” இப்போது ” பொருத்தமான தேடல் முடிவுகளை கொடுக்கும் சற்று வித்தியாசமான தேடுபொறி.
மே 22, 2011 at 1:00 முப 4 பின்னூட்டங்கள்
கூகிள் மட்டுமே பயன்படுத்தி தேடுதல் வேட்டையாடும் நமக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுப்பதற்காக புதிதாக ஒரு தேடுபொறி வந்துள்ளது இது இப்போதுள்ள பொருத்தமான முடிவுகளை நமக்கு கொடுக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
தேடுதல் என்ற வார்தைக்கு விளக்கம் கேட்டால் பலரும் உடனடியாக சொல்வது கூகிள் தான் அந்த அளவிற்கு தேடலில் முதலிடம் வகிக்கும் கூகிள் கொடுக்கும் சேவையில் ஒரு பகுதி தான் இந்தத்தளம் செய்கிறது ஆனாலும் அதிக மக்களால் பயன்படுத்தப்படுகிறது இந்த தேடுதல் இணையதளம் இத்தளத்திற்கு சென்று நாம் தேடும் முடிவுகள் 14 நாட்கள் அதாவது இரண்டு வாரத்திற்கு முன்பு வரை உள்ள பொருத்தமான முடிவுகளை கொடுக்க இத்தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://www.nowrelevant.com/nrbeta/
இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Search என்ற கட்டத்திற்குள் நாம் தேட விரும்பும் வார்த்தைகளை கொடுத்து Search என்ற பொத்தானை சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் நமக்கு இரண்டு வாரத்திற்கு முன்பு உள்ள பொருத்தமான
முடிவுகளை காட்டுகிறது. 1-ல் இருந்து 14 வரை தான் பக்கங்கள் காட்டப்படுகிறது. ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு நாளை குறிக்கும் விதமாக அமைந்திருக்கிறது. தேடப்படும் வலைப்பக்கங்களில் நாம் கொடுக்கும் வார்த்தை இருந்தால் அதில் பல பேர் பார்க்கும்
தளம் என்பதை வைத்து இத்தளம் தேடுதல் முடிவுகளைக்காட்டுகிறது. கூகிளிலும் இதைவிட நாட்களுக்கான பல சேவைகள் இருந்தாலும் அதை எல்லாம் தேர்ந்தெடுத்து தேடினால் தான் கிடைக்கும் ஆனால் இத்தளம் இரண்டு வாரத்தை மட்டுமே மையப்படுத்தி தேடுவதால் இத்தளம் சற்று வித்தியாசமாக இருக்கும்.
Vector படங்கள் மற்றும் Clipart படங்களை தேட எளிய பயனுள்ள தேடுபொறி.
தேடுபொறியில் தேடும் வார்த்தைக்கு உதவிய செய்ய 7 பிரம்மாண்டங்கள் இணைந்த ஒரே தளம்.
சைவசாப்பாட்டு பிரியர்களுக்கான வித்தியாசமான தேடுபொறி
கூகுள்-ல் வார்த்தைக்கான பொருள் தேடுவதற்கு முன்பே தெரியும்
வின்மணி சிந்தனை ” நான் யார் “ என்ற தேடுதல் ஒரு மனிதனுக்கு தொடங்கிய சில காலங்களில் அவன் தன்னை முழுமையாக அறிகிறான்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.மிகக்குறைந்த மக்கள் வசிக்கும் இந்திய யூனியன் பிரதேசம் ? 2.இந்தியாவின் தேசியப்பறவை எது ? 3.தொழிலாளர் விவசாயிகள் வாழ்க்கையை மாற்றிய புரட்சி எது ? 4.இந்தியாவில் அதிக அளவு உற்பத்தியாகும் தானியம் எது ? 5.சுதந்திரம் எனது பிறப்புரிமை எனக்கூறியவர் யார் ? 6.ஜங்கிள் புக் என்ற நூலின் நூலாசிரியர் யார் ? 7.திரிபப்ளிக் என்ற நூலின் நூலாசிரியர் யார் ? 8.ஐவாண்கூ என்ற நூலின் நூலாசிரியர் யார் ? 9.பாஸ்ட் என்ற நூலின் நூலாசிரியர் யார் ? 10.சமுதாய ஒப்பந்தம் என்ற நூலின் நூலாசிரியர் யார் ? பதில்கள்: 1.லட்சத்தீவு,2.மயில்,3.ரஷ்ய புரட்சி,4.நெல், 5.பாலகங்காதர திலகர், 6.ருட்யார்ட் கிப்ளிங்,7.பிளாட்டோ, 8.சர்வால்டர்ஸ்காட்,9.கதே,10.ரூசோ.
இன்று மே 22
பெயர் : விக்டர் ஹியூகோ, மறைந்த தேதி : மே 22, 1885 ஒரு பிரெஞ்சு எழுத்தாளரும், நாடகாசிரியரும் புதின எழுத்தாளரும், கட்டுரையாளரும், காட்சிக் கலைஞரும், அரசியலாளரும், மனித உரிமைகள் ஆர்வலரும் ஆவார். இவரே பிரான்சின் புனைவிய இயக்கத்தின் மிகச் செல்வாக்குள்ள பேச்சாளர் ஆவார்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: ” இப்போது ” பொருத்தமான தேடல் முடிவுகளை கொடுக்கும் சற்று வித்தியாசமான தேட.
1.
suganthiny75 | 1:56 பிப இல் மே 24, 2011
இத்தகவலை தந்தமைக்கு ரொம்ப நன்றி நல்ல பயனுள்ள தகவல்களை விண்மணி தருகிறது மிகவும் வரவேற்ககூடிய விடயமாக இருக்கிறது நன்றி.
2.
winmani | 12:15 முப இல் மே 25, 2011
@ suganthiny75
மிக்க நன்றி
3.
அன்பு | 9:51 பிப இல் மே 24, 2011
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
4.
winmani | 12:15 முப இல் மே 25, 2011
@ அன்பு
மிக்க நன்றி