அனைத்து MP3 பாடல்களையும் எளிதாக சில நிமிடங்களில் நேரடியாக தறவிரக்கலாம்.
மே 19, 2011 at 4:40 முப 2 பின்னூட்டங்கள்
ஆன்லைன் மூலம் MP3 பாடல்களை தறவிரக்க பல இணையதளங்கள் இருந்தாலும் ஆங்கிலப்பாடல்கள் முதல் தமிழ்பாடல்கள் வரை , இசை ஆல்பம் முதல் சொற்பொழிவு வரை அனைத்து Mp3 கோப்புகளையும் நேரடியாக தறவிரக்க நமக்கு ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
அழகான பாடல்களை கேட்பது மனதிற்கு ஒருவிதமான புத்துணர்ச்சி மற்றும் மகிழ்ச்சியை அளிக்கும் என்றாலும் நமக்கு பிடித்த MP3 பாடல்களை தறவிரக்க ஒவ்வொரு தளமாக சென்று தேட வேண்டி இருக்கிறது. பல இணையதளங்களில் கேட்பதற்கு மட்டும் தான் அனுமதி இருக்கிறது தறவிரக்க அனுமதி இல்லை என்ற செய்திதான் பலருக்கும் தெரிந்திருக்கும், ஆனால் இனி நமக்கு பிடித்த அனைத்துவிதமான MP3 கோப்புகளையும் இலவசமாக தறவிரக்க ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://mp3skip.com
இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Search என்று கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்திற்குள் நமக்கு பிடித்த அல்லது நாம் கேட்க விரும்பும் பாடல்களுக்கான வார்த்தையை கொடுத்து சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் நமக்கு நாம் தேடிய பாடல்கள் அனைத்தையும் கொடுக்கிறது. அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் Play என்பதை சொடுக்கி பாடல்களை கேட்கலாம். Download என்பதை சொடுக்கி பாடல்களை நேரடியாக நம் கணினியில் சேமித்து வைக்கலாம்.உள்ளூர் பாடல் முதல் மைக்கேல் ஜாக்சன் பாடல்கள் வரை அனைத்தையுமே நாம் இத்தளம் மூலம் எளிதாக தறவிரக்கலாம். இசை மேல் பிரியம் உள்ள அன்பர்களுக்கும் அரிய பல பாடல்களை சேமிக்க விரும்பும் அனைவருக்குமே இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
இசையின் வெவ்வேறு பரிமாணங்களை இலவசமாக Download செய்யலாம்.
ஆனலைன் மூலம் ஆடியோ பாடலை MP3 ஆக மாற்றலாம்,பாடலின் தரத்தை கூட்டலாம்.
நம் இணைய உலாவியில் பாதிப்பு இருக்கிறதா என்று எளிதாக கண்டுபிடிக்கலாம்.
ஆன்லைன்-ல் தட்டச்சு செய்த வார்த்தையை MP3 கோப்பாக மாற்றி சேமிக்கலாம்
வின்மணி சிந்தனை பிறந்ததில் இருந்து நாம் செல்லும் வரை நம் காதில் கேட்கும் ஒரு அழகான மொழி தான் இசை.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.சென்னையில் கலைச்சொல்லாக்க மாநாடு நடைபெற்ற ஆண்டு ? 2.சோடியம் சல்பேட் எவ்வாறு அழைக்கப்படுகிறது ? 3.அமோனியம் கார்பனேட் எவ்வாறு அழைக்கப்படுகிறது ? 4.தாமிரம்,துத்தநாகம்,நிக்கல் கலந்த கலவை எவ்வாறு அழைக்கப்படுகிறது ? 5.நைட்ரேட் உப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது ? 6.லத்தீன் மொழியில் பொட்டாசியன் எவ்வாறு அழைக்கப்படுகிறது? 7.படிகாரம் என்பது எவ்வகை உப்பாகும் ? 8.அலுமினியம் , மெக்னீசியம் கலந்த கலவை எவ்வாறு அழைக்கப்படுகிறது ? 9.அயோடின் கரைசல் எதற்கு பயன்படுகிறது ? 10.காப்பருடன் கூடிய உலோகக்கலவை எவ்வாறு அழைக்கப்படுகிறது? பதில்கள்: 1.1936,2.கிளாபர் உப்பு, 3.நுகரும் உப்பு,4.ஜெர்மன் வெள்ளி, 5. சிலி வெடியுப்பு, 6.காலியம்,7சல்பேட் உப்பு, 8.மக்னேலியம், 9.தாவரங்களில் ஸ்டார்ச் உள்ளதா எனக்கண்டறிய,10.கன மெட்டல்
இன்று மே 19
பெயர் : ஜாம்செட்ஜி டாட்டா, பிறந்த தேதி : மே 19, 1904 இந்தியாவின் நவீன தொழில்துறையின் முன்னோடிகளுள் ஒருவராவார். இவர் இந்திய தொழில்துறையின் தந்தை என்று அறியப்படுகிறார். இவர் பாரிஸ் நகரத்திலேயே நீண்ட காலம் வசித்தார். இவர் இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள நவசாரி என்னுமிடத்தில் பிறந்தார். எஃகு உற்பத்திக்குப் பெயர்பெற்ற ஜாம்ஷெட்பூர் நகரத்திற்கு இவருடைய நினைவாகவே பெயர்சூட்டப்பட்டது.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: அனைத்து MP3 பாடல்களையும் எளிதாக சில நிமிடங்களில் நேரடியாக தறவிரக்கலாம்..
1.
Devarajan | 6:44 முப இல் மே 21, 2011
நல்ல இணையதளம்.பயனுள்ள தகவலுக்கு நன்றி..!!
2.
winmani | 12:23 பிப இல் மே 21, 2011
@ Devarajan
மிக்க நன்றி