ஒரே இடத்தில் இருந்து அனைத்துவகையான ஆடியோ புத்தகம் இலவசமாக தறவிரக்கலாம்.
மே 23, 2011 at 1:51 முப 6 பின்னூட்டங்கள்
பிரபலமான ஆங்கிலப்புத்தகத்தை ஆடியோவுடன் படிக்க விரும்பும் அனைவருக்கும் ஒரே இடத்தில் இருந்து புத்தகத்தை ஆடியோவுடன் இலவசமாக கொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
அறிவை , மொழியை வளர்க்கும் ஆங்கிலப்புத்தகங்களை ஆடியோவுடன் படிக்க வேண்டும் என்றால் இனி விலை கொடுத்து வாங்க வேண்டாம் அனைத்து வகையான புத்தகமும் ஆடியோவுடன் துறை வாரியாகப்பிரித்து வைக்கப்பட்டு இலவசமாக தறவிரக்க உதவி
செய்கிறது ஒரு தளம்.
இணையதள முகவரி : http://www.booksshouldbefree.com
இத்தளத்திற்கு சென்று நாம் எந்தத்துறை புத்தகம் படிக்க விரும்புகிறோமோ அந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து அங்கு இருக்கும் பல்வேறு புத்தகங்களில் நாம் விரும்பும் புத்தகத்தை சொடுக்கி எளிதாக அந்த புத்தகத்தை தறவிரக்கலாம். ஒவ்வொரு புத்தகத்திற்கும் Audio book preview கொடுக்கப்பட்டுள்ளது இதை சொடுக்கி ஆடியோ Preview கேட்டுக்கொள்ளலாம். iPod Download மற்றும் Mp3 Download என்பதில் நமக்கு எப்படி வேண்டுமோ அதைச்சொடுக்கி எளிதாக நம் கணினியில் தறவிரக்கிக்கொள்ளலாம். ஆங்கிலம் வளர்க்க வேண்டும் என்ற விருப்பம் உள்ள அனைவருக்கும் குழந்தைகளுக்கும் இந்தப்பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஒரே இடத்தில் அனைத்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் (User Manual) பயன்பாட்டு புத்தகத்தையும் தரவிரக்கலாம்
அறிவியல் மற்றும் கணினி துறையின் புத்தகங்களை இலவசமாக தரவிரக்கலாம்
47 மில்லியன் வழிகாட்டி புத்தகங்களை ஒரே இடத்தில் இருந்து தேடலாம்.
வின்மணி சிந்தனை வார்த்தையால் ஒருவரை நாம் காயப்படுத்தினால் அதன் பலன் பலவிதங்களில் நமக்கு திருப்பி வரும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.சுரியஒளிமூலம் மருத்துவம் செய்யும் முறைக்கு என்ன பெயர்? 2.விமானப்பயணத்தின் போது ஏற்படும் பல்வலிக்கு என்ன பெயர்? 3.இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் எங்குள்ளது ? 4.உலகின் முதல் சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை எந்த ஆண்டு நடந்தது ? 5.பித்தவெடிப்பு எதனால் ஏற்படுகிறது ? 6.அணுகுண்டின் ஆற்றல் எந்த அளவால் அளக்கப்படுகிறது ? 7.முதலைக்கு எத்தனை பற்கள் உள்ளது ? 8.பெங்குவின்கள் மணிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் நீந்தும் ? 9.இரவில் இரை உண்ணும் மிருகம் எது ? 10.எத்தனை வயதுக்கு மேல் எலும்புகள் வளர்வதில்லை ? பதில்கள்: 1.ஹீலியா தெரபி,2.ஏரோடெண்டால்ஜியா,3. லக்னோ,4.1917, 5.பூஞ்சை காளான்களால், 6.தொன்,7.68 பற்கள், 8.35 கி.மீ,9.புலி,10.22.
இன்று மே 23
பெயர் : ஹென்ரிக் இப்சன் , பிறந்த தேதி : மே 23, 1906 நவீன நாடக இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படுபவர். நார்வேயைச் சேர்ந்த இவர் நாடகாசிரியரும்,கவிஞரும் ஆவார்.ஐரோப்பிய நாடகங்கள் மறுமலர்ச்சி பெற உதவியவர். இவரது பொம்மைவீடு நாடகம் உலகப் புகழ் பெற்றது.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: ஒரே இடத்தில் இருந்து அனைத்துவகையான ஆடியோ புத்தகம் இலவசமாக தறவிரக்கலாம்..
1.
மாணிக்கம் நடேசன் | 9:18 முப இல் மே 25, 2011
ஆடியோ புத்தகம் பற்றிய விளக்கத்திற்கு நன்றி.
2.
winmani | 11:42 முப இல் மே 25, 2011
@ மாணிக்கம் நடேசன்
மிக்க நன்றி
3.
சபரிநாதன் | 7:15 பிப இல் மே 25, 2011
பயனுள்ள தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி
4.
winmani | 11:01 பிப இல் மே 25, 2011
@ சபரிநாதன்
மிக்க நன்றி
5.
sureshbabu | 9:24 பிப இல் மே 25, 2011
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி பகிர்ந்தமைக்கு.
6.
winmani | 11:02 பிப இல் மே 25, 2011
@ sureshbabu
மிக்க நன்றி