இணையதள சோதனைக்கு Sample Content கொடுக்கும் இணையதளம்.
ஏப்ரல் 10, 2011 at 2:24 முப 1 மறுமொழி
புதிதாக இணையதளம் ஆரம்பிக்க வேண்டும் என்ற உடன் உடனடியாக
வடிவமைப்பில் செல்லும் போது நமக்கு இணையதளத்தின்
முழுமையான Content கிடைத்திருக்காது இதற்காக நாம் ஒவ்வொரு
தளமாக சென்று Sample Content தேடவேண்டும் நமக்கு Sample
Content கொடுப்பதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.

படம் 1
புதிதாக ஒரு இணையதளம் உருவாக்குவதும் வீடு கட்டுவதைப்
போல எங்கு எதை அமைத்தால் நன்றாக இருக்கும், என்று நாம்
பார்த்து பார்த்து வடிவமைத்துக்கொண்டிருக்கும் போது நமக்கு
தேவைப்படும் web content கொடுக்க ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.fillerati.com
இத்தளத்திற்கு சென்று பலதரப்பட்ட புத்தக ஆசிரியர்களின் முக்கிய
Content நமக்கு எளிதாக கிடைக்கும்.வெவ்வெறு விதமான ஃபார்மட்
களிலும் நமக்கு கிடைக்கும். (headings, lists and plain text) இதில்
எந்த மாதிரி பார்மட்டில் நமக்கு Content வேண்டுமோ அதை
தேர்ந்தெடுத்துவிட்டு படம் 1-ல் காட்டியபடி இருக்கும் கட்டத்தை
சொடுக்கி Sample Content காப்பி செய்து நம் தளத்தில் சோதனைக்காக
பயன்படுத்தலாம். இணையதள வடிவமைப்பாளர்களுக்கும் புதிதாக
இணையதளம் ஆரம்பிக்க விரும்புபவர்களுக்கும் இந்தப்பதிவு
பயனுள்ளதாக இருக்கும்.
இலத்தீன் மொழியில் இணையதளமுகவரி தொடக்கம் மெகா சாதனை
இண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி
ஒரே நிமிடத்தில் எந்த இணையதளத்தையும் பிடிஎப் கோப்பாக சேமிக்கலாம்.
சுருக்கப்பட்ட இணையதள முகவரியின் உண்மையான முகவரியை கண்டுபிடிக்கலாம்.
வின்மணி சிந்தனை புதிதாக பேச செல்பவர்கள் எதையும் ஒரு தடவைக்கு மறுதடவை யோசித்து சென்றால் சிறப்பாக பேசலாம்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.இரயிலில் இயங்கும் மருத்துவமனையை ஆரம்பித்த நாடு எது ? 2.மயக்கம் மருந்து மருத்துவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார் ? 3.டிப்திரியா நோய் நம் உடலின் எந்தப்பகுதியை தாக்குகிறது ? 4.கண் சோர்வான நிலைக்கு என்ன பெயர் ? 5.முதல் சீறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை எந்த ஆண்டு நடைபெற்றது ? 6.எக்ஸ் கதிர்களால் மூளைப்படம் எடுப்பதற்கு என்ன பெயர் ? 7.சூரிய ஒளி மூலம் மருத்துவம் செய்யும் முறைக்கு என்ன பெயர் ? 8.பார்வை மந்தம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ? 9.புண் , காயம் இவைகளை சுத்தப்படுத்த எந்த கெமிக்கல் பயன்படுகிறது ? 10.ஊசிப்போடும் முறையைக் கண்டுபிடித்தவர் யார் ? பதில்கள்: 1.இந்தியா,2.அனஸ்தெதிஸ்ட்,3.தொண்டை,4.ஆஸ்தியோப்பியா, 5.சூடென்டான்,6.என்செபலோ கிராபி, 7.ஹீலியா தெரபி, 8.ஆம்பிலியோப்பியா, 9.ஹைட்ரஜன் பெராக்சைடு, 10.பிரான்சிஸ் ரிண்ட்.
இன்று ஏப்ரல் 10பெயர் : மொரார்ஜி தேசாய் , மறைந்த தேதி : ஏப்ரல் 10, 1995 இந்திய விடுதலைப்போராட்ட வீரரும், இந்திய பிரதமரும், இந்திய அரசியல்வாதியும் ஆவார். இவரே இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சாராத முதல் இந்தியப்பிரதமர் ஆவார். இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பாரதரத்னா -வையும் பாகிஸ்தான் குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான நிசான்-இ-பாகிஸ்தானையும் பெற்ற ஒரே இந்தியர்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: இணையதள சோதனைக்கு Sample Content கொடுக்கும் இணையதளம்..
1.
anandakumar | 1:30 பிப இல் ஏப்ரல் 12, 2011
new