நாம் வரையும் படங்களை ஆன்லைன் மூலம் டிவிட்டரில் பகிர்ந்து கொள்ள.
பிப்ரவரி 22, 2011 at 12:54 முப 2 பின்னூட்டங்கள்
பெயிண்ட் மூலம் நாம் வரையும் பல ஒவியங்கள் வெளியே
தெரியாமலே இருந்துவிடுகிறது இந்த குறையை தீர்ப்பதற்காக
ஆன்லைன் மூலம் நாம் வரையும் ஒவியத்தை எளிதாக
உலகறியச்செய்யலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
கணினியில் பெயிண்ட் மூலம் படம் வரைந்து கொண்டிருக்கும்
நண்பர்களின் முகங்களை வெளியே கொண்டு வரும் ஒரு புதிய
முயற்சியாக ஆன்லைன் மூலம் நாம் வரையும் படங்களை
இலவசமாக வெளிக்கொண்டு வருகிறது ஒரு தளம்.
இணையதள முகவரி : http://penolo.com
இந்தத்தளத்திற்கு சென்று நாம் எந்த வகை பிரஷ் , எந்த அளவில்
வேண்டுமோ அதையும், விரும்பிய வண்ணத்தையும் தேர்ந்தெடுத்துக்
கொண்டு படம் வரையத் தொடங்கலாம். படம் வரைந்து முடித்த பின்
Save & Tweet என்ற பொத்தானை அழுத்தினால் அடுத்து வரும்
திரையில் உங்களின் டிவிட்டர் கணக்கை திறந்து நாம் வரைந்த
புகைப்படத்தை இந்ததளத்திலும் நம்முடன் டிவிட்டரில் இருக்கும்
நண்பருக்கும் தெரியப்படுத்தாலாம், யாருக்கு தெரியும் நாம் வரையும்
கிறுக்கல்கள் கூட சிலருக்கு பயன்படலாம் உங்களுக்கும்
உலக அளவில் நண்பர்கள் கிடைக்க உதவியாக இருக்கும்,
கண்டிப்பாக இந்தப்பதிவு ஒவியம் வரையும் அனைவருக்கும்
பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை மனதை ஒருநிலைப்படுத்தும் பயிற்சியில் ஒவியம் வரைவது முக்கியமான ஒன்று.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.அனலில் விழுந்த புழு போல என்ற உவமையால் விளக்கப்படும் பொருள் என்ன ? 2.தாமரை இலை தண்ணீர் போல என்ற உவமையால் விளக்கப்படும் பொருள் என்ன ? 3.அச்சில் வார்த்தற் போல என்ற உவமையால் விளக்கப்படும் பொருள் என்ன ? 4.நின்றனன் அவ்வழி நிகழ்ந்த தென்னெனில் துன்றுபூஞ் சோலைவாய் அரக்கன் - இதன் சீர்மோனை என்ன ? 5.பாரத பூமி பழம்பெரும் பூமி நீரதன் புதல்வர் இந் நினைவகற் றாதீர் - இதன் இதன் சீர்மோனை என்ன ? 6.பனித்த சடையும் பவளம் போல் மேனியிற்பால் வெண்ணீறும் - இதன் அடி எதுகை என்ன ? 7.பொன்புனை மன்று ளாடும் பொற்கழல்- இதன் மோனை என்ன? 8.துப்பார்க்குத் துப்பாய துப்பாகித் துப்பார்க்குத் - இதன் இயைபினை என்ன ? 9.பிரித்து எழுதுக: கொங்கலர்தார் ? 10.உழவன் நிலத்தை உழுது, விதை விதைத்து, நீர் பாய்ச்சி , உரமிட்டு அறுவடை செய்தார் - எவ்வகை வாக்கியம் ? பதில்கள்: 1.ஆறாத்துயரம்,2.பற்று அற்று இருத்தல்,3.உண்மைத் தன்மை, 4.நின்றனன் - நிகழ்ந்த,5.பாரதப்பூமி - பழம்பெரும்,6.பனித்த- மேனியிற்பால்,7.பொன்புனை - பொற்கழல், 8.துப்பார்க்குத் - துப்பார்க்குத்,9.கொங்கு + அலர் + தார், 10.தொடர் வாக்கியம்.
இன்று பிப்ரவரி 22பெயர் : பேடன் பவல், பிறந்த தேதி : பிப்ரவரி 22, 1857 ஸ்கவுட் எனப்படும் சாரணர் இயக்கத்தை உருவாக்கியவர் ஆவார்.இவர் இங்கிலாந்தில் பிறந்த ஆங்கிலத் தளபதி. 1906ஆம் ஆண்டு சாரணர் இயக்கத்தை தோறுவித்தார். 1910 இல் சிறுமிகள் சாரணர் இயக்கத்தையும் தொடங்கினார்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: நாம் வரையும் படங்களை ஆன்லைன் மூலம் டிவிட்டரில் பகிர்ந்து கொள்ள..
1.
IQBAL | 3:14 முப இல் மார்ச் 8, 2011
பயனுள்ள தகவல்கள் தோழரே !!! தொடருங்கள்
2.
winmani | 3:44 முப இல் மார்ச் 8, 2011
@ IQBAL
மிக்க நன்றி