அனைத்து சர்வதேச நாடுகளின் போன் குறியீட்டு எண்ணை கொடுக்கும் பயனுள்ள தளம்.

பிப்ரவரி 24, 2011 at 3:23 முப பின்னூட்டமொன்றை இடுக

உலகின் எந்த நாட்டிற்கு நாம் phone-ல் பேச வேண்டுமோ அந்த
நாட்டு போன் குறியீட்டு எண்ணை கொடுப்பதற்காக எந்த
விளம்பரமும் இல்லாமல் பிரத்யேகமாக ஒரு தளம்
உருவாக்கப்பட்டுள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

உலகின் அனைத்து நாட்களின் தொலைபேசி குறியீட்டு எண்ணை
கொடுப்பதற்கு பல தளங்கள் இருந்தாலும் நாம் அந்தத் தளத்திற்கு
சென்று தொலைபேசி குறியீட்டு எண்ணை கண்டுபிடிப்பது சற்று
சிரமமான ஒன்று தான். சிரமமே இல்லாமல் எந்த நாட்டின்
தொலைபேசி குறியீட்டு எண்ணையும் நொடியில் அறிந்து கொள்ள
வசதியாக நமக்கு ஒரு தளம் உதவுகிறது.

இணையதள முகவரி : http://www.simplecountrycodes.com

இந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி  Step 1. What
country are you calling? என்பதில் எந்த நாட்டிற்கு நாம் பேச வேண்டுமோ
அதை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். Step 2. What country are you in?
என்பதில் நாம் எந்த நாட்டில் இருந்து கொண்டு பேசவேண்டுமோ
அதை தேர்ந்தெடுத்துக்கொண்டு Lookup Coundry code என்ற
பொத்தானை சொடுக்கினால் அடுத்து வரும் திரையில் நாம்
எந்த நாட்டிற்கான தொலைபேசி குறியீட்டு எண் வேண்டும் என்று
கேட்டோமோ அந்த நாட்டிற்கான குறியீட்டு எண் காட்டப்பட்டிருக்கும்,
எந்த விளம்பரமும் இல்லாமல் நேரடியாக அதுவும் மிக எளிமையாக
உருவாக்கப்பட்டிருக்கும் இந்தத்தளம் நம் அனைவருக்கும்
பயனுள்ளதாக இருக்கும்.

 

உங்கள் மொபைல் அல்லது போன் நம்பரை வைத்து உங்கள் இடத்தை கண்டுபிடிக்கலாம்

நண்பர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தை போன் மூலம் இலவசமாக கூறலாம்.

இரண்டு நிமிடத்தில் மொபைல் போன் மூலம் கண் பரிசோதனை செய்யலாம்

போன் நம்பர் ஞாபகம் வைக்க புதுமையான வழி

டிவிட்டரில் டிவிட் செய்ய இனி போன்கால் போதும் புதிய அதிசயம்.

வின்மணி சிந்தனை
மனதால் நம் எதிரியை வாழ்த்தினால் அவர் மேல் நமக்கும்,
நம் மேல் அவருக்கும் அன்பு பெருகும், பகை விலகும்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.செடி கொடிகள் என்பதன் இலக்கணக் குறிப்பு என்ன ?
2.மாநிதி என்பதன் இலக்கண குறிப்பு என்ன ?
3.மென்மேலும் என்பதன் இலக்கண குறிப்பு என்ன ?
4.இல்வாழ்க்கை வளர்பிறை போல் வளர வேண்டும் இதற்கான
  வினா என்ன ?
5.கலிங்கத்துப்பரணி முதல் குலோத்துங்க சோழனை பாட்டுடைத்
  தலைவனாக கொண்டது இதற்கான வினா என்ன ? 
6.இளமை கல்விக்குரியது இதற்கான வினா என்ன ?
7.ஒரு நாட்டின் முன்னேற்றம் அதன் மொழிநிலையைப் பொருத்தே
  அமையும் இதற்கான வினா என்ன ? 
8.ஒளவையார் ஆத்திச்சூடி பாடினார் இதற்கான வினா என்ன ?
9.’அனந்தனுக்குக் காது ஏது ‘  எவ்வகை வாக்கியம் ?
10.” வேண்டும் சிந்தனை தமிழ் மொழியில் சிறக்க ” இதனை 
   ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்கு ? 
பதில்கள்:
1.உம்மைத்தொகை,2.உரிச்சொற்றொடர்,3.அடுக்குத்தொடர்,
4.இல்வாழ்க்கை எவ்வாறு வளர வேண்டும் ?,5.கலிக்கத்துப்பரணி
யாரை பாட்டுடைத்தலைவனாக கொண்டது ?, 6.இளமை 
எதற்குரியது ?, 7.ஒரு நாட்டின் முன்னேற்றம் எதைப்பொருத்து
அமையும் ?, 8.ஒளவையார் எதனைப் பாடினார் ?, 9.வினா
வாக்கியம்,10.தமிழ் மொழியில் சிந்தனை சிறக்க வேண்டும்.

இன்று பிப்ரவரி 24 
பெயர் : ஆர்.முத்தையா,
பிறந்த தேதி : பிப்ரவரி 24, 1886
தமிழ் தட்டச்சுப் பொறியையும்,தமிழில்தட்டச்சு
செய்வதற்கான தொழிநுட்பங்களையும்
உருவாக்கியவர்.இவர் தமிழ்தட்டச்சுப்பொறியின்
தந்தை என அழைக்கப்படுகிறார்.தமிழுக்கு நீங்கள்
செய்த சேவைக்கு என்றும் நன்றியுடன் இருப்போம்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

லோகோ உருவாக்க நினைப்பவர்களுக்கு உதவும் பயனுள்ள தளம். ஐபேட்-ல் உங்கள் இணையதளம் எப்படி தெரிகிறது என்று எளிதாக பார்க்கலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,745 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

பிப்ரவரி 2011
தி செ பு விய வெ ஞா
« ஜன   மார்ச் »
 123456
78910111213
14151617181920
21222324252627
28  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: