Archive for மே, 2011
வாரம் லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய வாசகர்கள் பயன்படுத்தும் Angry Birds விளையாட்டை இனி குரோம் உலாவியில் விளையாடலாம்.
ஐபோன் முதல் ஆண்டிராய்டு வரை உலக அளவில் விளையாட்டு உலகில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கும் Angry Birds விளையாட்டை இனி குரோம் உலாவியில் விளையாடலாம். இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
வெளிவந்த சில நாட்களில் அனைவரிடமும் இடம் பிடித்த இந்த கோபமான பறவைகள் தான் இந்த விளையாட்டு ஹீரோக்கள். எளிமையான விதிமுறை பயன்படுத்த எளிமை ஒன்றல்ல இரண்டல்ல முடிவுவே இல்லாமல், போரடிக்காமல் ஒரு விளையாட்டை உருவாக்கி அனைவரிடமும் இடம் பிடித்திருக்கும் இந்த Angry Birds விளையாட்டை ஐபோனில் தான் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்றாலும் தற்போது இனி இந்த விளையாட்டை நாம் குரோம் உலாவியிலே விளையாடலாம் நமக்கு உதவுதற்காக கூகிள் குரோம் வெப் ஸ்டோர் இந்த விளையாட்டை அதிகாரப்பூர்வமாக இலவமாகவே கொடுக்கிறது…
Continue Reading மே 20, 2011 at 1:02 முப பின்னூட்டமொன்றை இடுக
அனைத்து MP3 பாடல்களையும் எளிதாக சில நிமிடங்களில் நேரடியாக தறவிரக்கலாம்.
ஆன்லைன் மூலம் MP3 பாடல்களை தறவிரக்க பல இணையதளங்கள் இருந்தாலும் ஆங்கிலப்பாடல்கள் முதல் தமிழ்பாடல்கள் வரை , இசை ஆல்பம் முதல் சொற்பொழிவு வரை அனைத்து Mp3 கோப்புகளையும் நேரடியாக தறவிரக்க நமக்கு ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
அழகான பாடல்களை கேட்பது மனதிற்கு ஒருவிதமான புத்துணர்ச்சி மற்றும் மகிழ்ச்சியை அளிக்கும் என்றாலும் நமக்கு பிடித்த MP3 பாடல்களை தறவிரக்க ஒவ்வொரு தளமாக சென்று தேட வேண்டி இருக்கிறது. பல இணையதளங்களில் கேட்பதற்கு மட்டும் தான் அனுமதி இருக்கிறது தறவிரக்க அனுமதி இல்லை என்ற செய்திதான் பலருக்கும் தெரிந்திருக்கும், ஆனால் இனி நமக்கு பிடித்த அனைத்துவிதமான MP3 கோப்புகளையும் இலவசமாக தறவிரக்க ஒரு தளம் உதவுகிறது…
முக அலங்காரம் மற்றும் ஒப்பனை செய்வதற்கென்றே தனி சோசியல் நெட்வொர்க்
அலங்காரம் மற்றும் ஒப்பனை செய்வதற்கென்று தனியாக ஒரு சோசியல் நெட்வொர்க் உருவாக்கி அழகு பற்றிய அத்தனை விபரங்களையும் நாம் ஒரே தளத்தில் இருந்து தெரிந்து கொள்ளள நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
அலங்காரம் செய்வது ஒரு தனி கலை தான் , தற்போதுள்ள சுழலில் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் முகத்தை அழகாக வைத்துக்கொள்வதும் வேகமாக மக்களிடையே வளர்ந்து வருகிறது. இதற்காக அழகு பற்றிய அனைத்து விபரங்களையும் அனுபவத்துடன் அள்ளிக்கொடுக்கஒரு சோசியல் நெட்வொர்க் தளம் உள்ளது…
பெரிய புகைப்படங்களின் அளவை சுருக்காமல் உங்கள் வலைப்பூவில் காட்டஅருமையான வழி.
பெரிய அளவுள்ள புகைப்படங்களை நம் வலைப்பக்கத்தில் போடுவதால் இடங்களை அடைத்துக்கொள்ளும் என்ற கவலை இல்லாமல் படத்தின் அளவை சுருக்காமலும் நம் வலைப்பூவில் காட்டலாம் எப்படி என்று ஆச்சர்யமாக இருக்கிறதா ? , இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
சில நேரங்களில் பெரிய அளவிலான புகைப்படங்களை நம் வலைப்பக்கத்தில் காட்டலாம் என்று பார்த்தால் நம் தளத்தின் வடிவமைப்பு பெரிய அளவுள்ள படங்களுக்கு துணை புரியாமல் இருக்கலாம் ஆனால் இனி நம்மிடம் இருக்கும் பெரிய அளவுள்ள புகைப்படங்களின் அளவை சுருக்காமல் நமக்கு காட்டுவதற்கு உதவியாக ஒரு தளம் உள்ளது…
நம் செல்லக் குழந்தைள் கணினியில் ஒவியத்திறமையை வளர்க்க உதவும் மென்பொருள்.
கணினியில் நம் செல்லக்குழந்தைகளின் ஒவியம் வரையும் திறமையை வளர்ப்பதற்காக ஒரு இலவச மென்பொருள் உள்ளது. பலதரப்பட்ட பெயிண்ட் கருவிகளுடன் வலம் வரும் இந்த மென்பொருளைப் பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
விடுமுறையில் குழந்தைகளுக்கு கணினி விளையாட்டை விட கணினியில் ஒவியம் வரையும் விருப்பத்தை வளர்ப்பதற்காகவே ஒரு இலவச மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது….
Continue Reading மே 16, 2011 at 1:43 முப பின்னூட்டமொன்றை இடுக
சோசியல் மீடியாயை வைத்து போட்டி : எந்த நிறுவனம் பிரபலம் என்று அறியலாம்.
இரண்டு பிரபலமான நிறுவனங்கள் அல்லது இரண்டு முக்கிய பிரபலமான நபர்களில் யாருக்கு செல்வாக்கு அதிகம் என்று நொடியில் அறியலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.
சோசியல் மீடியாவை வைத்து பல போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் புதிதாக சோசியல் மீடியாவை வைத்து இரண்டு முக்கிய நிறுவனங்கள் அல்லது நபர்களில் யார் பிரபலம் என்று எளிதாக அறியலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது…
நம் பாடலுக்கு ஏற்ற இசையை நாமே உருவாக்க புதிய மெகா இசை ஸ்டூடியோ.
பாடலுக்கு இசையமைக்க ஆசை உள்ள அனைவருக்கும் ஆன்லைன் மூலம் எளிதாக நம் பாடலுக்கு இசையமைக்க ஒரு இசை ஸ்டூடியோ உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
சிறிய ஒலியை கூட இசையாக மாற்றும் திறமை நம்மிடம் இருக்கலாம் ஆனால் இசையமைக்கத் தேவையான எந்த இசைக்கருவி (instrument )-ம் இல்லாமல் எப்படி இசையமைக்க முடியும் என்ற கேள்வி நம் அனைவரிடமும் இருக்கும் இதற்கு பதிலாக ஒரு இணையதளம் நாம் பாடும் பாடலுக்கான இசையை நாமே உருவாக்கும் வண்ணம் ஒரு தளத்தை வடிவமைத்துள்ளது.
உலக அளவில் தமிழ் குறும்படத்திற்கான போட்டி அனைத்து நாட்டினரும் பங்கேற்கலாம்.
தமிழில் முதல் முறையாக குறுப்படத்திற்கான போட்டியை ஐக்கிய அரபு நாடுகளின் தமிழ் அமைப்பான யு.ஏ.இ தமிழ்ச்சங்கம் நடத்துகிறது உலக அளவில் அனைத்து தமிழர்களும் பங்கேற்கும் வண்ணம் இந்தப்போட்டி அமையவிருக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
யு.ஏ.இ. தமிழ் சங்கம் நடத்தும் குறும்படத்திற்கான போட்டி விரைவில் ஐக்கிய அரபு நாடுகளில் நடக்க இருக்கிறது. நமக்குள் மறைந்திருக்கும் நடிகர் , இயக்குநர் , ஒளிப்பதிவாளர், பாடலாசிரியர், சண்டைப் பயிற்சியாளர், எடிட்டிங் போன்ற திறமைகளை வெளிக்கொண்டுவரும் ஒரு களமாகவே இது அமையப்போகிறது. இக்குறும்பட போட்டிக்கான விதிமுறைகள் பற்றி சற்று விரிவாக பார்க்கலாம்…
Continue Reading மே 13, 2011 at 1:03 முப பின்னூட்டமொன்றை இடுக
பெளதிகம் மற்றும் வானியல் தொடர்புடைய அரிய 60 குறியீடுகளுக்கான விளக்கங்கள் வீடியோவுடன்.
பெளதிகம் மற்றும் வானியல் சாஸ்திரம் தொடர்புடைய அரிய வகையான 60 குறியீடுகளுக்கான விளக்கங்கள் வீடியோவுடன்
நமக்கு அளிக்க ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
பெளதிகம் மற்றும் வானியல் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் நம் அனைவருக்கும் இருக்கும் நாஸ்ட்ரோ டாமஸ் முதல் பல
அறிஞர்கள் வரை இதை ஆராய்ந்துள்ளனர். ஒவ்வொரு வகையான குறியீட்டிற்கும் அதற்கான விளக்கங்கள் என்ன என்பதை வீடியோவுடன் நமக்கு அளிப்பதற்காக ஒரு தளம் உள்ளது…
Continue Reading மே 12, 2011 at 2:24 பிப பின்னூட்டமொன்றை இடுக