நம் வீட்டு, அலுவலக மற்றும் அனைத்து நிகழ்சிகளுக்கும் இருக்கை அமைப்பு (Seating Arrangement ) சொல்லி கொடுக்கும் பயனுள்ள தளம்.
ஏப்ரல் 21, 2011 at 8:21 முப பின்னூட்டமொன்றை இடுக
சாதரண ஒரு நிகழ்சி நடத்தும் முன் வீட்டில் எத்தனை சேர் போடலாம்
என்று யோசிக்கும் நாம் வீட்டில் மட்டுமல்ல அலுவலகத்தில் மற்றும்
அனைத்து இடங்களிலும் இருக்கை (Seating Arrangement ) எளிதாக
அமைக்கலாம் எத்தனை பேருக்கு இந்த இடம் சரியாக இருக்கும்
எந்த திசையில் எப்படி அமைத்தால் சரியாக இருக்கும் என நமக்குத்
தேவையான அனைத்து Seating Arrangement உதவிகளையும் செய்ய
ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
திருமண நிகழ்ச்சி, வரவேற்பு நிகழ்ச்சி, பள்ளி மற்றும் கல்லூரியில்
நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் இருக்கை எப்படி அமைக்க
வேண்டும் என்பதை துல்லியமாக நமக்கு கொடுக்க ஒரு தளம்
உள்ளது.
இணையதள முகவரி : http://www.simpleseating.com
இத்தளத்திற்கு சென்று Signup now என்ற பொத்தானை சொடுக்கி
புதிதாக ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கி இத்தளத்தில்
நுழையலாம். Seating Arrangement என்பது ஒரு விழாவின் அடிப்படை
மற்றும் தேவையான ஒன்றும் ஆகும் இதைச்சரியாக அமைத்தால்
எந்த கூச்சல் குழப்பமும் இன்றி விழாவுக்கு வரும் அனைத்து தரப்பு
மக்களும் சரியாக உட்காரமுடியும். நம் வீட்டு டைனிங் கால் முதல்
வரவேற்பு அறை வரை அனைத்திலும் Seating Arrangement எப்படி
செய்தால் நன்றாக இருக்கும் எத்தனை பேரை இருக்க வைக்கலாம்
என்பதை நாமே இத்தளத்தின் மூலம் வடிவமைத்து தெரிந்து
கொள்ளலாம். அனைத்து விதமான சேர் மற்றும் டேபிள் வடிங்களும்
இங்கு கிடைக்கிற்றது. Seating Arrangement பற்றி அக்கறை உள்ள
நம் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
வெளிநாட்டில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு யார் துனையும் இல்லாமல் செல்லலாம்.
நம் வீட்டு திருமண நிகழ்ச்சியை பேஸ்புக்-ல் நேரடி ஒளிபரப்பு செய்யலாம்
உங்கள் வீட்டு கார்டன் எப்படி இருக்க வேண்டும் நீங்களே வடிவமைத்து பார்க்கலாம்.
உங்கள் மொபைல் அல்லது போன் நம்பரை வைத்து உங்கள் இடத்தை கண்டுபிடிக்கலாம்
வின்மணி சிந்தனை நம்பிக்கையான நபர்களை எப்போதும் நம்முடன் வைத்திருப்பது நமக்கு எல்லாவிததிலும் உதவும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.குடிநீரை சுத்தப்படுத்த எந்த வாயு பயன்படுத்தப்படுகிறது ? 2.மின்சார சக்தியை இயக்க சக்தியாக மாற்றியவர் யார் ? 3.முதன் முதலின் அனுவின் அமைப்பை கூறியவர் யார் ? 4.உலகின் முதல் அனுகுண்டு சோதனை எந்த ஆண்டு நடைபெற்றது ? 5.மின்சாரத்தின் அலகான ஓம் விதியை கண்டுபிடித்தவர் யார் ? 6.முதன் முதலில் அனுகுண்டு போட்ட நாடு எது ? 7.ராக்கெட்டின் வேகம் மணிக்கு என்ன ? 8.நாய்க்கடிக்கான மருந்தை கண்டுபிடித்தவர் யார் ? 9.வெடிமருந்து தூளை கண்டுபிடித்தவர் யார் ? 10.முதன் முதலின் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட விண்வெளி ஓடம் என்ன ? பதில்கள்: 1.குளோரின் வாயு,2.மைக்கல் பாரடே,3.நீல்ஸ் போர், 4.1945 ,5.ஜார்ஜ் சைமன் ஓம்,6.அமெரிக்கா, 7.சுமார் 40,000 கி.மீ, 8.லூயி பாஸ்டியர், 9.பகோன் ரோஜர், 10.எண்டர் பிரைசஸ்.
இன்று ஏப்ரல் 21
பெயர் : பாரதிதாசன் மறைந்த தேதி : ஏப்ரல் 21, 1964 பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர் சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழ் நடத்தி வந்தார்.
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: அலுவலக மற்றும் அனைத்து நிகழ்சிகளுக்கும் இருக்கை அமைப்பு (Seating Arrangement ) சொல்லி , நம் வீட்டு.
Subscribe to the comments via RSS Feed