கிரிக்கெட் விளையாட்டின் ஸ்கோர் போர்டு ( Live Score ) விபரம் நேரடியாக நம் குரோம் உலாவியில் பார்க்கலாம்.
ஜூன் 11, 2011 at 9:29 முப பின்னூட்டமொன்றை இடுக
உலக அளவில் அனைவரும் விரும்பி பார்க்கும் பொழுதுபோக்கு விளையாட்டான கிரிக்கெட் போட்டியின் Score board -ஐ எந்த இணையதளத்திற்கும் செல்லாமல் நேரடியாக நம் குரோம் உலாவியின் மூலம் உடனுக்கூடன் தெரிந்து கொள்ளலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
கூகிள் குரோம் உலாவியின் வெப் ஸ்டோர் நாளுக்கு நாள் புதிதாக ஏதாவது ஒரு சேவையை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது அந்த வகையில் இன்று நாம் கிரிக்கெட் விளையாட்டின் ஸ்கோர் போர்டை நேரடியாக நம் குரோம் உலாயில் பார்க்கலாம் நமக்கு உதவுவதற்காக உள்ள குரோம் எக்ஸ்டன்சன்.
இணையதள முகவரி : https://chrome.google.com/webstore/detail/ijhlikjoigjegofbedmfmlcfkmhabldh#
மேலே கொடுக்கப்பட்டிருக்கும் இணையதள முகவரியை நம்முடைய குரோம் உலாவியில் கொடுத்து வரும் திரையில் Install என்ற பொத்தானை சொடுக்கி ஒரே நிமிடத்தில் நம் குரோம் உலாவியில் கிரிக்கெட் ஸ்கோர் போர்டு நிறுவலாம். இனி நம் உலாவியில் படம் 1-ல் காட்டியபடி C என்ற ஐகானை சொடுக்கி நொடியில் கிரிக்கெட் போட்டியின் ரன் மற்றும் கூடுதல் விபரங்களை தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் இணையதளம் சென்று பார்ப்பதற்கு பதில் தேவைப்படும் நேரம் நொடியில் கிரிக்கெட் போட்டி பற்றிய விபரங்களை உடனடியாக கொடுக்கும் இந்த கூகிள் நீட்சி நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.
உலாவியில் விளையாடும் புத்தம் புதிய HTML 5 விளையாட்டுக்கள்.
இசையின் அடிப்படையை விளையாட்டு மூலம் பயிற்சி கொடுக்கும் அபூர்வ தளம்.
திறமையான ‘சுடோ’ சுடுக்கு பேப்பரில் பிரிண்ட் செய்து விளையாடலாம்
ஆங்கில சொல்வளத்தை அதிகரிக்கும் ஆன்லைன் விளையாட்டு.
வின்மணி சிந்தனை விளையாட்டு உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் மனதிற்கு புத்துணர்ச்சியையும் தரும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.அலுமினியத்தின் நீள் விரிவெண் என்ன ? 2.வைக்கம் வீரர் என அழைக்கபடுபவர் ? 3.மஞ்சள் உற்பத்திக்கு பெயர் பெற்ற மாவட்டம் எது ? 4.குலக்கல்வி திட்டத்தை தொடங்கிய முதலைச்சர் யார் ? 5.கோடிக்கரை சரணாலயம் உள்ள மாவட்டம் எது ? 6.கூடங்குளம் அணுமின் நிலையம் உள்ள மாவட்டம் எது ? 7.சங்க இலக்கியம் எழுதப்பட்ட மொழி எது ? 8.மதிய உணவுத்திட்டத்தை கொண்டுவந்த முதலமைச்சர் யார் ? 9.மாம்பழத்திற்கு பெயர் பெற்ற மாவட்டம் எது ? 10.சேரர்களின் தலைநகரம் எது ? பதில்கள்: 1.26,2.தந்தை பெரியார்,3.ஈரோடு,4.இராஜாஜி, 5.நாகப்பட்டிணம், 6.திருநெல்வேலி,7.தமிழ்,8.காமராஜர்,9.சேலம், 10.வஞ்சி.
இன்று ஜூன் 11
பெயர் : பெருஞ்சித்திரனார் , மறைந்த தேதி : ஜூன் 11, 1995 பாவலரேறு பெருஞ்சித்திரனார் இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பாவலர்களுள் குறிப்பிடத்தக்க பெருமைக்குரியவர். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர். பன்முக ஆளுமையைக் கொண்டவர். உங்களால் இந்திய தேசத்திற்கு பெருமை.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: கிரிக்கெட் விளையாட்டின் ஸ்கோர் போர்டு ( Live Score ) விபரம் நேரடியாக நம் குரோம் உல.
Subscribe to the comments via RSS Feed