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழையலாம்

பிடிஎப் கோப்புகளின் கடவுச்சொல்லை ஆன்லைன் மூலம் எளிதில் நீக்கலாம்

ஆன்லைன்-ல் படத்தில் உள்ளதை எழுத்துக்களை எழுத்துள்ள கோப்புகளாக (OCR) மாற்றலாம்.

 
வின்மணி சிந்தனை
வயதான பெரியவர்களிம் பேச நேரம் ஒதுக்குவோம் , அவர்களின்
உணர்வுகளுக்கு மரியாதை கொடுப்போம்.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இந்தியாவில் தேயிலை மையம் எங்குள்ளது ?
2.இந்தியாவில் பசுமைப்புரட்சி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?
3.இந்தியாவில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எந்த
 ஆண்டு மேற்கொள்ளப்பட்டது ?
4.இந்திய திட்டக்கமிஷனின் பணி என்ன ?
5.இந்தியாவில் காபி மையம் எங்குள்ளது ?
6.வெண்மைப்புரட்சியுடன் தொடர்புடைய நிகழ்சி எது ?
7.இந்தியாவில் வாசனைத் திரவிய மையம் எங்குள்ளது ?
8.இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு எத்தனை 
 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது ? 
9.இந்தியாவில் ரப்பர் மையம் எங்குள்ளது ? 
10.இந்தியாவில் புகையிலை மையம் எங்குள்ளது ?
பதில்கள்:
1.கொல்கத்தா, 2. 1966-67, 3.1872, 4.5 ஆண்டு திட்டங்களை 
உருவாக்குதல், 5.பெங்களூர், 6.Operation Blood Programme,
7.கொச்சி (கேரளா), 8.10, 9.கோட்டயம் (கேரளா),
10.குண்டூர் (ஆந்திரப்பிரதேசம்).
 
இன்று ஆகஸ்ட் 25
பெயர் : கிருபானந்த வாரியார் ,
பிறந்த தேதி : ஆகஸ்ட் 25, 1906
சிறந்த முருக பக்தர். தினமும் ஆன்மீக
சொற்பொழிவுகள் நிகழ்த்துவதையே தவமாகக்
கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம்,
மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை
போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர்.
"அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி"
என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

அழகான மொபைல் இணையதளம் (Mobile Website ) இலவசமாக உருவாக்கலாம். ஜீமெயில் பயனாளர்களுக்கு கூகிள் labs அறிமுகம் – சிறப்பு பதிவு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,743 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஓகஸ்ட் 2011
தி செ பு விய வெ ஞா
« ஜூலை   செப் »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: