பேஸ்புக்-ல் தற்போது எது பிரபலமாகி வருகிறது நொடியில் அறியலாம்.
ஏப்ரல் 11, 2011 at 2:39 முப 4 பின்னூட்டங்கள்
500 மில்லியன் பேஸ்புக் பயனாளர்கள் தற்போது அதிகமாக எதைப்
பற்றி பேசுகின்றனர் என்பதை நொடியில் அறிந்து கொள்ளலாம்
நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.

படம் 1
சமூக வலைதளங்களில் அனைவரும் பயன்படுத்தும் முதல் தளமாக
அனைத்து நாடுகளிலும் வலம் வந்து கொண்டிருக்கும் பேஸ்புக்-ல்
நாம் கொடுக்கும் வார்த்தைப்பற்றி என்ன பேச்சு நடைபெறுகிறது
என்பதை நமக்கு துல்லியமாக எடுத்துக் கூற ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://trends.booshaka.com
இந்த்தளத்திற்கு சென்று நாம் என்ன வார்த்தையைப்பற்றிய தகவல்களை
தெரிந்து கொள்ள வேண்டுமோ அந்த வார்த்தையை கொடுத்து Search
என்ற பொத்தானை அழுத்தியதும் அடுத்து வரும் திரையில் நாம் கொடுத்த
வார்த்தைப்பற்றி தற்போது பேஸ்புக்-ல் என்ன பேச்சு நடைபெறுகிறது
என்பதை நொடியில் அறியலாம். இதைத்தவிர News , Music , Sports,Politics
Gossip,TV,Fashion,Movies,Deals,Travel,Brands,Games போன்ற எந்தத்துறை
சார்ந்து தேட வேண்டுமோ அந்தத்துறையை தேர்ந்தெடுத்து எளிதாக
தேடலாம். பேஸ்புக்-ல் நடக்கும் தகவல்களை நொடியில் தெரிந்து
கொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக
இருக்கும்.
LCD திரையில் பழுது இருக்கிறதா என்று நொடியில் கண்டுபிடிக்கலாம்.
புதுமையாக எந்த நாட்டு நேரத்தையும் ஒரே நொடியில் பார்க்கலாம்.
உங்கள் புகைப்படத்துக்கு அழகான சட்டகம் வடிவமைக்கலாம் நொடியில்.
அனைத்து கணித வகைகளுக்கும் (அல்ஜிப்ராவில் இருந்து ட்ரிகினாமெண்டிரி வரை) தீர்வு நொடியில்
வின்மணி சிந்தனை நல்ல மனிதர்கள் அடுத்தவருக்கு பயன்படும் நல்ல செய்தியை பிரபலப்படுத்த விரும்புவர்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.உலகின் முதல் திரைப்படக் கல்லூரி எங்கு ஆரம்பிக்கப்பட்டது ? 2.சுருக்கெழுத்து முறையை அறிமுகப்படுத்தியவர் யார் ? 3.தென்னை மரத்தில் ஏற கற்றுக்கொடுக்கும் கல்லூரி இருக்கும் மாநிலம் எது ? 4.சென்னையில் சட்டக்கல்லூரி எப்போது ஆரம்பிக்கப்பட்டது ? 5.முதல் புத்தகசாலையை நிறுவியவர் யார் ? 6.கப்பல் பயிற்சிப்பள்ளி முதன் முதலாக எந்த நாட்டில் ஆரம்பிக்கப்பட்டது ? 7.விஸ்வபாரதி பல்கலைக் கழகத்தை தொடங்கியவர் யார் ? 8.எடிமாலஜி என்ற சொல்லின் பொருள் என்ன ? 9.1000 ஆண்டுகளுக்கு முந்தைய பல்கலைக்கழகம் எங்கு உள்ளது? 10.இந்தியாவின் மிகப்பழமையான மருத்துவக்கல்லூரி எது ? பதில்கள்: 1.மாஸ்கோ,2.சர் ஐசக் பிட்மேன்,3.கேரளா,4.1981, 5.எகிப்து மன்னர் டாலமி,6.போர்ச்சுக்கல், 7.ரவிந்திரநாத் தாகூர், 8.இலக்கணம், 9.கெய்ரோ நகரில்,10.சென்னை மருத்துவக்கல்லூரி.
இன்று ஏப்ரல் 11பெயர் : ஓட்டோ கொலொமன் வாக்னர் , மறைந்த தேதி : ஏப்ரல் 11, 1995 இவர் ஒரு ஆஸ்திரியக் கட்டிடக்கலைஞர் ஆவார். 1864 ஆம் ஆண்டில் தனது முதலாவது கட்டிடத்தை, வரலாற்றியப் பாணியில் (historicist style) வடிவமைத்தார். ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் என்னும் நாடுகளைச் சேர்ந்த சமகாலக் கட்டிடக்கலைஞர்களைப் போல் இவரும் கட்டிடக் கலைசார் இயல்பியத்தின் (Architectural Realism) ஆதரவாளராக இருந்தார்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: பேஸ்புக்-ல் தற்போது எது பிரபலமாகி வருகிறது நொடியில் அறியலாம்..
1.
பலே பிரபு | 12:59 பிப இல் ஏப்ரல் 13, 2011
அருமை.
2.
winmani | 8:24 பிப இல் ஏப்ரல் 13, 2011
@ பலே பிரபு
மிக்க நன்றி
3.
nagendren | 2:30 பிப இல் ஏப்ரல் 22, 2011
very good
4.
s.kandasamy | 2:53 பிப இல் ஒக்ரோபர் 31, 2011
thanking