பேஸ்புக் ( Facebook ) -ல் இனி எந்த விளம்பரமும் இல்லாமல் பார்க்கலாம் புதிய ட்ரிக்ஸ் ( Tricks ).
ஜூலை 19, 2011 at 11:36 பிப பின்னூட்டமொன்றை இடுக
சோசியல் நெட்வொர்க் தளமான Facebook -ல் வலது பக்கம் தெரியும் விளம்பரங்கள் பல நேரங்களில் நமக்கு சலிப்பை ஏற்படுத்தும் இந்தப்பிரச்சினையை நீக்கி பேஸ்புக் விளம்பரங்கள் இல்லாமல் பார்ப்பதற்கு ஒரு வழி உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
சமூக வலைத்தளங்களில் தனக்கென்று தனி இடத்துடன் வலம் வரும் பேஸ்புக் இணையதளத்தின் வலது பக்கம் இருக்கும் விளம்பரங்களை எளிதாக நீக்கலாம் நமக்கு உதவ ஒரு நீட்சி உள்ளது.
இணையதள முகவரி : https://chrome.google.com/webstore/detail/eommhojjeeaapcofdjleiamnokcfdnna?hl=en#

படம் 2
குரோம் உலாவியில் மேலே குறிப்பிட்டிருக்கும் பக்கத்திற்கு சென்று Install என்ற பொத்தானை சொடுக்கி குரோம் உலாவியில் எளிதாக நிறுவலாம், இனி நாம் பேஸ்புக் இணையதளத்தை திறந்தால் வலது பக்கம் எந்த விளம்பரமும் நமக்கு தெரிவதில்லை , பேஸ்புக் -ல் சில சமயங்களில் தேவையில்லாத விளம்பரங்கள் வந்து நம் கவனத்தை திருப்பும் ஆனால் இனி எந்த விளம்பர தொந்தரவும் இல்லாமல் பேஸ்புக் இணையதளத்தை பயன்படுத்தலாம். முழுமையாக விளம்பரங்களை தடை செய்தால் பல நேரங்களில் சில இணையப்பக்கங்கள் தெரிவதில்லை, ஆனால் இப்போது நாம் பயன்படுத்தி கொண்டிருக்கும் விளம்பரம் தடுப்பு பேஸ்புக் இணையதளத்திற்கு மட்டுமே பொருந்தும்.
வின்மணி இன்றைய சிந்தனை காலம் எத்தனை நாட்கள் மனிதனை சோதிக்கிறதோ, அத்தனை நாட்களும் வாய்ப்பை நமக்காக அள்ளிக் கொடுக்கும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.இந்திய சிப்பாய் கலகத்திற்கு முன்னோடி கலகம் என்று கூறப்படும் கலகம் எது ? 2.இந்தியாவில் மிகப்பெரிய தொழிற்பேட்டை உள்ள இடம் எது ? 3.அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகம் உள்ள இடம் எது ? 4.தமிழ்நாட்டில் உள்ள மொத்த சிமெண்ட் ஆலைகள் ? 5.தமிழ்நாட்டில் கணினிமயமாக்கப்பட்ட முதல் மாவட்டம் ? 6.பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள் காணப்படும் மாவட்டம் எது ? 7.தமிழக மகளிர் ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு ? 8.குதிரைப் பந்தையம் தமிழ்நாட்டில் நடக்கும் இடங்கள் ? 9.தமிழ்நாட்டின் மிக உயர்ந்த அரசு கட்டிடம் எது ? 10.ஏலகிரி மலை அமைந்துள்ள மாவட்டம் எது ? பதில்கள்: 1.வேலூர் கலகம், 2.அம்பத்தூர், 3.சென்னை, 4.13, 5.திருவாரூர், 6.கடலூர், 7.1990, 8.சென்னை , ஊட்டி, 9.எல்.ஐ.சி ( சென்னை), 10.வேலூர்.
இன்று ஜூலை 19
பெயர் : ஆதவன், மறைந்ததேதி : ஜூலை 19, 1987 1960-களில் எழுதத் துவங்கி, தமிழ் சிறுகதை உலகில் பல குறிப்பிடத் தக்க சாதனைகளை நிகழ்த்தியவர். இந்திய இரயில்வேயில் சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, டெல்லியில் உள்ள 'நேஷனல் புக் டிரஸ்டின்' தமிழ்ப் பிரிவின் துணையாசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். மரணத்திற்கு பின் 1987ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடெமி விருதினை அவருடைய "முதலில் இரவு வரும்" என்ற சிறுகதைக்காக வழங்கியது.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: பேஸ்புக் ( Facebook ) -ல் இனி எந்த விளம்பரமும் இல்லாமல் பார்க்கலாம் புதிய ட்ரிக்ஸ.
Subscribe to the comments via RSS Feed