பேருந்து , இரயில் ,விமானம் மூலம் நாம் செல்லும் இடத்துக்கு மேப், பயண நேரம் , செலவு கொடுக்கும் பயனுள்ளதளம்.
ஏப்ரல் 19, 2011 at 8:19 முப 5 பின்னூட்டங்கள்
உலகின் எந்த நாட்டில் இருந்தும் உலகின் எந்த பகுதிக்கும் பேருந்து
முதல் இரயில் , விமானம் மூலம் செல்ல நமக்கு மேப் மட்டும்
இல்லாமல் பயண நேரம் , பயணச்செலவு அத்தனையும் கொடுக்கிறது
ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
விடுமுறை தொடங்கியாச்சு வெளிமாநிலம் முதல் வெளிநாடு வரை
செல்ல விரும்பும் அனைவருக்கும் பயணத் தகவல்களையும் அதற்கு
ஆகும் செலவையும் நேரத்தையும் துல்லியமாக கொடுத்து நமக்கு
ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://www.rome2rio.com
இத்தளத்திற்கு சென்று நாம் உலக அளவில் எந்த நாட்டில் இருந்தும்
எந்த நாட்டிற்கும், ஒரே நாட்டில் இருந்து வெவ்வெறு மாநிலங்களுக்கும்
செல்வதற்கான மேப் பேருந்தில் செல்வது முதல் இரயில் விமானம்
என அத்தனையும் பட்டியலிட்டு காட்டுகிறது இதில் வலது பக்கம்
இருப்பதில் பேருந்து , இரயில் , விமானம் என எதில் நாம் செல்ல
வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்தால் போதும், எத்தனை கீ.மீ என்பது
முதல் பயணச்செலவு வரை அத்தனையும் காட்டும் கூடவே வலது
பக்கம் கூகிள் மேப் உதவியுடன் மேப் காட்டப்படும். கண்டிப்பாக
இந்தப்பதிவு சுற்றுலா செல்பவர்களுக்கும் வேலை நிமிர்த்தமாக
வெளிநாடு செல்பவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
உல்லாசப்பயணத்துக்கு நாம் தயார் செய்ய வேண்டியவையின் பட்டியல்
உலக அளவில் சுற்றுலா பயணிகளை கவரும் மிகவும் பயனுள்ள இணையதளம்
உங்கள் உல்லாச பயணத்துக்கான செலவை திட்டமிட பயனுள்ள இணையதளம்.
ஒரே வரைபலகையில் பல நாடுகளில் உள்ள அனைவரும் நேரடியாக படம் வரையலாம்.
வின்மணி சிந்தனை வழி தெரியாமல் தவிக்கும் நபர்களுக்கு வழி சொல்வதும் நம்மால் ஆன ஒரு சிறிய உதவி தான்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.மரங்கொத்தி பறவை எந்த நாட்டில் இல்லை ? 2.நீருக்குள் கூடுகட்டும் சிலந்திகள் எந்த நாட்டில் உள்ளது ? 3.தேனின் உடலில் எத்தனை வளையங்கள் உள்ளது ? 4.குளிர் காலத்தில் கூவாத பறவை எது ? 5.மூட்டைப்பூச்சிக்கு எதிரி எது ? 6.எந்த உயிரினம் தூங்குவது இல்லை ? 7.தேனீ விஷத்தின் பெயர் என்ன ? 8.ஈக்கள், வண்ணத்துப்பூச்சிகள் உடலின் எந்த பாகத்தால் சுவையை அறிகின்றன ? 9.பூச்சிகளைப்பற்றி விரிவாக ஆராயும் துறை எது ? 10.எந்த நாட்டில் உள்ள தேனிக்களுக்கு கொடுக்கு இல்லை? பதில்கள்: 1.ஆஸ்திரேலியா,2.ஐரோப்பா,3.குயில்,4.12, 5.சிவப்பு எறும்பு,6.புழுக்கள், 7.எபிடாக்சின், 8.கால்களால், 9.எண்டாமாலாஜி,10.ஆஸ்திரேலியா.
இன்று ஏப்ரல் 19பெயர் : சார்லஸ் டார்வின் மறைந்த தேதி : ஏப்ரல் 19, 1882 ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர். இவர் முன்வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை ஓர் அடிப்படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை. இவர் தாம் கண்டுபிடித்த உண்மைகளையும், கொள்கைகளையும், 1859 ஆம் ஆண்டில் உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species) என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார்.
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: இரயில், செலவு கொடுக்கும் பயனுள்ளதளம்., பயண நேரம், பேருந்து, விமானம் மூலம் நாம் செல்லும் இடத்துக்கு மேப்.
1.
Rajarajeswari | 12:28 பிப இல் ஏப்ரல் 21, 2011
மிகப் ப்யனுள்ள பகிர்வு. பாராட்டுக்கள்.
2.
winmani | 8:30 பிப இல் ஏப்ரல் 21, 2011
@ Rajarajeswari
மிக்க நன்றி
3.
buruhani | 6:45 பிப இல் ஏப்ரல் 21, 2011
nalla pathivu ayyaa
4.
winmani | 8:31 பிப இல் ஏப்ரல் 21, 2011
@ buruhani
மிக்க நன்றி
5.
palane | 4:56 பிப இல் ஏப்ரல் 22, 2011
பயனுள்ள தகவல் மிக்க நன்றி