தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் அனைத்து விபரங்களையும் உடனுக்கூடன் கொடுக்கும் அதிகாரப்பூர்வ இணையதளம்.
மார்ச் 25, 2011 at 12:19 பிப 3 பின்னூட்டங்கள்
நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் அனைத்து
முக்கிய விபரங்களையும், எப்படி வாக்களிக்க வேண்டும், வெப்கேமிரா
எங்கு எப்படி அமைக்கப்பட்டு செயல்படுகிறது, தேர்தலில் வாக்காளருக்கு
பணப்பட்டுவாடா செய்தால் ஒவ்வொரு மாவட்டத்திலும் யாரிடம் புகார்
செய்ய வேண்டும். நம் தொகுதியில் நிற்கும் வாக்காளரின் சொத்து
மதிப்பு எவ்வளவு இது போன்ற அனைத்து விபரங்களையும் பொதுமக்கள்
அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு தேர்தல்
ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் செயல்படுகிறது இதைப்
பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
வாக்களிப்பது நம் குடியுரிமை இதை யாருக்காகவும் எதற்காகவும்
எப்போதும் நாம் விட்டுவிடக்கூடாது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின்
அனைத்து விபரங்களையும் கொண்ட அதிகாரப்பூர்வ இணையதள முகவரி :
http://www.elections.tn.gov.in/default.htm
http://www.elections.tn.gov.in/eroll/
http://www.elections.tn.gov.in/AssemblyElections2011.htm
இந்தத்தளத்திற்கு சென்று நமக்கு எந்த வாக்குச்சாவடியில் வாக்கு
இருக்கிறது, நம் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்றும்
ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் சம்பந்தப்பட்ட அனைத்து
புகார்களும் அளிக்க வேண்டிய அதிகாரியின் போன் எண் என்ன
என்பதையும், இன்று வரை யார் எல்லாம் நம் தொகுதியில்
வாக்காளராக நிற்கின்றனர் இவர்களின் சொத்துமதிப்பு உள்ளிட்ட
அனைத்து விபரங்களையும் நாம் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
“தேர்தல் பற்றிய விழிப்புணர்வை” மக்களிடம் பரப்புவதற்காக
தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியீட்டுள்ள வீடியோவையும்
இத்துடன் இணைத்துள்ளோம். நம் தேசத்தின் மேல் நமக்கு
இருக்கும் பற்றை காட்ட கண்டிப்பாக வாக்குரிமை உள்ள நாம்
அனைவரும் இந்தியத்தாயின் மைந்தனாக வாக்களிப்போம்.
வின்மணி சிந்தனை தேசத்தின் ஒற்றுமையை காட்ட ஏழை, பணக்காரன், உயர்வு , தாழ்வு இன்றி அனைவரும் வாக்களிப்போம்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.பாராளுமன்றத்தில் சிறுவர் பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்த ஆண்டு ? 2.உண்மை அறியும் சங்கம் உருவான ஆண்டு ? 3.அம்பேத்கார் மறைந்த ஆண்டு ? 4.முதல் தாழ்த்தப்பட்டோர் மாநாடு நடைபெற்ற ஆண்டு ? 5.சீர்திருத்த பள்ளிச்சட்டம் கொண்டுவந்த ஆண்டு ? 6.மாஸ்கோ அணுவெடிப்பு தடுப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு ? 7.புதுடெல்லியில் ஆசிய நாடுகளின் மாநாடு நடைபெற்ற ஆண்டு? 8.மகாத்மா காந்தி மறைந்த ஆண்டு ? 9.மார்ச் திட்டக்குழுவை நேரு அமைத்த ஆண்டு ? 10.புதுடெல்லியில் முக்கூட்டுறவு உச்சிமாநாடு நடைபெற்ற ஆண்டு ? பதில்கள்: 1.1961,2.1874,3.1956,4.1923,5.1876, 6.1963,7.1949, 8.1948, 9.1950,10.1966.
இன்று மார்ச் 25தினம் : தொலைக்காட்சி நாள் 1954 ஆண்டு மார்ச் 25-ஆம் நாள் முதலாவது வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை RCA நிறுவனம் வெளியிட்டது. 12" திரையளவு கொண்ட இதன் விலை: $1,000.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் அனைத்து விபரங்களையும் உடனுக்கூடன் கொடுக்க.
1.
H@r! | 1:12 பிப இல் மார்ச் 26, 2011
Good info… i enjoyed after search my name…Thanks to shared…
2.
Rathnavel Natarajan | 2:35 பிப இல் மார்ச் 26, 2011
உபயோகமான நல்ல விபரங்கள்.
3.
winmani | 11:20 பிப இல் மார்ச் 26, 2011
@ Rathnavel Natarajan
மிக்க நன்றி