ஐபோன், ஆண்டிராய்டு போனில் வாய்ஸ்மெயிலை படிக்கக்கூடிய செய்தியாக மாற்றும் Yap.
ஜூலை 15, 2011 at 2:28 பிப பின்னூட்டமொன்றை இடுக
ஐபோன் மற்றும் ஆண்டிராய்டு போன் தற்போது அனைத்து மக்களிடமும் பிரபலமாகி வருகிறது. சேவைகளுக்காக பலவிதமான அப்ளிகேசன்கள் நாளும் வந்த வண்ணம் உள்ளது இதில் வாய்ஸ்மெயிலை (Voice Mail ) -ஐ படிக்க்கக்கூடிய ( Readable Text ) ஆக மாற்றிக்கொடுக்க YAP Voicemail என்ற அப்ளிகேசன் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
தட்டச்சு செய்ய நேரம் இல்லாத நிலையில் நாம் சொல்ல வேண்டிய செய்தியை வாய்ஸ்மெயில் ஆக மாற்றி அனுப்புவோம் , இப்படி நாம் அனுப்பும் மற்றும் பெறும் வாய்ஸ்மெயில் செய்தியை படிக்கக்கூடிய செய்தியாக மாற்றத் தான் இந்த YAP அப்ளிகேசன் உதவுகிறது.
YAP Voice mail தறவிரக்க முகவரி : http://yapinc.com/voicemail.html

படம் 2
இத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி ஐபோனில் வேண்டும் என்றால் Available on the App Store என்பதிலும் ஆண்டிராய்டு என்பதில் வேண்டும் என்றால் Available on the Android Market என்பதையும் சொடுக்கி Yap Voicemail நிறுவலாம். இனி உங்களுக்கு இதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற கடினம் இல்லாமல் நமக்கு வரும் ஆடியோ செய்தியை அப்படியே டெக்ஸ்ட் செய்தியாக இந்த அப்ளிகேசன் மாற்றிக் கொடுக்கிறது. வாய்ஸ்மெயிலை படிக்கக்கூடிய செய்தியாக மாற்ற விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
நாம் உருவாக்கிய Ebook, Tutorial, Mp3 -ஐ ஆன்லைன் மூலம் விற்கலாம்.
நாம் வரையும் படங்களை ஆன்லைன் மூலம் டிவிட்டரில் பகிர்ந்து கொள்ள.
ஆங்கில சொல்வளத்தை அதிகரிக்கும் ஆன்லைன் விளையாட்டு.
அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஆன்லைன் கிரெடிட் கார்டு பாதுகாப்பு வழிமுறைகள் ஸ்பெஷல் ரிப்போர்ட்
வின்மணி இன்றைய சிந்தனை உள் அறிவு பெற்ற மக்கள் பணத்தை தேடிச்செல்வதில்லை , ஞானத்தை தேடி செல்கின்றனர்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.தமிழ்நாட்டில் பெண் போலீஸ் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு? 2.சென்னை மாகானத்தில் முதல் பொதுத்தேர்தல் நடந்த ஆண்டு? 3.தமிழ் உரையில் தந்தை எனப்பாராட்டப்படுபவர் யார் ? 4.காங்கிரஸின் கடைசி முதலமைச்சர் பக்தவச்சலம் மரணம் அடைந்த ஆண்டு ? 5.முதல் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற வருடம் எது ? 6.சென்னைக் கலகம் ஏற்பட்ட ஆண்டு ? 7.எட்டாவது தமிழ் உலக மாநாட்டை தொடங்கி வைத்தவர் யார்? 8.வந்தவாசி போர் நடந்த ஆண்டு ? 9.காமராசர் இயற்கை ஏய்திய ஆண்டு ? 10.வேலூர் கலகம் ஏற்பட்ட ஆண்டு ? பதில்கள்: 1.1972, 2.1920, 3.வீரமாமுனிவர், 4.1987, 5.கோலாலம்பூர் ( மலேசியா ), 6.1809, 7.பி.வி.நரசிம்மராவ் ,8.1758, 9.1975, 10.1806.
இன்று ஜூலை 15
பெயர் : காமராஜர் , பிறந்ததேதி : ஜூலை 15, 1903 காமராசர் தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் ஆவார். 1954 ஆம் ஆண்டு் அப்போதைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் ஆனார். இவர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராஜ் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை. உங்களால் தேசத்திற்கு பெருமை.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: ஆண்டிராய்டு போனில் வாய்ஸ்மெயிலை படிக்கக்கூடிய செய்தியாக மாற்றும் Yap., ஐபோன்.
Subscribe to the comments via RSS Feed