அங்கீகாரத்துடன் புதிய இலவச மென்பொருட்களை ஒரே இடத்தில் இருந்து நிறுவலாம்.
ஏப்ரல் 14, 2011 at 2:13 முப 6 பின்னூட்டங்கள்
சாதாரன இலவச மென்பொருள் தறவிரக்க விரும்பினால் கூகிளில்
சென்று தேடி ஒவ்வொரு மென்பொருளாகத்தான் தறவிரக்க வேண்டும்
ஆனால் நமக்கு பயன்படும் அனைத்து இலவச மென்பொருட்களையும்
அங்கீகாரத்துடன் ஒரே இடத்தில் இருந்து எளிதாக நம் கணினியில்
நிறுவலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
புதிதாக அறிமுகமாகிக்கொண்டிருக்கும் அனைத்து பீரிவேர் ( Freeware)
அப்ளிகேசன் பற்றிய தகவல்களும் , எத்தனை பேர் இந்தப்புதிய
மென்பொருளை பயன்படுத்தியுள்ளனர் எப்படி இருக்கிறது என்று
பயன்படுத்திய மக்களின் பின்னோட்டத்துடன் நாம் எளிதாக
அறியலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.freenew.net
இலவச மென்பொருட்களை கொடுக்க பல இணையதளம் இருந்தாலும்
சில நேரங்களில் இவ்வாறான தளங்களில் சென்று தறவிரக்கும் போது
Adware என்று சொல்லக்கூடிய தொல்லைகள் நம் கணினியில்
ஊடுறுவ வாய்ப்பிருக்கிறது. இதற்காக மென்பொருள் உருவாக்கும்
நிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்று தறவிரக்கலாம் அல்லது
இதே போல் நம்பிக்கையாக இருக்கும் தளத்தில் இருந்து இலவச
மென்பொருட்களை எளிதாக தேடி தறவிரக்கலாம். ஆனால் இந்தத்
தளத்தின் மூலம் நேரடியாக குறிப்பிட்ட மென்பொருள் உருவாக்கும்
இணையதளத்திற்கே இணைப்பு கொடுத்து நேரடியாக Install செய்யலாம்.
புதிதாக வெளிவரும் மென்பொருட்களையும் பழைய மென்பொருளின்
புதிய அப்டேசனை தறவிரக்க விரும்பும் அனைவருக்கும் இந்ததளம்
பயனுள்ளதாக இருக்கும்.
எந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.
வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரித்தெடுக்க உதவும் இலவச மென்பொருள்
அனுமதி இல்லாமல் கணினியில் யுஎஸ்பி பயன்படுத்துவதை தடுக்க இலவச மென்பொருள்.
அன்றிலிருந்து இன்று வரை உள்ள மென்பொருள்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தரவிரக்க
வின்மணி சிந்தனை ஆணவமும் கர்வமும் இல்லாமல் இருந்தால் நாம் எப்போதும் வெற்றி அடையலாம்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.மிகவும் உயரமான விமானத்தை உடைய கோவில் எது ? 2.பிறக்க முக்தி தரும் ஊர் எது ? 3.கடவுளை குழந்தையாக பாவித்து வழிபடுவது எந்த முறை ? 4.எத்தனை மாதங்கள் கொண்டது அயனம் ஆகும் ? 5.கோபுரம் என்பது எந்த மொழி சொல் ? 6.கடவுளை நண்பனாக பாவித்து வழிபடுவது எந்த முறை ? 7.இறக்க முக்தி தரும் ஊர் எது ? 8.எத்தனை மாதங்கள் கொண்டது ருது ஆகும் ? 9.பார்க்கவ புராணம் என்று எது அழைக்கப்படுகிறது ? 10.கடவுளை தன்னுடைய ஒரு பகுதியாக பாவித்து வழிபடுவது எந்த முறை ? பதில்கள்: 1.தஞ்சாவூர் பெரிய கோவில்,2.திருவாரூர்,3.வாத்ஸல்ய பாவம், 4.6 மாதம்,5.சமஸ்கிருத சொல்,6.சாக்கிய பாவம், 7.காசி, 8.இரண்டு, 9.விநாயகப்புராணம்,10.சகந்த பாவம்.
இன்று ஏப்ரல் 14பெயர் : இரமண மகரிஷி மறைந்த தேதி : ஏப்ரல் 14, 1950 தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதி ஆவார். அத்வைத வேதாந்த நெறியை போதித்த இவர் திருவண்ணாமலையில் வாழ்ந்தவர். இங்கு அமைந்துள்ள, 'ரமண ஆசிரமம்', உலகப் புகழ் பெற்றதாகும். இன்றளவும், ஆன்மமுன்னேற்றம் பெற உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும், பலர் அன்றாடம் இரமணாசரமத்தினை நாடி வந்த வண்ணம் உள்ளனர். உங்களால் இந்தியாவுக்கு பெருமை.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: அங்கீகாரத்துடன் புதிய இலவச மென்பொருட்களை ஒரே இடத்தில் இருந்து நிறுவலாம்..
1.
♠புதுவை சிவா♠ | 3:19 பிப இல் ஏப்ரல் 15, 2011
Thanks winmani
2.
winmani | 4:16 பிப இல் ஏப்ரல் 15, 2011
@ ♠புதுவை சிவா♠
மிக்க நன்றி
3.
வித்யாசாகர் | 10:19 முப இல் ஏப்ரல் 16, 2011
எப்பொழுதுமே நன்றிக்குரிய தளம் உங்களுடைய தளம். தொடர்ந்து செயற்படுங்கள், வெற்றி நமதே..
நன்றியும் வாழ்த்துக்களோடும்..
வித்யாசாகர்
4.
winmani | 6:03 பிப இல் ஏப்ரல் 16, 2011
@ வித்யாசாகர்
மிக்க நன்றி
5.
Dinesh | 2:36 பிப இல் ஏப்ரல் 18, 2011
பயனுள்ள தளம்… வாழ்த்துக்கள்… இதை போல http://www.ninite.com என்று ஒரு தளம் உள்ளது.
6.
winmani | 10:30 பிப இல் ஏப்ரல் 18, 2011
@ Dinesh
மிக்க நன்றி