நம் குடும்பத்துக்கு நாமே பட்ஜெட் போட்டு பார்க்க உதவும் பயனுள்ள இணையதளம்.

ஓகஸ்ட் 11, 2011 at 12:08 பிப 1 மறுமொழி

ஒரு நாட்டு வரவு செலவுக்கு பட்ஜெட் எவ்வளவு முக்கியமோ அதே போல் ஒருவர் வீட்டிற்கும் பட்ஜெட் என்பது முக்கியமான ஒன்று, எவ்வளவு பணம் வருகிறது  எவ்வளவு பணம் செலவாகிறது என்ற அனைத்து விபரங்களையும் கொண்ட இந்த பட்ஜெட்-ஐ நம் குடும்பத்துக்கும் போட்டு பார்க்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

எவ்வளவு பணம் வந்தாலும் செலவாகிறது என்று சொல்லும் நபர்கள் கூட  ஒரு மாதம் மட்டும் பட்ஜெட் போட்டு செலவழித்து பார்த்தால் அதன் நன்மை புரியும். ஆன்லைன் மூலம் நமக்கு பட்ஜெட் உருவாக்க உதவுகிறது ஒரு தளம்.

இணையதள முகவரி : http://www.spendful.com

இத்தளத்திற்கு சென்று புதிதாக ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கி  கொண்டு உள்நுழையலாம். அடுத்து வரும் திரையில் உங்கள் பெயரும் ஆரம்ப கையிருப்பு (Starting balance) எவ்வளவு என்று கேட்கிறது. இதைக்கொடுத்து உள்நுழைந்து அடுத்து வரும் திரையில் Income , Expense கொடுத்து விட்டு Income -ல் Add item என்பதை சொடுக்கு எதற்கெல்லாம் எவ்வளவு பணம் செலவாகிறது என்று கொடுத்து கொண்டே வரவேண்டியது தான். சராசரியாக இரண்டு மாதம் இப்படி நாம் பட்ஜெட் போட்டு கணக்கு பார்த்தால்  மூன்றாவது மாதம் செலவு நம் வரவுக்குள் அடங்கும். பணத்தை தண்ணிராய் செலவழிக்கும் நபர்கள் கூட இத்தளத்திற்கு சென்று எந்த விளம்பரமும் இல்லாமல் இவர்கள் கொடுக்கும் இலவச சேவையைப் பயன்படுத்தி பார்க்கலாம். பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்த வேண்டும் என்ற எண்ணம் உள்ள அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

பெற்றோர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் யாகூவின் பயனுள்ள பாதுகாப்பு தேடல் உதவி.

அனைவருக்கும் பயன்தரும் அறிவுத் தகவல் திரட்டு களஞ்சியம் (Realtime encyclopedia )

பிரிண்டர் வைத்திருக்கும் அனைவருக்கும் உதவும் இலவச Printable Paper

ஆன்லைன் -ல் அனைவருக்கும் பயன்தரும் யூனிட் கன்வெர்டர் ( Unit Converter )

 
வின்மணி இன்றைய சிந்தனை
பணமும், தங்கமும் ஒரு போதும் உண்மையான அன்பை
கொடுக்காது, நிரந்தரம் இல்லாத அன்பை தான் கொடுக்கும்.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4 
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.உலக மக்கள் தொகையில் இந்தியாவின் சதவீதம் என்ன ?
2.இந்தியக்கடற்கரையின் மொத்த நீளம் என்ன ?
3.இந்தியா அமைந்துள்ள கண்டத்தின் பெயர் என்ன ?
4.இந்திய மாநிலங்களுள் மிகப் பெரிய பரப்பளவு கொண்ட
  மாநிலம் எது ?
5.உலக வரைபடத்தில் இந்தியாவின் அட்சரேகை ( Latitudes)
   அமைவிட அளவு என்ன ? 
6.இந்திய மாநிலங்களுள் மிகச் சிறிய பரப்பளவு கொண்ட
 மாநிலம் எது ? 
7.உலக வரைபடத்தில் இந்தியாவின் தீர்க்கரேகை (Longitudes)
 அமைவிட அளவு என்ன ? 
8.இந்தியா வடக்கு தெற்காக எவ்வளவு தூரம் பரவியுள்ளது ? 
9.இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே உள்ள 
 எல்லைக்கோட்டின் பெயர் என்ன ? 
10.தற்போது இந்தியாவில் உள்ள மாநிலங்களின் எண்ணிக்கை
  எவ்வளவு ?
பதில்கள்:
1.16.87 %,2.6100 கி.மீ, 3.ஆசியா,4.இராஜஸ்தான்
(3,42,239 ச.கி.மீ ), 5.8°4  வட அட்சத்தில் இருந்து 37°6 
வட அட்சம் வரை, 6.கோவா (3702 ச.கி.மீ ) ,7.68°7 கிழக்கு
தீர்க்கம் முதல் 97°25 கிழக்கு தீர்க்கம் வரை, 8.3214 கி.மீ,
9.ரெட்கிளிப் எல்லைக்கோடு (1947 ), 10.28.
 
இன்று ஆகஸ்ட் 11 

பெயர் : ஜாக்சன் பாலக் , மறைந்த தேதி : ஆகஸ்ட் 11, 1894
ஒரு செல்வாக்குள்ள அமெரிக்க ஓவியர்
ஆவார். இவர் பண்பியல் வெளிப்பாட்டியக்
கலை இயக்கத்தில் முக்கியமான ஒருவராக
இருந்தார்.பல வண்ணங்களை பயன்படுத்தி
கோழி கிண்டுவது போல் கிறுக்கி ஒரு தத்ரூபமான
ஒவியத்தை உருவாக்குபவர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

பேஸ்புக்-ல் கடந்த ஆண்டு பேசியதை ஞாபகப்படுத்தும் துல்லியமான பயனுள்ள தளம். வீடு / அலுவலகத்தை அழகுபடுத்த உதவும் 100 பிராஜெக்ட் முழுமையான தகவல்களுடன் பயனுள்ள தளம்.

1 பின்னூட்டம் Add your own

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,748 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஓகஸ்ட் 2011
தி செ பு விய வெ ஞா
« ஜூலை   செப் »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: