ஒரே நொடியில் நம் கணினியின் எழுத்துருக்கள்(Fonts) அத்தனையும் ஒரே இடத்தில் Preview பார்க்கலாம்.

மே 21, 2011 at 1:13 முப 3 பின்னூட்டங்கள்

கிராபிக்ஸ் டிசைனர்கள் முதல் வெப் டிசைனர்கள் வரை அனைவருக்கும் ஒவ்வொரு Fonts மீது ஈர்ப்பு இருக்கும். மொத்தமாக நம் கணியில் பல எழுத்துருக்கள் (Fonts) இருந்தால் ஒவ்வொரு Font -ம் நம் எழுத்துக்கள் எப்படி இருக்கும் என்று சோதிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் இந்தப்பிரச்சினையை போக்குதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

எழுத்தின் மேல் விருப்பம் உள்ள அனைவரும் நம் பெயர் அல்லது நிறுவனத்தின் பெயரை ஒவ்வொரு எழுத்துருவாக மாற்றி பார்த்து அதிலிருந்து சிறந்ததை கண்டுபிடிக்க வேண்டும் என்றால் ஆகும் நேரம் அதிகம் தான் ஆனால் இனி ஒரே நொடியில் நம் கணினியில் இருக்கும் Fonts Preview ஒரே இடத்தில் இருந்து பார்க்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://wordmark.it

இத்தளத்திற்கு சென்று Loading Fonts என்று இருக்கும் பொத்தானை சொடுகினால் போதும் அடுத்து வரும் திரையில் நம் கணினியில் Install ஆகி இருக்கும் Font அத்தனையின் Preview-ம் காட்டப்படும். படம் 1-ல் காட்டியபடி Watermark என்று இருக்கும் கட்டத்திற்குள்
நாம் எந்த வார்த்தைக்கான Preview பார்க்க வேண்டுமோ அந்த வார்த்தையை கொடுத்தால் போதும் ஒரே நொடியில் நம் கணினியில் இன்ஸ்டால் ஆகி இருக்கும் அத்தனை ஃபாண்ட்களிலும் Preview காட்டப்படும். கண்டிப்பாக DTP வேலை செய்பவர்கள் முதல் டிசைனர்கள் வரை அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

 
வின்மணி சிந்தனை
சொந்தம் பந்தம் என்று பாராமல் தன்னலமில்லாமல் உதவி
செய்யும் நபர்களுக்கு எந்த நோயும் வராது.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.லால்பகதூர் சாஸ்திரி தேசியக்கல்விக்கழகம் எங்குள்ளது ?
2.காற்றில் அதிகம் கலந்துள்ள வாயு எது ?
3.உணவுப்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் உள்ள இடம் எது ?
4.ஆந்திரா எந்த நாட்டின் செய்தி ஸ்தாபனம் ?
5.தேசியச்சுற்றுச்சுழல் பொறியல் கழகம் அமைந்துள்ள இடம் எது?
6.உணவுப்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் உள்ள இடம் எது?
7.இந்தியாவில் முதல் பிளானிட்டேரியம் 1954-ல் எங்கு
  நிறுவப்பட்டது ?
8.கிராய்டன் எந்த நாட்டின் சர்வதேச விமான நிலையம் ?
9.விக்ரம் சாராபாய் விண்வெளிக்கழகம் அமைந்துள்ள இடம் எது?
10.எந்த வைட்டமின் குறைவினால் மாலைக்கண் நோய்
  ஏற்படுகிறது ?
பதில்கள்:
1.முசெளரி,2.நைட்ரஜன்,3.மைசூர்,4.இந்தோனேசியா,5.நாக்பூர், 
6.மைசூர்,7.புனா,8.பிரிட்டன்,9.திருவனந்தபுரம்,10.வைட்டமின் A.
 
இன்று மே 21

பெயர் : எம். என். நம்பியார்,
பிறந்த தேதி : மே 21, 1919
தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர்.
கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த்
திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள்
ஒருவராகத் திகழ்ந்தார். அன்பான குணமும்
பாசமும் கொண்ட சிறந்த மனிதர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

வாரம் லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய வாசகர்கள் பயன்படுத்தும் Angry Birds விளையாட்டை இனி குரோம் உலாவியில் விளையாடலாம். ” இப்போது ” பொருத்தமான தேடல் முடிவுகளை கொடுக்கும் சற்று வித்தியாசமான தேடுபொறி.

3 பின்னூட்டங்கள் Add your own

  • 1. ஸிராஜ்  |  12:29 பிப இல் மே 23, 2011

    பயனுள்ள தகவல் நன்றி வின்மணி

    மறுமொழி
  • 2. asfarook  |  2:05 பிப இல் மே 24, 2011

    sar unkalutaiya pataippukkal ellam arumai andavan ungalukku neenta aayulai tharaventummentru ventikolkiren. sar enakku nokia e71l tamil font download seyyaventum uthavavum.

    மறுமொழி
    • 3. winmani  |  4:11 முப இல் மே 25, 2011

      @ asfarook
      1. உங்கள் மொபைலில் GPRS வசதியை உயிர்ப்பித்து கொண்டு, மொபைல் மூலம் http://www.opera.com/mini/

      இணையதளத்திற்கு சென்று ஒபேரா மினி தரவிறக்கி உங்கள் மொபைலில் நிறுவி கொள்ளுங்கள்.

      2. மொபைலில் நிறுவிய ஒபேரா மினி உலாவியை திறந்து கொள்ளுங்கள். பின்பு அட்ரஸ் பாரில் opera:config என்று கொடுத்து OK கொடுக்கவும்.
      3. தோன்றும் பக்கத்தில் Use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும்.
      4. ஒபேரா மினி உலாவியை மூடி விட்டு மீண்டும் திறக்கவும்.

      இனி உங்கள் மொபைலில் நீங்கள் தமிழ் இணைய தளங்களை எந்த தடை இன்றியும் பார்க்கலாம்

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,724 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

மே 2011
தி செ பு விய வெ ஞா
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: