உலகின் அழகான நகரங்களின் புகைப்படங்களை High Resolution -ல் முப்பரிமானத்தில் பார்க்கலாம்.
மார்ச் 29, 2011 at 1:45 முப 8 பின்னூட்டங்கள்
உலகின் எந்த நாட்டிற்கு , எந்த நகரத்திற்கு சுற்றுலா செல்ல வேண்டுமோ
அந்த இடங்களை High Resolution படங்களாகவும் இதைப்பற்றிய மேப்
மற்றும் கூடுதல் விபரங்கள் சொல்ல ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்
தான் இந்தப்பதிவு.

படம் 1
வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் முன் அந்த நாட்டின் பல
தகவல்கள் நாம் தெரிந்து வைத்துக்கொள்வோம். மேப் மட்டும்
வைத்துக்கொண்டு அதன் அழகை நாம் ரசிக்க முடியாது என்பதற்காக
ஒவ்வொரு நாட்டின் முக்கிய நகரங்கள் முக்கிய இடங்கள்
ஆகியவற்றின் படங்களை நமக்கு கொடுக்க ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://toursfromabove.com
இந்த்தத்தளத்திற்கு சென்று நாம் எந்த நாட்டிற்கு எந்த நகரத்த்திற்கு
செல்லவேண்டுமோ அதை இத்தளத்தில் இடது பக்கம் இருக்கும்
Browse other Tours என்பதை சொடுக்கி தேர்ந்தெடுத்தால் மட்டும்
போதும் அடுத்து வரும் திரையில் நாம் தேர்ந்தெடுத்த நகரங்களின்
அழகான புகைப்படங்கள் காட்டப்படும்.அதில் எந்த இடம்
பிடித்திருக்கிறதோ அந்த இடத்தின் படத்தை சொடுக்கி High Resolution -ல்
பார்க்கலாம். இதில் இருக்கும் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால்
நாம் பார்க்கும் படத்தை முப்பரிமானத்தில் சுற்றி பார்க்கலாம்.
map என்பதை சொடுக்கி அந்த இடத்தைப் பற்றிய மேலும்
விபரங்களை தெரிந்து கொள்ளலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு நம்
அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
உலகின் மிகப்பெரிய மீயூசியம் சுற்றிப்பார்க்க இந்தநிமிடமே கூகிள் இலவசமாக அழைத்து செல்கிறது.
உலக அளவில் சுற்றுலா பயணிகளை கவரும் மிகவும் பயனுள்ள இணையதளம்
கூகுளின் 3D டெஸ்க்டாப் டெக்னாலஜி அறிமுகம் ஸ்பெஷல் வீடியோ
3D விளையாட்டை எந்த கண்ணாடியும் அணியாமல் பார்க்கலாம் புதிய அதிசயம்
வின்மணி சிந்தனை மனதில் அன்பு இருந்தால் தான் சுற்றுலா சென்றாலும் நாம் அனைவரிடமும் நன்றாக பழக முடியும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.விமானப்படை தினம் எந்த நாள் கொண்டாடப்படுகிறது ? 2.உலக எழுத்தறிவு தினம் எந்த நாள் கொண்டாடப்படுகிறது ? 3.உலகமனிதஉரிமைகள் தினம் எந்த நாள் கொண்டாடப்படுகிறது? 4.உலக மக்கள் தொகை தினம் எந்த நாள் கொண்டாடப்படுகிறது? 5.தேசிய தபால் தினம் எந்த நாள் கொண்டாடப்படுகிறது ? 6.உலக எழைகள் தினம் எந்த நாள் கொண்டாடப்படுகிறது ? 7.கடற்படை தினம் எந்த நாள் கொண்டாடப்படுகிறது ? 8.உலகசுற்றுலா தினம் எந்த நாள் கொண்டாடப்படுகிறது ? 9.வறுமை ஒழிப்பு தினம் எந்த நாள் கொண்டாடப்படுகிறது ? 10.மருத்துவர்கள் தினம் எந்த நாள் கொண்டாடப்படுகிறது ? பதில்கள்: 1.அக்டோபர் 8, 2.செப்டம்பர் 8, 3.டிசம்பர் 10, 4. ஜூலை 11, 5.அக்டோபர் 10, 6.ஜூன் 28, 7.டிசம்பர் 4, 8.செப்டம்பர் 27, 9.நவம்பர் 1, 10.ஜூலை 1.
இன்று மார்ச் 292007 ஆம் ஆண்டு மார்ச் 29-ம் நாள் கணிதத்திலும் புள்ளியியலிலும் நிகழ்தகவுக் கோட்பாட்டில் தற்காலத்தில் சிறப்பு பெற்று மதிப்பு மிக்க கணிதத்தில் நோபல் பரிசு எனப்படும் நோர்வே நாட்டின் ஏபல் பரிசு தமிழரான சீனிவாச வரதனுக்கு அறிவிக்கப்பட்டது.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: உலகின் அழகான நகரங்களின் புகைப்படங்களை High Resolution -ல் முப்பரிமானத்தில் பார்க்க.
1.
Ram | 6:05 பிப இல் ஏப்ரல் 1, 2011
really really really excellent 🙂
2.
winmani | 6:53 பிப இல் ஏப்ரல் 1, 2011
@ Ram
மிக்க நன்றி
3.
A.s Farook | 2:27 பிப இல் ஏப்ரல் 6, 2011
mikka nantri
4.
winmani | 11:34 பிப இல் ஏப்ரல் 6, 2011
@ A.s Farook
மிக்க நன்றி
5.
JAI | 6:24 பிப இல் ஏப்ரல் 14, 2011
super.
6.
winmani | 2:56 முப இல் ஏப்ரல் 15, 2011
@ JAI
நன்றி
7.
Jai | 6:27 பிப இல் ஏப்ரல் 14, 2011
very interest and useful messages
8.
winmani | 2:56 முப இல் ஏப்ரல் 15, 2011
@ Jai
மிக்க நன்றி