ஐபேட்-ல் உங்கள் இணையதளம் எப்படி தெரிகிறது என்று எளிதாக பார்க்கலாம்.
பிப்ரவரி 25, 2011 at 12:57 பிப 2 பின்னூட்டங்கள்
ஐபேட்-ன் வேகமான வளர்ச்சி தற்போது அனைத்து நாடுகளிலும்
ஒரே மாதிரி இருந்து வரும் நிலையில் நம் இணையதளம்
ஐபேட்-ல் சரியாகத்தெரிகிறதா என்று எளிதாக தெரிந்து
கொள்ளலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
நம் இணையதளம் பல சிறப்பம்சம் கொண்டதாக இருந்தாலும் மிக
முக்கியமாக அனைத்து ஐபேட்-களிலும் சரியாக தெரியவேண்டும்
எந்தப்பிழைச்செய்தியும் கொடுக்காமல் தெரிகிறதா என்று ஐபேட்
இல்லாமலே ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்வதற்கு வசதியாக
ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://ipadpeek.com
இந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி இருக்கும்
கட்டத்திற்குள் நம் இணையதள முகவரியை கொடுத்து Enter
பொத்தானை சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில்
நம் இணையதளம் ஐபேட்-ல் எப்படித் தெரியுமோ அப்படி தெரியும்.
இதிலிருந்து நம் தளம் ஐபேட்-ல் சரியாகத் தெரிகின்றதா என்று
எளிதாக சோதித்து பார்த்துக்கொள்ளலாம். எந்த பயனாளர் கணக்கும்
எந்த விளம்பரமும் இல்லாமல் தெரியும் இந்தத்தளம் அனைவருக்கும்
பயனுள்ளதாக இருக்கும்.
ஆப்பிள் அறிமுகப்படுத்தும் 1.5 இன்ஞ் நேனோ ஐபாட் சிறப்பு வீடியோவுடன்
சமையலறையில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபேட் சிறப்பு வீடியோ
காணாமல் போன ஆப்பிள் ஐபோன்,ஐபாட்-ஐ இனி எளிதாக கண்டுபிடிக்கலாம்.
ஐபேட் துணையுடன் யுஎஸ்பி டைப்ரைட்டர் சிறப்பு வீடியோ
ஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்
இரண்டு வயது குழந்தை ஐபேட் பயன்படுத்தும் விநோத விடியோ
வின்மணி சிந்தனை சராசரியாக ஒரு மனிதன் வாழ்நாளை நாட்களில் கணக்கிட்டால் மனிதன் தவறு செய்வது குறையும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.”பரணியைக் கலிங்கத்துப் பாடியவர் ஜெயங்கொண்டார்” இதனை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்கு ? 2.”வளமான வாழ்க்கைகு ஆதாரமாகும் நிலத்தடி நீர்” இதனை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்கு ? 3.”மழை பெறுவதற்கு முக்கிய காரணிகள் மரம் செடி கொடிகள்” இதனை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்கு ? 4.’அகலம்’ பெயர்ச் சொல்லின் வகை அறிக ? 5.புளிப்பு - பெயர்ச்சொல்லின் வகை அறிக ? 6.பந்து - பெயர்ச்சொல்லின் வகை அறிக ? 7.புத்தகம் - பெயர்ச்சொல்லின் வகை அறிக ? 8.ஆண்டு - பெயர்ச்சொல்லின் வகை அறிக ? 9.’கெழீஇய’ என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க ? 10.’படி’ என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரை என்ன ? பதில்கள்: 1.கலிங்கத்துப்பரணியை பாடியவர் ஜெயங்கொண்டார், 2.நிலத்தடி நீர் வளமான வாழ்க்கைக்கு ஆதாரமாகும், 3.மரம் செடி கொடிகள் மழை பெறுவதற்கு முக்கிய காரணிகள், 4.பண்புப் பெயர்,5.பண்புப்பெயர் 6.பொருட்பெயர், 7.பொருட்பெயர், 8.காலப்பெயர், 9.சொல்லிசையளபெடை,10.படித்தல்.
இன்று பிப்ரவரி 25பெயர் : டான் பிராட்மன், மறைந்த தேதி : பிப்ரவரி 25, 2001 சர் டொனால்ட் ஜார்ஜ் பிராட்மன் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகச்சிறந்த மட்டையாளர் என்று பெரும்பாலோரால் ஏற்றுக்கொள்ளப்படுபவர். பிராட்மனின் டெஸ்ட் மட்டையடி சராசரியான 99.94 புள்ளிவிவரப்படி,முக்கிய விளையாட்டுகள் அனைத்திலும் உயரிய சாதனையாகக் கருதப்படுகிறது.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: ஐபேட்-ல் உங்கள் இணையதளம் எப்படி தெரிகிறது என்று எளிதாக பார்க்கலாம்..
1.
ஸிராஜ் | 1:47 பிப இல் மே 24, 2011
நண்பர் வின்மணி,
ஐபோன் 4g -ல் சாதரண சிம் கார்டை உபயோகிக்க முடியுமா? ஏனெனில் “மைக்ரோ சிம்” கார்டுதான் பயன்படுத்த முடியும் என பலரும் சொல்கிறார்கள்.மேலும் தமிழ்நாட்டின் புறநகர் பகுதிகளில் மைக்ரோ சிம் கிடைக்குமா என்பதையும் அறியத் தாருங்கள்
2.
winmani | 12:14 முப இல் மே 25, 2011
@ ஸிராஜ்
நண்பருக்கு நாம் பயன்படுத்தும் சாதாரண சிம்கார்டை சிறியதாக Cut செய்து பயன்படுத்தலாம்
Cut செய்வதற்கு சிறியதாக கருவிகள் கிடைக்கிறது.
மிக்க நன்றி