வீடு முதல் அலுவலகம் வரை என்னவெல்லம் தேவையான பொருட்கள் என்பதை சொல்லும் பயனுள்ள தளம்.

மார்ச் 15, 2011 at 2:10 முப 2 பின்னூட்டங்கள்

ஒரு அழகான வீட்டிற்கு அல்லது அலுவலகத்துக்கு என்ன
பொருட்கள் எல்லாம் தேவை, எந்தெந்த நிறுவனங்கள் அந்த
பொருளை உருவாக்குகின்றன என்பதைப் பற்றிய முழுத்
தகவல்களையும் நமக்கு சொல்ல ஒரு தளம் உள்ளது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

புதிதாக ஒரு வீடு வாங்கி குடியேற இருக்கிறோம் என்னென்ன
பொருட்கள் எல்லாம் அத்தியாவசிய தேவை எந்தெந்த
பொருட்கள் இருந்தால் வீடு அழகாகக இருக்கும், முன்னனியில்
இருக்கும் பொருட்களின் நிறுவனங்கள் என்னென்ன இப்படி
பலதரப்பட்ட தகவல்களையும் நமக்கு சொல்லி இந்தத்தளம்
உதவுகிறது.

இணையதள முகவரி : http://householdproducts.nlm.nih.gov

வீட்டிற்கு தேவையான பொருட்களை தனித்தனி வகையாக பிரித்து
கொடுத்து நம் தேடும் நேரத்தை மிச்சப்படுத்துகிறது. டூத் பிரஷ் முதல்
வீட்டில் மாட்டும் படம் வரை இருசக்கர வாகனம் முதல் நான்கு
சக்கரவாகனம் வைத்திருப்பவர்கள் வரை என்னவெல்லாம் கொண்டு
செல்லவேண்டும், எந்த பொருட்கள் எந்த நிறுவனத்தில் தரமானதாக
கிடைக்கும் அதிகமான மக்கள் எந்த நிறுவனத்தின் பொருட்களை
வாங்குகின்றனர் என்ற அனைத்து தகவல்களும் நமக்கு நொடியில்
கிடைக்கும். இதே போல் அலுவலகம் வேறு இடத்திற்கு மாற்ற
வேண்டும் என்றால் எடுத்துச் செல்ல வேண்டிய முக்கியமான
பொருட்களையும் பட்டியலிட்டு காட்டுகிறது இந்ததளம். அடிக்கடி
மறதி ஏற்படும் நம் நண்பர்களுக்கும் வீட்டை அழகுபடுத்த
நினைப்பவர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

ஒரே இடத்தில் அனைத்து பாதுகாப்பான அழகுசாதனப் பொருட்களின் தகவல்கள்

ஒரே இடத்தில் அனைத்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் (User Manual) பயன்பாட்டு புத்தகத்தையும் தரவிரக்கலாம்

நம் வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சார பொருட்களின் மின் அளவை எளிதாக கண்டுபிடிக்கலாம்.

வின்மணி சிந்தனை
பொருள் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை , அருள் 
இல்லாருக்கு அவ்வுலகம் இல்லை , நல்ல மனம்
இல்லாதவருக்கு இரண்டும் இல்லை.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.சேரன்,இளங்கோவடிகள்,சோழன்,பாண்டியன், இவற்றில் 
  பொருந்தா சொல் என்ன ?
2. வெட்சி, கரந்தை, பாலை, நொச்சி, இவற்றில் பொருந்தா
  சொல் என்ன ?
3.வாழ்க, வீழ்க, வெல்க, நடந்த, இவற்றில் பொருந்தா சொல்
  என்ன?
4. ஐயம்,பூமி,புவி,உலகம், இவற்றில் பொருந்தா சொல் என்ன?
5.அரசன் பரிசில் வழங்கினார்கள் - ஒருமைப் பன்மைப் 
  பிழைகளை நீக்குக ?
6.தமிழில் முதன்முதலாக சிலப்பதிகாரமும் மணிமேகலையும்
  சிறந்த காப்பியங்களாக தோன்றின - சந்திப்பிழைகளை நீக்குக?
7.அவனுக்கு சென்ட்ரல் கவர்மெண்டில் பணி கிடைத்தது - 
  பிறமொழி சொற்களை நீக்குக ?
8.பிரதமரின் டி.வி. பேட்டி நாளை வரும் - பிறமொழி 
  சொற்களை நீக்குக ?
9.பூச்சரத்தை படத்தின் அருகாமையில் வை - வழூஉச் சொற்கள்
  அற்ற வாக்கியம் என்ன ?
10.அப்பரடிகள் என்று அழைக்கப்படுபவர் யார் ?
பதில்கள்:
1.இளங்கோவடிகள்,2.பாலை,3.நடந்த, 4.ஐயம்,5.அரசன் பரிசில்
வழங்கினான், 6.தமிழில் முதன்முதலாகச் சிலப்பதிகாரமும் 
மணிமேகலையும் சிறந்த காப்பியங்களாகத் தோன்றின, 
7.அவனுக்கு நடுவண் அரசில் பணி கிடைத்தது, 8.பிரதமரின்
 தொலைக்காட்சி நேர்காணல் நாளை வரும், 9.பூமாலையைப்
 படத்தின் அருகாமையில் வை , 10.திருநாவுக்கரசர்.
இன்று மார்ச் 15 
பெயர் : ஜேம்ஸ் சில்வெஸ்டர் 
மறைந்த தேதி : மார்ச் 15, 1897
19ம் நூற்றாண்டின் சிறந்த கணிதவியலர்களில்
ஒருவர்.கெய்லியுடன் கூட்டாகக் கணித ஆய்வுகள்
செய்தவர்.கெய்லியைப்போல் கணிதத் துறையில்
பல பிரிவுகளிலும் தன் முத்திரையைப் பதித்தவர்.
பேராசிரியர், நல்ல மனிதர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

ஆங்கிலம் தாய்மொழியாக உள்ளவர்களிடம் இருந்து ஆங்கிலம் கற்கலாம். அரிய வகை மேஜிக் ட்ரிக்ஸ் ( Magic Tricks ) வீடியோவுடன் சொல்லி கொடுக்கும் தளம்.

2 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Life Direction Network  |  10:34 பிப இல் மார்ச் 17, 2011

    வாழ்க்கையின் அடித்தளம் பலமாக இருக்க வேண்டுமானால், எதையும் திட்டமிட்டு செய்ய வேண்டும். அப்படி திட்டமிடுவதற்கு வசதியான தகவலை கொடுத்துள்ளீர்கள், நல்ல விசயங்களை பலரிடமும் எடுத்துச் செல்வது இறை தூதர்களின் வேலையாகும். இறைவன் தங்களை ஒரு கருவியாகவே பயன்படுத்தி வருகிறார் என்றே நான் கருதுகிறேன்.

    மறுமொழி
    • 2. winmani  |  1:08 முப இல் மார்ச் 18, 2011

      @ Life Direction Network
      மிக்க நன்றி நண்பரே.

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,745 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

மார்ச் 2011
தி செ பு விய வெ ஞா
« பிப்   ஏப் »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: