புகைப்படங்களை பெரியதாக்கவும் சிறியதாக்கவும் உதவும் பயனுள்ள இலவச மென்பொருள்.
ஜூன் 9, 2011 at 9:27 முப 9 பின்னூட்டங்கள்
நம் கேமிராவில் எடுத்த புகைப்படங்களின் அளவை சிறியதாக்கவும் பெரியதாக்கவும் நமக்கு உதவுவதற்காக ஒரு இலவச மென்பொருள் உள்ளது. பயன்படுத்துவதற்கு எளிதான இந்த மென்பொருளைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
நம்மிடம் இருக்கும் புகைப்படங்கள் அல்லது நாம் கேமிரா மூலம் எடுத்த புகைப்படங்ளின் நீள அகலங்களை மாற்றுவதற்காக இனி எந்த பெரிய மென்பொருளும் தேவையில்லை சில நிமிடங்களில் அதுவும் எளிதாக நம் புகைப்படங்களை சிறியதாக்கவும் பெரியதாக்கவும் மாற்ற நமக்கு ஒரு இலவச மென்பொருள் உள்ளது.
தறவிரக்க முகவரி : http://www.downloadmost.com/freeware/download/?Photo%20Resizer%20for%20Camera%20Pictures-17362.html
இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் முகவரியை சொடுக்கி மென்பொருளை தறவிரக்கி நம் கணினியில் நிறுவிக்கொள்ளவும், அடுத்து மென்பொருளை இயக்கி நாம் மாற்ற விரும்பும் புகைப்படத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும் படம் 1-ல் காட்டியபடி வலது பக்கம் இருக்கும் + என்ற பொத்தானை சொடுக்கி படத்தை பெரியதாக்கலாம்,இடது பக்கம் இருக்கும் – என்பதை சொடுக்கி படத்தை சிறியதாக்கலாம். எந்த அளவு நமக்கு சரியாக இருக்கிறதோ அந்த அளவில் தேர்ந்தெடுத்துக்கொண்டு Quick Save அல்லது Save Resized Photo என்ற பொத்தானை சொடுக்கி எளிதாக சேமிக்கலாம், கண்டிப்பாக கணினி பயின்றுவரும் நண்பர்களுக்கு புகைப்படங்களை சிறியதாக்கவும் பெரியதாக்கவும் இந்த மென்பொருள் பயனுள்ளதாக இருக்கும்.
ஆன்லைன்-ல் திரைப்படங்களை இலவசமாக பார்க்கவும் தரவிரக்கவும் சிறந்த தளம்.
ஒன்றுக்கொன்று தொடர்புடைய படங்களை தேடித்தர புதுமையான தேடுபொறி
ஒரு இணையதளத்தில் உள்ள அத்தனை படங்களையும் ஒரே சொடுக்கில் தறவிரக்கலாம்.
மிகத் துல்லியமான திரைப்படங்களை மட்டுமே கொடுக்கும் இணையதளம்
வின்மணி சிந்தனை சிறிய தவறுகள் கூட நம் வாழ்க்கையில் பல நேரங்களில் அரிய நண்பர்களை நம்மிடம் இருந்து பிரித்துவிடும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.எக்ஸ்ரே எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது ? 2.பென்சிலின் மருந்தை கண்டுபிடித்தவர் யார் ? 3.எலெக்ட்ரானை கண்டுபிடித்தவர் யார் ? 4.ஆகாய விமானம் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது ? 5.இரத்த ஒட்டத்தை கண்டுபிடித்தவர் யார் ? 6.இடி தாங்கியை கண்டுபிடித்தவர் யார் ? 7.தீப்பெட்டியை கண்டுபிடித்தவர் யார் ? 8.ராக்கெட்டை கண்டுபிடித்தவர் யார் ? 9.சதுரங்க விளையாட்டை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் யார் ? 10.தார் போடும் இயந்திரத்தை கண்டுபிடித்தவர் யார் ? பதில்கள்: 1.1895,2.அலெக்சாண்டர் பிளெம்மிங்,3.ஜே.ஜே.தாம்சன், 4.1903,5.வில்லியம் ஹார்வி,6.பெஞ்சமின் பிராங்களின்,7.ஜான் வாக்கர்,8.வான்பிரான், 9.சாண்ட்விச் பிரபு, 10.தாமஸ் ஏவ்வில்.
இன்று ஜுன் 9
பெயர் : கிரண் பேடி , பிறந்த தேதி : ஜூன் 9 ,1949 இந்தியாவின் ’இந்திய காவல் சேவைப்பணியில்’ 1972ஆம் ஆண்டு சேர்ந்த முதல் பெண் அதிகாரி ஆவார். 2007ஆம் ஆண்டு விருப்பப்பணி ஓய்வு பெற்றபின் சமூக சேவகியாக நலப்பணிகள் செய்து வருகிறார்.தமது காவல் பணிக்காலத்தில் வகித்த பல்வேறு பதவிகளிலும் சிறப்புற பணியாற்றி புகழ் பெற்றவர்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்.
1.
அமிர்தராஜ் | 10:11 முப இல் ஜூன் 10, 2011
>> சிறிய தவறுகள் …..
>> **அறிய** நண்பர்களை …..
அரிய நண்பர்களை…
2.
winmani | 11:29 முப இல் ஜூன் 10, 2011
@ அமிர்தராஜ்
மிக்க நன்றி , திருத்தியாச்சு,
3.
lollusiva | 11:57 பிப இல் ஜூன் 10, 2011
Thanks winmani
4.
winmani | 3:01 முப இல் ஜூன் 11, 2011
@ lollusiva
மிக்க நன்றி
5.
rathnavel natarajan | 5:56 முப இல் ஜூன் 11, 2011
நல்ல பதிவு.
எனது நண்பர்களுக்கும் எனது மகன்களுக்கும் அனுப்பியிருக்கிறேன்.
வாழ்த்துக்கள்.
6.
winmani | 5:57 முப இல் ஜூன் 11, 2011
@ rathnavel natarajan
மிக்க நன்றி
7.
லியாக்கத் அலி | 12:29 பிப இல் ஜூன் 11, 2011
நன்றி . நன்றி
எப்பொழுதும் போல உபயோகமான தகவல்.
8.
winmani | 1:08 பிப இல் ஜூன் 11, 2011
@ லியாக்கத் அலி
மிக்க நன்றி
9.
KALAI | 11:33 முப இல் நவம்பர் 12, 2011
plase resent news in tamil gk