நம் குழந்தைகளை ஜீனியஸ் (Genius) ஆக மாற்ற உதவும் பயனுள்ள இலவசத் தளம்.

ஜூலை 11, 2011 at 4:59 முப 2 பின்னூட்டங்கள்

சிறு குழந்தைகள் முதல் மாணவர்கள் வரை அனைவரையும் அறிவு மேதைகளாக மாற்றுவதற்கு வசதியாக உள்ள திறமையான, புத்திசாலிதனத்தை வளர்க்க கூடிய கதைகளை ஆன்லைன் மூலம் இலவச புத்தகமாக மட்டுமில்லாமல் ஆடியோவுடன்  படித்துக்கொண்டே கேட்பது போல ஒரு தளம் உருவாக்கப்பட்டுள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

குழந்தைகளின் அடிப்படை அறிவை நாம் சரியாக பயன்படுத்தும்படி அமைத்து விட்டால் கண்டிப்பாக அந்த குழந்தை ஒரு ஜீனியஸ் ஆக வரும் என்பதில் எவருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. புத்தகங்களை படிப்பது ஒருகலை தான் என்றாலும் அறிவுள்ள  புத்தகங்களை  ஆடியோவுடன் கேட்பது சில தளங்களில் மட்டுமே நமக்கு இலவசமாக கிடைக்கும் அந்த வகையில் அறிவுள்ள  புத்தகங்களை ஆன்லைன் மூலம் காட்டியும் படித்துச் சொல்லவும் ஒரு தளம் உதவுகிறது.

இணையதள முகவரி : http://meegenius.com

படம் 2

இத்தளத்திற்கு சென்று நம் குழந்தைகளின் அறிவுப்பசிக்கு சரியான விருந்து அளிக்கும் வகையில் பல வகையான அறிவை வளர்க்கும் இலவச புத்தகங்கள் ( Free books ) கிடைக்கிறது , இதில் எந்த புத்தகத்தை படிக்க வேண்டுமோ அந்த புத்தகத்தை சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் நாம் தேர்ந்தெடுத்த புத்தகத்தில் ஒவ்வொரு பக்கமாக படத்துடனும் ஆடியோவுடனும் சொல்கின்றனர், காதால் கேட்டுக்கொண்டே படிப்பதால் ஆங்கில வார்த்தைகளை எப்படி உச்சரிக்க வேண்டும் என்றும் குழந்தைகள் எளிதாக புரிந்து கொள்ளலாம்,  எளிமையான ஆங்கில வார்த்தைகள் அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் அனைத்து புத்தகங்களும் உள்ளது, தினமும் ஒரு புத்தகம் என்று நம் குழந்தைகள் படித்தால் கூட மூன்று மாதத்தில் அவர்கள் கண்டிப்பாக  ஜீனியஸ் தான் முயற்சித்து பாருங்கள், நம் அனைத்து செல்ல குழந்தைகளுக்கும் இந்தப்பதிவை எடுத்துச்செல்லும் பொறுப்பை உங்களிடம் ஓப்படைக்கிறோம்.
கண்டிப்பாக இந்தப்பதிவு குழந்தைகளுக்கு மட்டுமின்றி ஆங்கில உச்சரிப்பை கற்பவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

நம் செல்லக் குழந்தைள் கணினியில் ஒவியத்திறமையை வளர்க்க உதவும் மென்பொருள்.

உலக அளவில் பல்வேறு வரலாற்று தகவகல்களையும், குழந்தைகளின் நற்செயல்களையும் ஊக்குவிக்கும் பயனுள்ள தளம்.

நம் செல்லக்குழந்தைகளின் அறிவை வளர்க்கும் ஆன்லைன் நூலகம்.

குழந்தைகள் வண்ணம் பூச இலவசமாக படம் கொடுக்கும் புதிய தளம்.

 
வின்மணி இன்றைய சிந்தனை
அறிவு ஒன்று தான் எல்லோராலும் மதிக்கப்பட கூடியது ,
அறிவைத் தேடி தெரிந்து கொள்ள வேண்டும்.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4 
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.தமிழ் நூல்களில் காஞ்சிபுரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
2.”குடிமக்கள் காப்பியம் “  என்று அழைக்கப்படும் நூல் எது ?
3.சென்னை சுதேசி சங்கம் தொடங்கப்பட்ட ஆண்டு ?
4.வ.உ.சிதம்பரனாரின் அரசியல் குரு யார் ?
5.நியமன உறுப்பினர்களுடன் சேர்த்து தமிழக சட்டப் பேரவை
  உறுப்பினர்களின் எண்ணிக்கை ?
6.கண்ணன் பாட்டு மற்றும் குயில் பாட்டு என்ற நூலின் 
 ஆசிரியர் யார் ?
7.அப்பர் என்று அழைக்கப்படும் சைவ நாயன்மார் யார் ? 
8.இந்தி எதிர்ப்பு முதல் மாநாடு தமிழ்நாட்டில் நடந்த ஆண்டு ?
9.சென்னையில் உலகத்தமிழ் ஆராய்சி நிறுவனம் 
 ஏற்படுத்தப்பட்ட ஆண்டு ?
10.சென்னை சென்டரல் இரயில் நிலையம் தொடங்கப்பட்ட
  ஆண்டு ?
பதில்கள்:
1.கச்சி மாநகர், 2.சிலப்பதிகாரம் , 3.1852, 4.பாலகங்காதர
திலகர், 5.235, 6.பாரதியார்,  7.திருநாவுக்கரசர் ,8.1937, 
9.1970,  10.1873.

 

இன்று ஜூலை 11

ஜூலை 11, 1987 ,
உலக மக்கள் தொகை நாள்
உலக மக்கள் தொகை நாள் என்பது
ஆண்டுதோறும் ஜூலை 11 மக்கள் தொகை
குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில்
மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு
முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால்
கொண்டாடப்பட்டு வருகிறது. 1987 ஆம் ஆண்டில்
இதே நாளிலேயே உலக மக்கள் தொகை ஐந்து
பில்லியனைத் தாண்டியது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

வீடியோ சாட்டிங் ( Free Video Conferencing ) முகம் மட்டும் பார்த்து பேசலாம் புதுமையிலும் புதுமை. சற்று முன் மூன்று இடங்களில் மும்பை குண்டுவெடிப்பு – 2011 – கூகிளின் நெஞ்சம் நெகிழ வைத்த நேசக்கரம்.

2 பின்னூட்டங்கள் Add your own

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,745 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜூலை 2011
தி செ பு விய வெ ஞா
« ஜூன்   ஆக »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: