வெளிநாட்டு வேலைக்கு செல்லும் நபர்கள் உரிய நிறுவனத்தை சோதிக்க உதவும் மத்திய அரசின் பயனுள்ள தளம்.
ஜூன் 16, 2011 at 8:36 முப 7 பின்னூட்டங்கள்
வெளிநாட்டில் வேலை என்று ஒரு வாய்ப்பு வருகிறது என்றால் உடனடியாக நாம் அந்த நிறுவனம் உண்மையானதுதானா என்று சோதிப்பது எப்படி என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
பல ஏஜென்சிகள் மூலம் தினமும் பத்திரிகையில் நாம் படிக்கும் செய்தி வெளிநாட்டு வேலை வாய்ப்பு நேரடி முகாம் உடனடியாக செல்ல விருப்பம் உள்ளவர் என்று தொடர்புகொள்ளுங்கள், இப்படி வரும் செய்திகளில் பல நம்பகத்தன்மை இல்லாத நிறுவனங்களாகவே இருக்கிறது, ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்தியாவில் இருந்து வேலைக்கு ஆட்களை தேர்வு செய்கிறது என்றால் அந்த நிறுவனம் உண்மையானது தானா என்பதை நமக்கு தெரிவுபடுத்து மத்திய அரசின் ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://www.poeonline.gov.in
கொத்தனார் முதல் மெக்கானிக்கல் என்ஜினியர் வரை , எலக்ட்ரிசன் முதல் கம்ப்யூட்டர் என்ஜியர் வரை அனைவருக்கும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு என்று வரும் செய்திகளை மட்டுமே நம்பி பல பேர் வெளிநாடுகளுக்கு சென்று கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர், ஒரு நிறுவனம் அல்லது அந்த நிறுவனத்தின் ஏஜென்டிடம் இருந்து விளம்பரம் வரும் போது அந்த நிறுவனம் இந்தியாவில் அனுமதி பெற்றுள்ள நிறுவனமா என்பதை எளிதாக கண்டுபிடிக்கலாம், மேலே குறிப்பிட்டு இருக்கும் மத்திய அரசின் தளத்திற்கு சென்று நாம் இடது பக்கம் இருக்கும் RA Information என்பதில் நம் மவுஸ்-ஐ கொண்டு சென்றதும் வரும் Sub menu -வில் நிறுவனத்தின் பெயர் , RC Number , ஏஜெண்ட் பெயர் என்று மூன்று விதமாக நாம் தேடலாம் , விளம்பரத்தில் அவர்கள் எந்த பெயர் மற்றும் RC Number கொடுத்துள்ளனரோ எதை வைத்து வேண்டுமானாலும் நாம் தேடி அந்த நிறுவனம் உண்மையானது தானா , இந்திய அரசின் அனுமதி பெற்றுள்ளதா என்பதையும் எளிதாக தெரிந்து கொள்ளலாம் , வெளிநாட்டு வேலைக்கும் செல்ல இருக்கும் நபர்களுக்கு இந்தப்பதிவை கொண்டு சேர்ப்பது நம் நண்பர்களின் கடமை.
நம் டிவிட்டர் செய்திகள் அனைத்தையும் சேமிக்க (Backup) செய்ய ஒரு பயனுள்ள தளம்.
புதிதாக நிறுவனம் தொடங்குபவர்களுக்கு பிராஜெக்ட் நிர்வாகம் செய்ய உதவும் பயனுள்ள தளம்.
லோகோ உருவாக்க நினைப்பவர்களுக்கு உதவும் பயனுள்ள தளம்.
வின்மணி சிந்தனை வாழும் கலை ஒரு அமைதியான அழகான கலை, பிறருக்காக வாழ்வது அதில் தனி சுகம் தான்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.தமிழ்நாட்டில் உள்ள பெரிய துறைமுகங்களின் எண்ணிக்கை எது ? 2.தமிழ்நாட்டில் மக்கள் தொகையில் சிறிய மாவட்டம் எது ? 3.தமிழ்நாட்டில் பரப்பளவில் பெரிய மாவட்டம் எது ? 4.பண்டைய தமிழ் கோட்டைகளைச் சுற்றி அகழியில் இருந்து விலங்கு எது ? 5.தமிழ்நாட்டில் மக்கள் தொகையில் பெரிய மாவட்டம் எது ? 6.தமிழக அரசின் மலர் எது ? 7.தமிழ்நாட்டில் பரப்பளவில் சிறிய மாவட்டம் எது ? 8.மக்கள் அடர்த்தி அதிகமாக உள்ள மாவட்டம் எது ? 9.தமிழக அரசின் அரசு சின்னம் எந்த கோவில் கோபுரம் ? 10.தமிழ்நாட்டில் வாட் வரி அமல் செய்யப்பட்ட ஆண்டு எது ? பதில்கள்: 1.3, 2.பெரம்பலூர், 3.ஈரோடு, 4. முதலை, 5.கோயம்புத்தூர், 6.செங்காந்தள் மலர்,7.சென்னை, 8.சென்னை, 9.ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம்,10.2007.
இன்று ஜூன் 16
பெயர் : சித்தரஞ்சன் தாஸ் , மறைந்த தேதி : ஜூன் 16, 1925 இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்கை ஆற்றியவர்.இங்கிலாந்தில் சட்டக்கல்வி கல்வி கற்றவர்,1909-ல்அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் அரவிந்தருக்கு ஆதரவாக வெற்றிகரமாக வாதாடினார்.ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து பிரிட்டனின் ஆடைகளைப் புறக்கணிக்க முன்னின்று உழைத்தார்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: வெளிநாட்டு வேலைக்கு செல்லும் நபர்கள் உரிய நிறுவனத்தை சோதிக்க உதவும் மத்த.
1.
Life Direction Network | 8:13 முப இல் ஜூன் 17, 2011
இந்த பதிவு பயனுள்ள பதிவல்ல, மிகவும் பயனுள்ள பதிவு, பல இழப்புகளையும், கவலைகளையும் தடை செய்து, அயல்நாடு செல்பவர்களுக்கு நல்வழி காட்டும் நல்ல தகவல் நானும் நாலு பேருக்கு இதைப்பற்றி சொல்கிறேன் நன்றி.
2.
winmani | 9:21 முப இல் ஜூன் 18, 2011
@ Life Direction Network
மிக்க நன்றி நண்பரே.
3.
guru | 12:18 பிப இல் ஜூன் 17, 2011
உபயோகமுள்ள நல்ல பதிவு….
4.
winmani | 9:22 முப இல் ஜூன் 18, 2011
@ guru
மிக்க நன்றி
5.
rajesh | 11:26 பிப இல் ஜனவரி 18, 2012
ubayegamana thagavalgal , melum munnere vazththukkal
6.
rajesh | 11:26 பிப இல் ஜனவரி 18, 2012
very good
7.
arivalagan | 5:09 பிப இல் ஏப்ரல் 10, 2012
மிகவும் பயனுள்ள தகவல். ஆனால் statusல் ஒவ்வொரு கம்பெனிக்கும் ஒரு குறியீடு (v,e) என்று உள்ளது அது பற்றிய விவரம் தயவுசெய்து கூறவும்.