லோகோ உருவாக்க நினைப்பவர்களுக்கு உதவும் பயனுள்ள தளம்.
பிப்ரவரி 23, 2011 at 4:04 முப 3 பின்னூட்டங்கள்
புதிதாக நிறுவனம் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ள
நாம் முதல் வேலையாக செய்வது ”லோகோ” என்று சொல்லக்
கூடிய நிறுவனத்திற்கான ஒரு அடையாள சின்னம் உருவாக்குவது
தான்.இதற்காக பல நிறுவனத்தின் லோகோ தேடிச் சென்று பார்த்து
எப்படி வடிவமைத்திருக்கின்றனர் நாம் இதை விட சிறப்பாக எப்படி
வடிவமைக்கலாம் இது போன்ற பல கேள்விகளுக்கு விடையாக ஒரு
தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
நிறுவனம் ஆரம்பித்தாச்சு ஆனால் இன்று வரை நாம் லோகோ
என்ற ஒன்று வைக்கவில்லை காரணம் நம் நிறுவனத்திற்கு
தகுந்தாற் போல் லோகோ கிடைக்கவில்லை என்று சொல்லும்
அனைவருக்கும் உங்கள் விருப்பபடி நீங்கள் எந்தத்துறை
சார்ந்தவராக இருந்தாலும் உங்களுக்கு உதவுவதற்காக ஒன்றல்ல
இரண்டல்ல 20 இலட்சம் லோகோக்களை நொடியில்
தேடித்தர பிரத்யேகமாக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.seeklogo.com
இந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Search
என்ற கட்டத்திற்குள் எந்த கருவிற்காகன லோகோ உருவாக்க
வேண்டுமோ அந்த வார்த்தையை கொடுத்து Seek என்ற
பொத்தானை சொடுக்கினால் அடுத்து வரும் திரையில் நாம்
கொடுத்த தலைப்பிற்கு தகுந்தபடி பல வகையான லோகோக்கள்
கிடைக்கும் இதிலிருந்து நம் நிறுவனத்தின் லோகோ எப்படி
இருந்தால் நன்றாக இருக்கும் என்ற ஒரு ஐடியாக கிடைக்கும்.
கண்டிப்பாக இந்தப்பதிவு லோகோ உருவாக்க நினைக்கும்
அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
ஆன்லைன் மூலம் நம் நிறுவனத்திற்கு இன்ஸ்டண்ட் லோகோ (Instant Logo) உருவாக்கலாம்.
நம் நிறுவனத்துக்கு ஆன்லைன்-ல் இலவசமாக லோகோ(Logo) நாமே உருவாக்கலாம்
ஒரே நிமிடத்தில் டிவிட்டரைப் போல் லோகோ இலவசமாக உருவாக்கலாம்
வின்மணி சிந்தனை ஒரு நிறுவனத்தின் அடையாளம் அது கொடுக்கும் சேவையிலும் நேர்மையிலும் தான் இருக்கிறது.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.நான் இலக்கணம் படித்தேன் - எவ்வகை வாக்கியம் ? 2.பாரதிக்கு பாரதநாட்டின் மேல் மிகுந்த பற்று - எவ்வகை வாக்கியம் ? 3.பாணியர்கள் முத்தமிழ் வளர்த்தனர் - எவ்வகை வாக்கியம் ? 4.செய்வினைச் சொற்றொடர் உதாரணம் ? 5.செய்வினை சொற்றொடரின் மற்றும் ஒரு உதாரணம் ? 6.செய்யப்பாட்டுவினை சொற்றொடர் உதாரணம் ? 7.பிறவினைத் தொடர் உதாரணம் ? 8.தன்வினை வாக்கியத்தின் உதாரணம் ? 9.மலரும் மணமும் போல - உவமையால் விளக்கப்படும் பொருள் என்ன ? 10.தடங்கண் - என்பதன் இலக்கண குறிப்பு என்ன ? பதில்கள்: 1.செய்தி வாக்கியம்,2.செய்தி வாக்கியம்,3.தனி வாக்கியம், 4.கந்தன் மரம் வெட்டினான்,5.மழைநீரை மக்கள் சேமித்தனர், 6.இளங்கோவடிகளாக் சிலப்பதிகாரம் இயற்றப்பட்டது, 7.மாதவி நடனம் கற்பித்தாள், 8.புதியதோர் உலகம் செய்வோம், 9.ஒற்றுமை, 10.உரிச்சொற்றொடர்.
இன்று பிப்ரவரி 23பெயர் : மைக்கேல் டெல், பிறந்த தேதி : பிப்ரவரி 23, 1965 இவர் டெல் நிறுவனத்தின் (Dell,Inc.)நிறுவனர். டெக்சாசில் பிறந்தவரான டெல் ஒரு செல்வந்த யூதகுடும்பத்தவர்.தனது பதினைந்தாவது வயதில் தன்னால் முடியுமா என்பதைப் பார்ப்பதற்காகவே ஒரு புதிய அப்பிள் II கணினியை முழுவதுமாகக் கழற்றிப் பூட்டினார்.பல்கலைக் கழகத்தில் கற்றுக்கொண்டிருந்த காலத்தில் பி.சி'ஸ் லிமிட்டெட் (PC's Limited) என்ற நிறுவனத்தைத் தனது அறையில் ஆரம்பித்தார். தனது பத்தொன்பதாவது வயதில் கல்வியை நிறுத்தி முழு நேரமாக நிறுவனத்தில் உழைக்கத் தொடங்கினார். 1987 இல் நிறுவனத்தின் பெயரை டெல் கம்ப்யூட்டர் கார்ப்பொரேசன் (Dell Computer Corporation) என மாற்றினார்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: லோகோ உருவாக்க நினைப்பவர்களுக்கு உதவும் பயனுள்ள தளம்..
1.
எஸ்.கே | 3:03 பிப இல் மார்ச் 9, 2011
very useful thank you!
2.
vignesh | 2:38 பிப இல் ஏப்ரல் 9, 2011
hai
3.
winmani | 7:07 முப இல் ஏப்ரல் 10, 2011
@ vignesh
நன்றி