Indian Premier League – IPL T20 அனல் பறக்கும் கிரிக்கெட் போட்டியை யூடியுப் மூலம் நேரடியாக பார்க்கலாம்.
ஏப்ரல் 12, 2011 at 11:07 பிப 2 பின்னூட்டங்கள்
உலக அளவில் அனைத்து நாட்டு வீரர்களும் ஒவ்வொரு மாநிலத்திற்காக
விளையாடும் IPL T20 கிரிக்கெட் போட்டியை யூடியுப் இணையதளம்
நேரடியாக வர்ணனையுடன் வழங்குகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
உலககோப்பை வெற்றியை இந்தியா ருசித்தற்கு முக்கிய காரணமாக
கருதப்படும் இந்த IPL T20 கிரிக்கெட் போட்டியின் அனைத்து
விளையாட்டுகளையும் நேரடியாக நம் கண் முன் காட்டி உலக
அளவில் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பதற்காக யூடியுப்
கிரிக்கெட் போட்டியை இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
இணையதள முகவரி : http://www.youtube.com/indiatimes
இந்தத்தளத்திற்கு சென்று நாம் IPL T20 கிரிக்கெட் போட்டியை
நேரடியாக இணையதளம் வழியாக கண்டு ரசிக்கலாம். கடந்த
மேட்ச் பற்றிய விபரங்களும் ஸ்கோர்போர்டு பற்றிய உடனுக்கூடன்
விபரங்களும் அடுத்த மேட்ச் எப்போது என்பது பற்றிய அனைத்து
தகவல்களுடன் இத்தளம் உள்ளது. ஒவ்வொரு போட்டி முடிந்ததும்
அதற்கான சிறப்பு Full Match Highlights வீடியோவுடன் காட்டப்படுகிறது.
எப்போது எந்த நேரம் வேண்டுமானாலும் அந்த வீடியோவை
சொடுக்கி பார்த்துக்கொள்ளலாம். உலக அளவில் அனைத்து
கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
சுதந்திர மென்பொருள் டாப் 5 – 3D Realtime விளையாட்டு இலவசம்.
கணினியில் வந்திருக்கும் புது விளையாட்டு என்ன என்பதை வீடியோவுடன் அறியலாம்.
விளையாட்டு செய்திகளை உங்கள் பிளாக்-ல் தெரிய வைப்பது எப்படி
ஒரே இடத்தில் ஆயிரம் அறிவை வளர்க்கும் விளையாட்டுகள்
வின்மணி சிந்தனை வெற்றி கிடைக்கும் போது அதிக மகிழ்ச்சியை காட்டாமலும் தோல்வி அடையும் போது வேதனை அடையாமலும் இருப்பது நம் மனதிற்கும் உடலுக்கும் நல்லது.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.அயர்லாந்து நாட்டின் மொழி என்ன ? 2.பனாமா நாட்டின் மொழி என்ன ? 3.பாட்டில் என்ற சொல் எந்த சொல்லில் இருந்து உருவானது ? 4.கம்போடியா நாட்டின் மொழி என்ன ? 5.ஆஸ்திரியா நாட்டின் மொழி என்ன ? 6.கிரேக்க மொழியில் முதல் எழுத்து என்ன ? 7.உருகுவே நாட்டின் மொழி என்ன ? 8.நார்வே நாட்டின் மொழி என்ன ? 9.கிரேக்க மொழியின் கடைசி எழுத்து என்ன ? 10.அல்பேனியா நாட்டின் மொழி என்ன ? பதில்கள்: 1.ஐரீஸ்,2.ஸ்பானிஷ்,3.கிரேக்க சொல்லில் இருந்து,4.க்மெர், 5.ஜெர்மன்,6.ஆல்பா, 7.ஸ்பானிஷ், 8.நார்வேஜியன், 9.ஒமேகா,10.அல்பேனியன்.
இன்று ஏப்ரல் 12
பெயர் :பிராங்கிளின் டெலானோ ரூஸ்வெல்ட் மறைந்த தேதி : ஏப்ரல் 12, 1945 32வது ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர். அரசுத் தலைவராக 1933 முதல் 1945 வரை நான்கு முறை இவர் தெரிவுசெய்யப்பட்டார். இரு தடவைகளுக்கு மேல் அமெரிக்கத் தலைவராகத் தெரிவுசெய்யட்டவர் இவர் ஒருவரே. உலகளாவிய பொருளாதார நெருக்கடி, மற்றும் இரண்டாம் உலகப்போர் ஆகியவற்றில் நேரடிப் பங்கு வகித்தவர். ஐக்கியஅமெரிக்காவின் மூன்று முக்கிய குடியரசுத் தலைவர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்.
1.
stalin | 7:12 பிப இல் ஏப்ரல் 14, 2011
ஆகா அசத்திடீங்க ரொம்ப நன்றி
2.
winmani | 2:57 முப இல் ஏப்ரல் 15, 2011
@ stalin
மிக்க நன்றி