உலக அளவில் இணையம் மூலம் தமிழ் வளர்க்கும் ” தமிழ் பாடநூல் ” பயனுள்ள தளம்.

ஜூலை 7, 2011 at 5:05 முப பின்னூட்டமொன்றை இடுக

யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது ? எங்கும் காணோம் என்று தமிழ் மொழியின் சிறப்பை எடுத்துக்கூறிய பாரதியின் கனவுப்படி தமிழ் மொழியை வளர்க்க உலகமெங்கும் பலர் இன்றும் தங்களால் இயன்ற பணியினை செய்து வருகின்றனர், அந்த வகையில் தமிழ் மொழியை ஆன்லைன் மூலம் கற்றுக்கொள்வதற்கு வசதியாக தமிழ் பாடநூல் என்று ஒரு தளம் இயங்குகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

தமிழ் மொழியைப்பற்றிய அறிமுகத்தில் இருந்து , தமிழில் மொத்தம் எத்தனை எழுத்துக்கள்,  அவற்றை எவ்வாறு உச்சரிக்க வேண்டும், காலம் மற்றும் வண்ணங்களை எப்படி உச்சரிக்க  வேண்டும் தமிழை உலக மக்கள் அனைவரும் கற்றுக்கொள்ளும் பொருட்டு ஆங்கிலம்  வழியாகவே முயற்சித்து இருப்பது மகிழ்சியான ஒன்று தான் இனி இத்தளம் செய்து வரும் சேவையைப்பற்றி பார்க்கலாம்.

இணையதள முகவரி : http://www.unc.edu/~echeran/paadanool/unicode/

தமிழ்மொழியை கற்றுக்கொள்ள வேண்டுமா மூன்று பாடம் இலவசம் அப்புறம் காசு கொடுத்து படித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லும் தளங்களுக்கு மத்தியில் தமிழை இலவசமாக வீட்டில் இருந்தபடியே முழுமையாக படிக்கலாம் என்று சொல்லி இத்தளம்  அனைவரையும் அழைக்கிறது. தமிழின் அடிப்படையான இலக்கணம் முதல் தமிழின் வார்த்தைகள் எங்கெல்லாம் எப்படி  பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை ஒவ்வொரு பாடமாக கொடுத்து நம் தமிழ் புலமையை வளர்க்கிறது. தமிழ் மொழியைப்பற்றிய முழுமையான ஆய்வு செய்து ஓவ்வொரு பகுதியாக  உருவாக்கியுள்ளனர். மற்ற மொழியினரும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம்  அழகான ஆங்கிலத்தில் விளக்கம் கூறி இருப்பது மேலும் சிறப்பு. இளங்கோ சேரன் என்பவர் 2004 -ம் ஆண்டு உருவாக்கிய இத்தளம் இன்றும் தமிழின் சுவையை அள்ளிக்கொடுத்து கொண்டிருப்பது தான் இத்தளத்தின் சிறப்பு. தமிழ் மேல் காதல் கொண்ட அனைவருக்கும்  தமிழ் வளர்க்க நினைப்பவர்களுக்கும் இத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.

புகைப்படத்தின் எழுத்தை படிக்கும் கூகுளின் புதிய காகிளஸ்

உங்கள் இணையதளத்திற்கு இணையான சங்கீதம் ஆன்லைன் -ல்

ஆங்கில பாடங்களை ஞாபகம் வைக்க புதுமையான வழி

ஹக்கர்களின் அட்டகாசம் யூடியுப்யையும் விடவில்லை.

 
வின்மணி இன்றைய சிந்தனை
சிலை முழுமை அடையும் நேரத்தில் தான் வலி அதிகமாக
இருக்கும் மனிதன் முழுமை அடையும் நேரத்தில் சோதனை
அதிகமாக இருக்கும்.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4 
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.தமிழ்நாட்டில் பெண்கள் எழுத்தறிவு விகிதம் என்ன ?
2.தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார் ?
3.’ஒர் இரவு ‘ என்ற நாடகத்தின் ஆசிரியர் யார் ?
4.ஆண் - பெண் விகிதம் அதிகமாக உள்ள மாவட்டம் எது ?
5.பல்லவர்களின் கோவில்கள் எங்குள்ளது ?
6.தமிழ்நாட்டில் பாயும் மிக நீளமான ஆறு எது ?
7.நேரு உள்விளையாட்டு அரங்கம் உள்ள இடம் எது ?
8.திருச்சி எந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது ?
9.ஆண் - பெண் விகிதம் குறைவாக உள்ள மாவட்டம் எது ?
10.தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு?
பதில்கள்
1.64.4%, 2.முத்துலெட்சுமி ரெட்டி, 3.அறிஞர் அண்ணா, 
4.தூத்துக்குடி,5.மாமல்லபுரம்,6.காவேரி, 7.சென்னை,
8.காவேரி,9.சேலம்,10.2001.

 

இன்று ஜூலை 7

பெயர் : மகேந்திர சிங் தோனி,
பிறந்ததேதி : ஜூலை 7, 1981
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட்
கீப்பர் மற்றும் அதிரடி மட்டை வீச்சாளரும்
ஆவார்.இவர் கடந்த 2004-ஆம் ஆண்டு டிசம்பர்
மாதம் முதல் இந்திய அணிக்காக விளையாடி
வருகிறார். தற்போது இந்திய ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட
அணியின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.இந்திய
முதன்மைக் கூட்டிணைவில் சென்னை சூப்பர் கிங்ஸ்
அணித்தலைவராகவும் பொறுப்பாற்றி வருகிறார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

நாம் செய்யும் பணிகளை எளிதாக புரியும் படி Virtual முறையில் அழகாகக் காட்டலாம். உங்கள் குழந்தைகளுக்கு செஸ்( சதுரங்கம் ) விளையாட்டை வீடியோவுடன் சொல்லி கொடுக்கும் தளம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,742 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜூலை 2011
தி செ பு விய வெ ஞா
« ஜூன்   ஆக »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: