சற்று முன் மூன்று இடங்களில் மும்பை குண்டுவெடிப்பு – 2011 – கூகிளின் நெஞ்சம் நெகிழ வைத்த நேசக்கரம்.

ஜூலை 12, 2011 at 8:39 பிப 21 பின்னூட்டங்கள்

மும்பையின் தென்பகுதியில் மூன்று இடங்களில் சக்தி வாய்ந்த தொடர் குண்டுவெடிப்பு சற்றுமுன் நடந்துள்ளது  இதில் 21 பேர் பலியானதாகவும் 150 க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடனும் தாக்கப்பட்டுள்ளனர் , விபத்து ஏற்பட்டு சரியாக மூன்று மணி நேரத்திற்குள் கூகிள் செய்த நெஞ்சம் நெகிழ வைத்த உதவியைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

ஒரு பக்கம் கூகிள் வேண்டாம் பிரச்சினை அதிகம் என்று பல குரல்கள் வந்தாலும் ஆபத்து காலத்தில் உதவி செய்வதில் தனக்கு நிகராக யாரும் இல்லை என்று சொல்லாமல் சொல்கிறது கூகிள் , மும்பையில் மும்பா தேவி கோவில் அருகே உள்ள ஜாவேரி பஜார் மற்றும்
மத்திய மும்பை தாதர் பகுதியில் உள்ள அனுமன் கோவில் அருகில் மற்றும் சார்னி  ரோட்டில் என்று தொடர்ச்சியாக மூன்று சக்திவாய்ந்த வெடிகுண்டு  சற்று முன் வெடித்துள்ளது , இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்காக கூகிள் தன்னுடைய  கூகிள் டாக்ஸ் -ல் ஒரு விஷேச  spreadsheet உருவாக்கியுள்ளது.

முகவரி :  – https://spreadsheets.google.com/spreadsheet/ccc?hl=en_US&key=tE-okpwwYgQavia5opgZSEA&pli=1#gid=0

கூகிள் உதவி

இந்த முகவரியைச் சொடுக்கி கூகிள் spreadsheet -ல் எந்தப்பயனாளர் கணக்கும் இல்லாமல் நுழையலாம் , இங்கு  blood types ,  #here2help ,  #needhelp,  Blood group, Missing, and  Injured என்ற தலைப்புகளில் இரத்தம் தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை , எந்த  வகை இரத்தம் அதிகம் தேவைப்படுகிறது , இடம் மாறிய மக்களின் தகவல்கள் , உதவி  தேவைப்படுபவர்களின் தகவல்கள் , விபத்தில் காணமல் போனவர்கள் பற்றிய தகவல் மற்றும் அவர்கள் இருக்கும் இடம் , அடையாளங்கள் என அனைத்தையும் தனித்தனி tab ஆக கொடுத்து பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உதவி செய்து இருக்கிறது.

படம் 2

படம் 3

படங்கள் : நன்றி Oneindia

மும்பை விபத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மக்களும் கூகிளின் இந்த சேவையைப் பயன்படுத்தி தங்களைப்பற்றிய விபரங்கள் , இருக்கும் இடங்கள் என அனைத்தையும் பகிர்ந்து வருகின்றனர்,  கூகிளின் இந்த சேவை மூலம் உடனடியாக இரத்தம் மற்றும் பாதிக்கபப்ட்டவர்களின் தகவல்கள், அவர்களின் உறவினர்களுக்கு வேகமாக அளிக்கப்பட்டு வருகிறது, அனைத்து இந்திய மக்களின்  சார்பிலும் உடனடியாக கூகிள் செய்த இந்த உதவிக்கு நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம், பாதிக்கபப்ட்ட நம் சகோதரர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், கூகிள் உதவி. Tags: .

நம் குழந்தைகளை ஜீனியஸ் (Genius) ஆக மாற்ற உதவும் பயனுள்ள இலவசத் தளம். அனைவருக்கும் ஆன்லைன் மூலம் உதவும் மீடியா கன்வெர்டர் ( Media Converter ).

21 பின்னூட்டங்கள் Add your own

 • 1. சிவ. சி. மா. ஜானகிராமன்  |  5:45 முப இல் ஜூலை 14, 2011

  இந்த விபத்தில் இறந்தவர்களுக்காக இறைவனை பிரார்த்திக்கிறேன்..

  மத்திய அரசு செத்துப் போய் பலநாள் ஆகிவிட்டது.
  விரைவில் ஒரு மாற்றம் வேண்டும் எனவும்
  இறைவனை வேண்டுகிறேன்..

  கூகிளின் மனித நேயத்திற்கு தலை சாய்க்கிறேன்.
  இத் தகவலை உடனடியாகத் தந்த வின்மணிக்கும்

  நன்றிகளும்.. வாழ்த்துக்களும்.

  சிவயசிவ

  மறுமொழி
  • 2. winmani  |  6:27 பிப இல் ஜூலை 14, 2011

   @ சிவ. சி. மா. ஜானகிராமன்
   மிக்க நன்றி

   மறுமொழி
 • 3. N.Rathna Vel  |  6:52 முப இல் ஜூலை 14, 2011

  இந்த வெடிகுண்டுகளுக்கு விடிவே கிடையாதா?
  ஆழ்ந்த அனுதாபங்கள்.

