இந்தியாவில் இருந்து ஊழலை ஒழிக்க மிஸ்ட்கால் ( Missed Call ) மூலம் உங்கள் வாக்கை செலுத்துங்கள்.
ஜூன் 10, 2011 at 4:41 முப 4 பின்னூட்டங்கள்
இந்தியாவை ஊழல் அற்ற சொர்க்க பூமியாக மாற்ற வேண்டிய கடமை நம் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உள்ளது. இந்தியாவில் இருந்து ஊழலை எதிர்க்க வேண்டிய மசோதாவான லோக்பால் மசோதாவுக்கு பல தடைகற்கள் வந்து கொண்டிருந்தாலும் இப்போது குறைந்தபட்சம் 25 கோடி மக்களின் ஆதரவு இருந்தால் தான் இந்த மசோதா நிறைவேற்றப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதற்காக நாம் நம் அலைபேசியில் இருந்து ஒரு மிஸ்ட்கால் கொடுப்பதன் மூலம் நம்முடைய ஆதரவை தெரிவிக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
மக்களின் பணத்தை கொள்ளை அடிக்கும் ஊழல் அரசியல்வாதிகளுக்கு தண்டனை கொடுக்க வரவிருக்கும் லோக்பால் மசோதாவுக்கு நம் ஆதரவை செலுத்த வேண்டிய தருனத்தில் இப்போது உள்ளோம், தொழில்நுட்பம் மூலம் புதுமையான முறையில் இம்மசோதாவிற்கு நம் ஆதரவை அளிக்கலாம்.
மிஸ்ட்கால் செய்ய வேண்டிய அலைபேசி எண் : 0 22 6155 0789 (அ) + 91 22 6155 0789
இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் அலைபேசி எண்ணுக்கு ஒரு மிஸ்ட்கால் (Missed Call ) கொடுப்பதன் மூலம் நம் ஆதரவு லோக்பால் மசோதாவுக்கு சென்றுவிடும்.இதற்காக எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை. வாக்கு பதிவு செய்யப்பட்டதும் உடனடியாக பதிவு செய்யப்பட்டதற்கான ஒரு குறுஞ்செய்தி உங்கள் மொபைலுக்கு வரும். ஊழலை ஒழித்தால் போதும் வறுமை நீங்கி நம் நாடு வல்லரசாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, நம்மால் முடிந்தவரை அத்தனை பேருக்கும் இந்தச்செய்தியை கொண்டு சேர்ப்போம். குறைந்த பட்சம் 25 கோடி மக்களின் ஆதரவு வேண்டும் அதனால் உங்கள் வீட்டில் இருக்கும் அனைத்து அலைபேசிகள் மூலமும் உங்கள் உணர்வுகளை வாக்குகளாக பதிவு செய்யுங்கள்.தன்னார்வத் தொண்டர்கள் (Volunteers) தங்கள் தகவல்களை இத்தளத்தில் பதிவு செய்யலாம்.
இணையதள முகவரி : http://www.indiaagainstcorruption.org
விக்கிப்பீடியா கட்டுரையை எளிய ஆங்கிலத்தில் படிக்க ட்ரிக்ஸ்
நம் அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள ஒரு வழி
240 நாடுகளின் பின்கோடு (அஞ்சல் குறியீட்டு எண்) வைத்து ஊரை கண்டுபிடிக்கலாம்
2011-ல் செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் ரோபோட் உங்கள் பெயரை சுமந்து செல்லும்
வின்மணி சிந்தனை ஊழலை ஒழிக்க நாம் அளிக்கும் ஒவ்வொரு ஓட்டும் நம் வருங்காலத்தை வளமானதாக மாற்றும் என்பதில் சந்தேகம் இல்லை
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.குளிர்சாதன வசதி செய்யும் முறையை கண்டுபிடித்தவர் யார்? 2.ஆரம்பகால இரு சைக்கிளை கண்டுபிடித்தவர் யார் ? 3.மனித உடலின் ஆக்ஸிசன் அளவு என்ன ? 4.அவோகேட்ரா எண் என்பது என்ன ? 5.எதிர்மின் கதிர்களை கண்டுபிடித்தவர் யார் ? 6.புரோட்டானின் நிறை எறக்குறைய எதன் நிறைக்கு சமமாகும்? 7.திட்டவிதி (மாறாவிதி) - யை கண்டுபிடித்தவர் யார் ? 8.ஆக்சிஸன் மூலக்கூறு நிறை என்ன ? 9.ஆல்பா கதிர்களின் முக்கிய மூலமாக இருக்கும் ஐசோடாப்பு என்ன ? 10." அமைதிக்காகவே அணு“ என்ற பரிசை பெற்றவர் யார் ? பதில்கள்: 1.வில்லியம்ஸ் காரியர்,2.சாவர்பிரன்,3.65 சதவீதம், 4.6.023.10^23, 5.தாம்சன்,6.நியூட்ரான்,7.ப்ரெளட்,8.32, 9.U - 238, 10.நீல்ஸ் போர்.
இன்று ஜுன் 10
பெயர் : வே.தில்லைநாயகம் ,
பிறந்த தேதி : ஜூன் 10 ,1925
‘வேதி’ என்று அழைக்கப்படும் வே. தில்லைநாயகம்
தமிழக நூலகத்த்துறையின் பிதாமகர்.1972 இல் தமிழக
அரசின் நூலகத்துறையின் முதல் இயக்குநராக இணைந்து
1982 வரை 10 வருடங்கள் தொடர்ச்சியாக இயக்குநராக
இருந்து பெருமை சேர்த்தவர்.ஏறத்தாழ 1000 எழுத்துரைகள்
எழுதியவர். இதில் 101 ஆங்கில எழுத்துரைகள். “இந்திய நூலக
இயக்கம்” நூலைப் பாராட்டி 1982 இல் உலகப் பல்கலைக்
கழகம் கௌரவ டாக்டர் பட்டம் அளித்துள்ளது.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: இந்தியாவில் இருந்து ஊழலை ஒழிக்க மிஸ்ட்கால் ( Missed Call ) மூலம் உங்கள் வாக்கை செல.
1.
Life Direction Network | 9:35 முப இல் ஜூன் 11, 2011
நிச்சயம் 25 கோடிக்கும் அதிகமான மக்களின் ஆதரவை கொடுக்க முடியும், நாம் அனைவரும் இச்செய்தியை SMS, Email மற்றும் பிற வழிமுறைகளில் அனைவரிடமும் கொண்டு சேர்ப்போம், இந்தியாவிலுள்ள ஒட்டுண்ணிகளையும், களைகளையும் வேரோடு புடுங்கி எறிய நமக்கு கிடைத்த ஒரு எளிய வாய்ப்பு இது, விரைந்து செயல்படுவோம், இத்தகவலை விரைவாக கொண்டு சேர்த்த விண்மணிக்கு நன்றி.
2.
winmani | 9:44 முப இல் ஜூன் 11, 2011
@ Life Direction Network
மிக்க நன்றி , நம் தளத்தில் இருந்தபடியே இச்செய்தியை பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் கூட பகிர்ந்து கொள்ளலாம்,
3.
gajapathy | 12:13 பிப இல் ஜூன் 12, 2011
pleae let us know how many votes are being registered.. is there any website to see that??? total count will make us to drive to achive it.
4.
winmani | 2:12 பிப இல் ஜூன் 12, 2011
@ gajapathy
அடுத்த மாதம் வெளிவரவிருப்பதாக தகவல்.
நன்றி