அனைத்து சாட்டிலைட் டிவி சேனல்களின் Frequency -ம் ஒரே இடத்தில் நொடியில் அறியலாம்.
ஜூலை 20, 2011 at 1:12 முப 6 பின்னூட்டங்கள்
சாட்டிலைட் டிஷ் கூடவே சாட்டிலைட் ரிசவரும் சேர்த்து வாங்கிய பின் எந்தெந்த சேனல்கள் எந்த அலைவரிசையில் தெரிகின்றது என்பதை ஒவ்வொரு தளமாகச் சென்று தேட வேண்டாம் ஒரே தளத்தில் இருந்து அத்தனை சாட்டிலைட் சானல்களின் அலைவரிசை எண்ணையும் அறியலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
தொலைகாட்சி நிகழ்சிகள் பெரும்பாலும் பலதரப்பட்ட மக்களை தன் பக்கம் வைத்திருக்கிறது பல நேரங்களில் நாம் தேடும் சானல்கள் கிடைப்பதில்லை இதற்கான அலைவரிசை எண் என்ற எங்கும் சென்று தேடாமல் ஒரே இடத்தில் உலகின் அனைத்து முக்கியமான சானல்கள்களின் அலைவரிசை எண்ணை கொடுக்கிறது ஒரு தளம்.
இணையதள முகவரி : http://www.lyngsat.com/freetv/India.html
இத்தளத்திற்கு சென்று நாம் எந்த நாட்டில் இருந்து ஒளிபரப்பாகும் சானல் பற்றிய விபரம் வேண்டுமோ அந்த நாட்டை தேர்ந்தெடுத்தால் போதும் அடுத்த சில நொடிகளில் குறிப்பிட்ட நாட்டில் இருந்து ஒளிபரப்பாகும் அத்தனை சானல்களும் அதற்கு உண்டான அலைவரிசை எண்ணுடன் நமக்கு காட்டப்படும் இதிலிருந்து நமக்குத் தேவையான சானல்களின் அலைவரிசை எண்ணை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.இதைத்தவிர குறிப்பிட்ட சாட்டிலைட் -ல் இருந்து ஒளிபரப்பாகும் சானல்களின் விபரங்களும் தெரிந்து கொள்ளலாம். கேபிள் டிவி வைத்து இருக்கும் நண்பர்களுக்கும் டிஷ் வைத்துக்கொண்டு இலவச சானல்களின் அலைவரிசை எண்ணை தேடிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி இன்றைய சிந்தனை அன்பான குழந்தை செல்வங்கள் இறைவன் நமக்கு கொடுத்த மிகப்பெரிய வரம்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.பனங்குடி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உள்ள மாவட்டம் ? 2.மலர்கள் உற்பத்தியில் புகழ்பெற்ற மாவட்டம் எது ? 3.தமிழக அரசு சென்னை வர்த்தக சபையை அமைத்த ஆண்டு ? 4.தமிழ்நாட்டில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அமைக்கப்பட்ட ஆண்டு ? 5.சங்க காலச் சோழர்களின் கடைசி அரசன் ? 6.வாஞ்சிநாதனுடன் தொடர்புடைய இடம் எது ? 7.மத்திய மின் வேதியல் ஆராய்ச்சி நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள இடம் எது ? 8.மருது சகோதரர்கள் ஆட்சி புரிந்த பாளையம் ? 9.தமிழ்நாடு சர்க்கரைக் கழகம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு ? 10.காந்தியின் மனசாட்சி என கூறப்பட்ட தமிழ்நாட்டு தலைவர் யார் ? பதில்கள்: 1.நாகப்பட்டிணம், 2.திண்டுக்கல், 3.1836, 4.1982, 5.கோச்செங்கட் சோழன், 6.மணியாட்சி , 7.காரைக்குடி, 8.சிவகங்கை , 9.1974, 10.இராஜாஜி.
இன்று ஜூலை 20
பெயர் : மார்க்கோனி, மறைந்ததேதி : ஜூலை 20, 1937 வானொலியைக் கண்டு பிடித்தவர். "வானொலியின் தந்தை" எனப்படுபவர்.1909-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர். கம்பியிலாத்தொலைத் தொடர்பில் ஆர்வம் ஏற்பட்டு ஆழ்ந்து ஆய்வுகள் செய்து வந்தார். இருபத்தி ஒன்றாம் வயதில் 1895 முதன் முதலில் ஓரிரு மைல் தூரத்தில் 'திசைதிரும்பும் மின்கம்பம் ' [Directional Antenna] மூலம் தொடர்பு ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றார்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: அனைத்து சாட்டிலைட் டிவி சேனல்களின் Frequency -ம் ஒரே இடத்தில் நொடியில் அறியலாம்..
1.
jebas | 1:54 முப இல் ஜூலை 26, 2011
http://www.satbeams.com
http://www.flysat.com
2.
winmani | 1:33 முப இல் ஜூலை 27, 2011
@ jebas
மிக்க நன்றி
3.
tamil stories in tamil | 6:50 முப இல் ஜூலை 26, 2011
அருமையான தகவல்கள்
4.
winmani | 1:33 முப இல் ஜூலை 27, 2011
@ tamil stories
மிக்க நன்றி
5.
kathijabanu | 6:43 பிப இல் ஜூலை 27, 2011
D.T.H ரிசீவரில் இந்த சானல்கள் எடுக்குமா?frequency மாற்றமாக உள்ளனவே?
6.
winmani | 1:38 முப இல் ஜூலை 28, 2011
@ kathijabanu
வீடியோகான் டிஷ் இல் வரும் சோதித்துப்பாருங்கள்.
மிக்க நன்றி.