Archive for ஜூலை, 2011
அனைவருக்கும் ஆன்லைன் மூலம் உதவும் மீடியா கன்வெர்டர் ( Media Converter ).
வீடியோ கோப்பாக இருக்கும் ஒரு ஃபார்மெட் -ஐ மற்றொரு ஃபார்மெட் ஆக மாற்ற எந்த மென்பொருள் உதவியும் இல்லாமல் ஆன்லைன் மூலம் சில நிமிடங்களில் மாற்றலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம்1
ஆன்லைன் வீடியோ கன்வெர்டர் என்று பல தளங்கள் இருந்தாலும் சில தளங்கள் குறிப்பிட்ட வீடியோ கோப்புகளை மட்டும் தான் மாற்றிக்கொடுக்கின்றன ஆனால் நாம் பார்க்க இருக்கும் இத்தளத்தில் அனைத்து வகையான வீடியோ கோப்புகளையும் எளிதாக அதுவும் சில நிமிடங்களில் மாற்றலாம்…
சற்று முன் மூன்று இடங்களில் மும்பை குண்டுவெடிப்பு – 2011 – கூகிளின் நெஞ்சம் நெகிழ வைத்த நேசக்கரம்.
மும்பையின் தென்பகுதியில் மூன்று இடங்களில் சக்தி வாய்ந்த தொடர் குண்டுவெடிப்பு சற்றுமுன் நடந்துள்ளது இதில் 21 பேர் பலியானதாகவும் 150 க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடனும் தாக்கப்பட்டுள்ளனர் , விபத்து ஏற்பட்டு சரியாக மூன்று மணி நேரத்திற்குள் கூகிள் செய்த நெஞ்சம் நெகிழ வைத்த உதவியைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
ஒரு பக்கம் கூகிள் வேண்டாம் பிரச்சினை அதிகம் என்று பல குரல்கள் வந்தாலும் ஆபத்து காலத்தில் உதவி செய்வதில் தனக்கு நிகராக யாரும் இல்லை என்று சொல்லாமல் சொல்கிறது கூகிள் , மும்பையில் மும்பா தேவி கோவில் அருகே உள்ள ஜாவேரி பஜார் மற்றும்
மத்திய மும்பை தாதர் பகுதியில் உள்ள அனுமன் கோவில் அருகில் மற்றும் சார்னி ரோட்டில் என்று தொடர்ச்சியாக மூன்று சக்திவாய்ந்த வெடிகுண்டு சற்று முன் வெடித்துள்ளது , இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்காக கூகிள் தன்னுடைய கூகிள் டாக்ஸ் -ல் ஒரு விஷேச spreadsheet உருவாக்கியுள்ளது…
Continue Reading ஜூலை 12, 2011 at 8:39 பிப 21 பின்னூட்டங்கள்
நம் குழந்தைகளை ஜீனியஸ் (Genius) ஆக மாற்ற உதவும் பயனுள்ள இலவசத் தளம்.
சிறு குழந்தைகள் முதல் மாணவர்கள் வரை அனைவரையும் அறிவு மேதைகளாக மாற்றுவதற்கு வசதியாக உள்ள திறமையான, புத்திசாலிதனத்தை வளர்க்க கூடிய கதைகளை ஆன்லைன் மூலம் இலவச புத்தகமாக மட்டுமில்லாமல் ஆடியோவுடன் படித்துக்கொண்டே கேட்பது போல ஒரு தளம் உருவாக்கப்பட்டுள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
குழந்தைகளின் அடிப்படை அறிவை நாம் சரியாக பயன்படுத்தும்படி அமைத்து விட்டால் கண்டிப்பாக அந்த குழந்தை ஒரு ஜீனியஸ் ஆக வரும் என்பதில் எவருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. புத்தகங்களை படிப்பது ஒருகலை தான் என்றாலும் அறிவுள்ள புத்தகங்களை ஆடியோவுடன் கேட்பது சில தளங்களில் மட்டுமே நமக்கு இலவசமாக கிடைக்கும் அந்த வகையில் அறிவுள்ள புத்தகங்களை ஆன்லைன் மூலம் காட்டியும் படித்துச் சொல்லவும் ஒரு தளம் உதவுகிறது…
வீடியோ சாட்டிங் ( Free Video Conferencing ) முகம் மட்டும் பார்த்து பேசலாம் புதுமையிலும் புதுமை.
வெளிநாட்டில் இருக்கும் நம் சொந்தங்களின் குரலை மட்டுமல்ல வீடியோவையும் நாம் பார்த்துக் கொண்டே பேசலாம், எந்த விளம்பர இடைஞ்சலும் இல்லாமல் நேரடியாகவும் வேகமாகவும் , முகம் மட்டும் பார்த்து வீடியோ சாட்டிங் செய்யும் வசதியும் கொண்டு ஒரு தளம் அறிமுகமாகி உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
வீடியோ சாட்டிங் செய்ய பல இணையதங்கள் இருக்கும் நிலையில் , பல வீடியோ சாட்டிங் செய்யும் இணையதளங்கள் தேவையில்லா விளம்பரங்களை கொடுத்து வெறுப்படையச் செய்துவிடுகின்றன, வீடியோ சாட்டிங்-ல் முதல் முறையாக முகம் மட்டும் பார்த்து சாட் செய்யும் சேவையை ஒரு தளம் எந்த விளம்பரமும் இல்லாமல்…
Continue Reading ஜூலை 10, 2011 at 5:40 முப பின்னூட்டமொன்றை இடுக
ஆன்லைன் மூலம் ஒரே நேரத்தில் இரண்டு கோப்புகள் சரியாக இருக்கிறதா என்று நொடியில் சரிபார்க்கலாம்.
