ஆன்லைன் மூலம் கோப்புகளை இலவசமாக பதிவேற்றவும் , தறவிரக்கம் செய்வதற்கு முன் பார்க்கவும் (View) உதவும் பயனுள்ள தளம்.
ஜூலை 21, 2011 at 1:03 முப பின்னூட்டமொன்றை இடுக
ஆன்லைன் மூலம் நம் கணினியில் இருக்கும் கோப்புகளை பதிவேற்றம் செய்வதற்கு பல இணையதளங்கள் உள்ள நிலையில் பதிவேற்றம் செய்த கோப்புகளை ஆன்லைன் மூலம் பார்த்து தேவையென்றால் மட்டுமே தறவிரக்க வசதி செய்து கொண்டு ஒரு தளம் வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
ஆன்லைன் மூலம் எல்லா வகையான கோப்புகளையும் எங்களிடம் இலவசமாக பதிவேற்றம் என்று சொல்லி பல இணையதளங்கள் வந்தாலும் பெரும்பாலான நேரங்களில் இப்படி இருக்கும் தளங்களில் இருந்து கோப்புகளை தறவிரக்கும் போது போன்ற கூடவே வைரஸ் அல்லது மால்வேரும் சேர்ந்தே வருகிறது, ஆனால் இன்று நாம் பார்க்க இருக்கும் தளத்தில் பதிவேற்றம் செய்த கோப்புகளை ஆன்லைன் மூலம் பார்த்து அதன் பின் தறவிரக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://dropdo.com

படம் 2
இத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டிபடி Upload a File என்பதை சொடுக்கி நாம் பதிவேற்றம் செய்யும் கோப்பை தேர்ந்தெடுக்கவும் அடுத்து நம் கோப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டு நமக்கு ஒரு URL முகவரி கிடைக்கும் நேரடியாக இந்த முகவரியை டிவிட்டர் , பேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், இந்த முகவரியை சொடுக்கியதும் படம் 2-ல் உள்ளது போல் காட்டப்படும் வலது பக்க ஓரத்தில் இருக்கும் Download என்ற பொத்தானை சொடுக்கி படத்தை தறவிரக்கலாம், Image, Doc, Code, PDF, Audio, Video, போன்ற கோப்புகளை ஆன்லைன் மூலம் பார்த்துவிட்டு தேவையென்றால் தறவிரக்கலாம். இத்தளத்தில் இலவச பயனாளர் கணக்கு உருவாக்கி பதிவேற்றம் செய்யப்படும் கோப்புகளை நீக்கும் உரிமையும் உண்டு. கண்டிப்பாக ஆன்லைன் மூலம் பல வகையான கோப்புகளை பதிவேற்றம் செய்ய விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி இன்றைய சிந்தனை குடிகாரர் தனக்கு மட்டுமல்ல தன்னை சுற்றி இருக்கும் அனைவருக்கும் துன்பத்தை கொடுக்கிறார்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.தமிழ் நாடகதலைமையாசிரியர் என்று அழைக்கப்பட்டவர் யார்? 2.1991-ல் ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் இந்தியப்பிரதமர் ? 3.மாநில வர்த்தக நிறுவனம் ( STC ) தொடங்கப்பட்ட ஆண்டு ? 4.நெல் அதிகமாக விளையும் மாவட்டம் ? 5.தமிழ்வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ? 6.பாண்டிய அரண்மனையில் இருந்த தலைமை தமிழ்ப்புலவர் யார் ? 7.தமிழ்நாடு சிறுதொழில்கள் நிறுவனம் (TANSI) தொடங்கப்பட்ட ஆண்டு ? 8.இருண்ட வீடு என்ற நூலின் ஆசிரியர் யார் ? 9.மதுரை நாயக்கர் வம்சத்தின் முதல் அரசன் யார் ? 10.தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்த முதலமைச்சர் யார் ? பதில்கள்: 1.சங்கரதாஸ் சுவாமிகள், 2.ராஜீவ் காந்தி, 3.1956, 4.தஞ்சாவூர் மாவட்டம், 5.1959, 6.நக்கீரர் , 7.1965, 8.பாரதிதாசன், 9.விஸ்வநாத நாயக்கர், 10.அறிஞர் அண்ணா.
இன்று ஜூலை 21
பெயர் : சிவாஜி கணேசன் , மறைந்ததேதி : ஜூலை 21, 2001 புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன் என்பது இவரது இயற்பெயர்.பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.நடிகர் திலகம் என்ற பெருமையை பெற்றவர்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: ஆன்லைன் மூலம் கோப்புகளை இணையத்தில் பாதுகாப்பாக சேமிக்க வழி., தறவிரக்கம் செய்வதற்கு முன் பார்க்கவும் (View) உதவும் பயனுள்ள தளம்..
Subscribe to the comments via RSS Feed