குழந்தையின் ஓவ்வொரு அழகான தருனங்களையும் டிஜிட்டல் முறையில் அழகாக சேமிக்கலாம்.
ஜூலை 14, 2011 at 1:58 பிப பின்னூட்டமொன்றை இடுக
நம் சுட்டி குழந்தைகள் பிறந்தது முதல் அது செய்யும் ஓவ்வொரு அழகான தருனங்களையும் ஆன்லைன் மூலம் எளிதாக இலவசமாக சேமிக்கலாம், புகைப்படங்களை மட்டும் சேமித்து வைத்துக்கொள்வதை விட குழந்தை செய்யும் செய்லை, வார்த்தைகளாகவும் சேமித்து வைக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
குழந்தைகளுடன் விளையாடுவது அவர்கள் செய்யும் செயல்களை ஊக்குவிப்பது அறிவை வளர்ப்பது , இன்னும் சொல்லிக்கொண்டே போகலம் ஆனால் இதையும் தாண்டி குழந்தைகள் செய்யும் சுட்டித் தனங்களை நாம் அவர்களுக்காக செய்த ஒவ்வொரு நிகழ்வையும் டிஜிட்டல் முறையில் ஆன்லைன் மூலம் சேமிக்கலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.keepaboo.com
குழந்தைகள் பிறந்த நாள் முதல் ஒவ்வொரு நாளும் நடக்கும் நிகழ்ச்சிகளை அழகாக புகைப்படத்துடன் டிஜிட்டல் முறையில் சேமிக்கலாம், இத்தளத்திற்கு சென்று Join Free என்ற பொத்தானை சொடுக்கி புதிதாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கி நம் குழந்தைகளின் பெயர் வைக்கும் நாட்கள் முதல் அனைத்து அழகான தருனங்களை புகைப்படத்துடன் சேமிக்கலாம், குழந்தை பெரியவனான வளர்ந்த பின் தன் தாய் தந்தை தன்னை எப்படி எல்லாம் பார்த்துக்கொண்டனர் என்பதை கதையாக சொல்வதைவிட இப்படி ஒரு அழகான டிஜிட்டல் டைரியாக கொடுத்தால் என்றும் அழியாத நிகழ்வாக இருக்கும் , இத்தளத்தில் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது, கண்டிப்பாக தன் குழந்தைகளின் அழகான தருனங்களை டிஜிட்டலாக மாற்ற விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
குழந்தைகளுக்கு கணித அறிவை வளர்க்கும் விளையாட்டுகள்
இரண்டு வயது குழந்தை ஐபேட் பயன்படுத்தும் விநோத விடியோ.
பள்ளிக்குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவரின் அறிவு பசி போக்கும் இடம்.
குழந்தைகளின் அறிவை வளர்க்கும் இபுத்தகங்கள் ஆடியோவுடன் புதுமை
வின்மணி இன்றைய சிந்தனை உதவும் எண்ணம் இருக்கும் ஒவ்வொருவருமே இறைவனின் படைப்பில் உயர்ந்தவர்கள் தான்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.மதுக்கரை என்ற இடம் சிறப்பிற்குக் காரணம் ? 2.கோயம்பேடு பேருந்து நிலையம் தொடங்கப்பட்ட ஆண்டு ? 3.தமிழ்நாட்டில் வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு ? 4.முண்டந்துறையில் முக்கியப் புகழ்பெற்ற விலங்கு எது ? 5.தமிழ்நாட்டில் நெசவாளர்களின் வீடு என அழைக்கப்படுவது ? 6.தமிழ் தேசியக்கவிஞர் பாரதிதாசனின் இயற்பெயர் என்ன ? 7.அலுமினியத்தின் தாதுவான பாக்சைட் கிடைக்கும் மலைப்பகுதி எது ? 8.கண்ணதாசனின் இயற்பெயர் என்ன ? 9.வேல்ஸ் இளவரசர் சென்னைக்கு விஜயம் செய்த ஆண்டு ? 10.காவேரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பின் படி தமிழ்நாட்டிற்கு திறந்து விடப்பம் நீரீன் அளவு ? பதில்கள்: 1.சிமெண்ட் தொழிற்சாலை,2.2003, 3.1971, 4.புலிகள், 5.கரூர் , 6.சுப்புரத்தினம், 7.கொல்லிமலை,8.முத்தையா, 9.1922,ஜனவரி 12, 10. 419 டிஎம்சி.
இன்று ஜூலை 14
பெயர் : வோல் சொயிங்கா, மறைந்ததேதி : ஜூலை 14, 2008 இவர் டோக்கியோவில் பிறந்த மொழியியல் ஆராய்ச்சி நிபுணர். இவர் பழங்கால ஜப்பானிய மற்றும் தமிழ் மொழி ஆகியவற்றை ஆராய்ந்து அவற்றிற்கிடையேயான ஒற்றுமைகளை வெளிக் கொணர்ந்தவர்.1943ம் ஆண்டில் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர் டோக்கியோவில் கக்குசியூவின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார்.1999 இல் இவர் வெளியிட்ட ஜப்பான் மொழி பற்றிய ஆய்வு நூல் 2 மில்லியன் பிரதிகள் விற்பனையாகின.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: குழந்தையின் ஓவ்வொரு அழகான தருனங்களையும் டிஜிட்டல் முறையில் அழகாக சேமிக்.
Subscribe to the comments via RSS Feed