இரண்டு தட்டச்சு கோப்புகள் வெவ்வேறு இடத்தில் இருந்து வருகிறது அல்லது நாம் ஏற்கனவே தட்டச்சு செய்த கோப்புக்கும் இப்போது மாற்றம் செய்த கோப்புக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்பதை நொடியில் ஆன்லைன் மூலம் அறிந்து கொள்ளலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
இரண்டு கோப்புகளில் என்ன வித்தியாசம் இருக்கிறது என்று அலுவகத்தில் நம்மை சரி பார்க்கக் கூறினால் நாம் பார்க்கும் போது இரண்டும் ஒரே மாதிரி தான் இருக்கும் ஆனாலும் சில வித்தியாசங்கள் இருக்கவே செய்யும் இது போன்ற வித்தியாசங்களை கண்டுபிடிப்பதற்காக பெருமளவு நேரத்தையும் காசு செலவு செய்து எந்த மென்பொருளையும் வாங்க வேண்டாம் ஆன்லைன் மூலம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது…
Continue Reading ஜூலை 9, 2011 at 2:55 முப பின்னூட்டமொன்றை இடுக
உங்கள் குழந்தைகளுக்கு செஸ்( சதுரங்கம் ) விளையாட்டை வீடியோவுடன் சொல்லி கொடுக்கும் தளம்.
ராஜாக்களின் விளையாட்டு என்று செல்லமாக அழைக்கப்படும் செஸ் விளையாட்டை குழந்தைகள் முதல் செஸ் விளையாட்டிற்கு புதியவர்கள் வரை அனைவருக்கும் எப்படி செஸ் விளையாட வேண்டும் என்று வீடியோவுடன் சொல்லிகொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
துருப்பிடித்து கிடக்கும் நம்முடைய மூளைக்கு வேலை கொடுப்பதற்கு மட்டுமல்ல , சிந்தனையை தூண்டும் ஒரு அரிய விளையாட்டான செஸ் விளையாட்டை எப்படி விளையாட வேண்டும் என்பதை குழந்தைகள் முதல் அனைவருக்கும் புரியும் வண்ணம் வீடியோவுடன் எடுத்துச் சொல்ல ஒரு தளம் உள்ளது …
உலக அளவில் இணையம் மூலம் தமிழ் வளர்க்கும் ” தமிழ் பாடநூல் ” பயனுள்ள தளம்.
யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது ? எங்கும் காணோம் என்று தமிழ் மொழியின் சிறப்பை எடுத்துக்கூறிய பாரதியின் கனவுப்படி தமிழ் மொழியை வளர்க்க உலகமெங்கும் பலர் இன்றும் தங்களால் இயன்ற பணியினை செய்து வருகின்றனர், அந்த வகையில் தமிழ் மொழியை ஆன்லைன் மூலம் கற்றுக்கொள்வதற்கு வசதியாக தமிழ் பாடநூல் என்று ஒரு தளம் இயங்குகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
தமிழ் மொழியைப்பற்றிய அறிமுகத்தில் இருந்து , தமிழில் மொத்தம் எத்தனை எழுத்துக்கள், அவற்றை எவ்வாறு உச்சரிக்க வேண்டும், காலம் மற்றும் வண்ணங்களை எப்படி உச்சரிக்க வேண்டும் தமிழை உலக மக்கள் அனைவரும் கற்றுக்கொள்ளும் பொருட்டு ஆங்கிலம் வழியாகவே முயற்சித்து இருப்பது மகிழ்சியான ஒன்று தான் இனி இத்தளம் செய்து வரும் சேவையைப்பற்றி பார்க்கலாம்…
Continue Reading ஜூலை 7, 2011 at 5:05 முப பின்னூட்டமொன்றை இடுக
நாம் செய்யும் பணிகளை எளிதாக புரியும் படி Virtual முறையில் அழகாகக் காட்டலாம்.
ஆன்லைன் மூலம் வேலை செய்து கொண்டிருப்பவர்கள் முதல் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் வரை அனைவரும் தாங்கள் சொல்ல வரும் கருத்தை நொடியில் Virtual முறையில் அணைவரும் புரியும் படி பகிர்ந்து கொள்ளலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
Virtual வரைபலகை என்பதன் மூலம் நாம் செய்யும் பிராஜெக்ட் மற்றும் நாம் எடுத்து வைக்கும் கருத்துக்களை அழகாக ஆன்லைன் மூலம் எளிதில் தனித்தனி வகையாக காட்டலாம் , நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
Continue Reading ஜூலை 6, 2011 at 12:45 பிப பின்னூட்டமொன்றை இடுக
நாம் விரும்பும் வண்ணத்தில் எந்த இணையதளத்தையும் மாற்றி பார்க்கலாம் புதுமையான தளம்.
தினமும் இணையதளம் படிக்கும் வாசகர்கள் பல பேர் இருக்கின்றனர் இவர்களில் சில பேர் சில இணையதளங்களின் வண்ணம் சரியாக இல்லையே என்று குறைபடுவதுண்டு இனி அந்த கவலை வேண்டாம் நமக்கு பிடித்த இணையதளத்தை நமக்கு பிடித்த வண்ணத்தில் மாற்றி படிக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
படம் 1
தினமும் பல்லாயிரக்கணக்கான இணையதளங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் சில தளங்கள் பார்ப்பதற்கு அழகாக தெரியும் அதில் இருப்பது போல் வண்ணம் நம் தளத்தில் அல்லது பார்த்துக் கொண்டிருக்கும் தளத்தில் தெரிந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணும் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது…