நம் பேஸ்புக் , டிவிட்டரில் இருக்கும் நண்பர்களின் புகைப்படங்களை இணைத்து சித்திர வேலைப்பாடு அமைந்த படமாக உருவாக்கலாம்.
ஏப்ரல் 18, 2011 at 7:05 முப பின்னூட்டமொன்றை இடுக
பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் நமக்கு இருக்கும் நண்பர்களின் முகப்பு
புகைப்படங்களை இணைத்து அழகான சித்திரவேலைப்பாடு அமைந்தது
போல் அழகான புகைப்படமாக உருவாக்கலாம் இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.

படம் 1
இன்றைய சுழலில் சோசியல் நெட்வொர்க் பயன்படுத்தாத நபர்கள் யாரும்
இல்லை என்று சொல்லும் அளவிற்கு வேகமாக வளர்ந்து வருவது நாம்
தெரிந்த ஒன்று தான், இதில் நாம் பயன்படுத்தும் பேஸ்புக், டிவிட்டர்
மற்றும் மைபேஸ் போன்ற சோசியல் தளங்களில் நமக்கு இருக்கும்
நண்பர்களின் முகப்பு புகைப்படங்களை கொண்டு ஒரு அழகான
வேலைப்பாடு மிக்க சித்திரமாக உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக
ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://frintr.com
இத்தளத்திற்கு சென்று நாம் நாம் எந்த சோசியல் நெட்வொர்க்-ல்
நமக்கு நண்பர்கள் அதிகம் இருக்கின்றனறோ அதை தேர்ந்தெடுத்து
Login செய்தால் மட்டும் போதும் அடுத்து வரும் திரையில் நம்
அனைத்து நண்பர்களின் புகைப்படமும் சேர்ந்து நம் புகைப்படம்
Background ஆக உள்ளபடி அழகான சித்திர வேலைப்பாடுடன்
கூடிய படமாக நமக்கு தெரியும் இந்த படத்தை சொடுக்கி நம்
கணினியில் சேமித்து வைக்கலாம் நம் வலைப்பக்கத்திலும்
பகிர்ந்து கொள்ளலாம். இதை பிரிண்ட் செய்து வாங்க விருப்பம்
உள்ளவர்களும் 14 டாலர் பணம் செலுத்தி Poster ஆகவும் வாங்க
ஆர்டர் செய்யலாம். கண்டிப்பாக புதுமை விரும்பிகளுக்கு
இந்தப்பதிவு அழகானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.
நம் கணினி திரைக்கு 4 இலட்சம் அழகான கண்ணைக்கவரும் வால்பேப்பர்
நம் டிவிட்டரின் முகப்பு பக்கத்தை அழகானதாக மாற்றலாம்.
உங்கள் புகைப்படத்துக்கு அழகான சட்டகம் வடிவமைக்கலாம் நொடியில்.
பூனை கீபோர்ட்-ல் வாசிக்கும் அழகான இசை வீடியோவுடன்
வின்மணி சிந்தனை கடினமான வேலை செய்யும் போது அதற்கான பலனை ஏதாவது ஒரு வழியில் இறைவன் நமக்கு கொடுப்பான்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.புன்னகை நாடு என்று அழைக்கப்படும் நாடு எது ? 2.தோட்ட நகரம் என்று அழைக்கப்படும் நாடு எது ? 3.உலகின் பெரிய நகரம் என்று பெயர் பெற்றது எது ? 4.தாய்லாந்து நாட்டின் முந்தைய பெயர் என்ன ? 5.ஆக்ராவின் முந்தையப்பெயர் என்ன ? 6.கிழக்கத்திய வெனிஸ் என்று அழைக்கப்படும் நகரம் எது ? 7.நாடில்லாத தலைநகரம் என்று எந்த நகர் அழைக்கப்படுகிறது ? 8.இந்தியாவின் எல்லைகளில் எத்தனை நாடுகள் உள்ளது ? 9.இலட்சத்தீவுகள் மொத்தம் எத்தனை ? 10.ஆப்பிரிக்கா கண்டத்தில் எத்தனை நாடுகள் உள்ளது ? பதில்கள்: 1.ஸ்காட்லாந்து,2. சிங்கப்பூர்,3.டோக்கியோ,4.சையாம், 5.அக்பராபாத்,6.கொச்சி, 7.வார்சா நகர், 8.ஏழு, 9.பதினான்கு,10.53 நாடுகள்.
இன்று ஏப்ரல் 18
பெயர் : ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மறைந்த தேதி : ஏப்ரல் 18, 1955 பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார்.இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டை முன்வைத்ததுடன் குவாண்டம் பொறிமுறை, புள்ளியியற் பொறிமுறை (statistical mechanics) மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார்.
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: டிவிட்டரில் இருக்கும் நண்பரின் தூங்கும் நேரத்தை கண்டுபிடிக்கலாம், நம் பேஸ்புக்.
Subscribe to the comments via RSS Feed