  மறுமொழி
 • 5. neechalkaran  |  9:54 முப இல் ஜூலை 14, 2011

  நண்பரே,
  இது கூகுளின் முயற்சி அல்ல nitin sagar என்கிற தனி நபரின் முயற்சி எனத் தெரிகிறது

  மறுமொழி
  • 6. winmani  |  7:23 பிப இல் ஜூலை 15, 2011

   @ neechalkaran
   சரி தான் நண்பரே, nitin sagar என்கிற தனி நபரின் முயற்சி
   மிக்க நன்றி.

   மறுமொழி
 • 7. MURALI  |  10:06 முப இல் ஜூலை 14, 2011

  அருமையான தகவல்கள். தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி! அண்ணா

  மறுமொழி
 • 9. shafi8466en  |  11:11 முப இல் ஜூலை 14, 2011

  சார் ஆன்லைன் மூலம் விளம்பரங்களை கிளிக் செய்து சம்பாதிப்பது பற்றி ஒரு பதிவு போடுங்கள். இந்தியாவில் பல காலேஜ் மாணவர்கள் பார்ட் டைமாக இதை செய்துவருகிறார்கள். அவர்களுக்கு பயன்படும்.

  மறுமொழி
  • 10. winmani  |  6:39 பிப இல் ஜூலை 14, 2011

   @ shafi8466en
   விரைவில் இதைப்பற்றி ஒரு முழுமையான பதிவு கொடுக்க முயற்சிக்கிறோம்.
   நன்றி

   மறுமொழி
 • 11. tamilpadaipugal  |  11:06 பிப இல் ஜூலை 14, 2011

  Nice Blog….

  மறுமொழி
 • 12. Life Direction Network  |  11:08 பிப இல் ஜூலை 14, 2011

  நெஞ்சம் இல்லாதவர்களின் செயல்களினால் , கூகிளின் நெஞ்சம் நெகிழ வைத்த நேசக்கரம் பாதிக்கபட்டவர்களை அரவணைத்து ஆறுதல் படுத்துவது நமக்கும் ஆறுதலை கொடுக்கின்றது, தகவலுக்கு நன்றி.

  மறுமொழி
  • 13. winmani  |  6:22 பிப இல் ஜூலை 15, 2011

   @ Life Direction Network
   மிக்க நன்றி

   மறுமொழி
 • 14. krishnamoorthy.s  |  2:58 பிப இல் ஜூலை 15, 2011

  மிகச் சிறந்த சேவை கூகிளுக்கு நன்றி

  மறுமொழி
 • 16. cybersimman  |  5:02 பிப இல் ஜூலை 15, 2011

  நண்பருக்கு ,ஒரு திருத்தம்.இந்த நல் முயற்சியை துவக்கியது கூகுல் அல்ல .நிதின் சாகர் என்னும் டிவிட்டர் பயனாளி தான் இதனை துவக்கினார்.கூகுல் டாக் சேவையை பயன்ப்டுத்தி அமைக்கபட்ட இந்த ஸ்பெரெட் ஷீட் அத‌ன் பணி முடிந்துவிட்ட்டதால் இப்போது மூடப்பட்டு விட்டது.

  அன்புடன் சிம்மன்

  மறுமொழி
  • 17. winmani  |  6:39 பிப இல் ஜூலை 15, 2011

   @ cybersimman
   மிக்க நன்றி நண்பரே

   மறுமொழி
  • 18. winmani  |  7:24 பிப இல் ஜூலை 15, 2011

   @ cybersimman
   ஆம் சரி தான் நண்பரே.
   மிக்க நன்றி

   மறுமொழி
 • 19. Mohamed Caseen  |  12:20 பிப இல் ஜூலை 18, 2011

  உங்கள் பதிவுகள் அனைத்தும் வரவேற்க தக்கவை, உங்கள் சேவை மேலும் தொடரட்டும், AutoCAD, 3Ds Max இலவச மின்னூல் பதிவிறக்கம் செய்யக்கூடிய இணையதளம் இருந்தால் தயவு செய்து உங்கள் அடுத்த பதிவில் சேர்த்துக்கொள்ளுங்கள்..

  மறுமொழி
  • 20. winmani  |  7:42 முப இல் ஜூலை 20, 2011

   @ Mohamed Caseen
   விரைவில் தெரியப்படுத்துகிறோம்
   மிக்க நன்றி

   மறுமொழி
 • 21. thotavasu  |  4:28 முப இல் ஓகஸ்ட் 2, 2011

  YOUR WORK IS VERY GOOD .
  I NEED YOUR HELP .I WANT TO DOWNLOAD OR CAPTURE TV PROGRAM -MARUTHVAM,ASTROLOGY ETC . MAY I KNOW HOW TO DO THIS.
  -THOTAVASU

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,744 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜூலை 2011
தி செ பு விய வெ ஞா
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: