இ-புத்தகத்தை அழகாக அடுக்கிவைப்பதற்கும் படிப்பதற்கும் உதவும் இலவச அப்ளிகேசன்.
பிப்ரவரி 20, 2011 at 1:39 பிப 5 பின்னூட்டங்கள்
இணையத்தில் கிடைக்கும் இ-புத்தகங்களை நம் கணினியில் சேமித்தால்
மட்டும் போதுமா அதை நூலகத்தில் இருப்பது போலவே எப்படி
வரிசையாக அடுக்கி வைக்கலாம், நினைத்த நேரத்தில் நினைத்த
புத்தகங்களை எடுத்து படிக்கவும் நமக்கு உதவுவதற்காக ஒரு
இலவச மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
இ-புத்தகங்களை படிக்க பல இலவச மென்பொருள் வந்து
கொண்டிருக்கும் நிலையில் இன்று புத்தகங்களை வெறுமனே
படித்தால் மட்டும் போதாது அதை அழகாக நூலகத்தில் இருப்பது
போல் அடுக்கி வைத்து எடுத்து படிப்பதற்கு உதவியாக ஒரு
மென்பொருள் உள்ளது.
தரவிரக்க முகவரி : http://www.koobits.com
இந்தத்தளத்திற்கு சென்று Download now என்ற பொத்தானை சொடுக்கி
இந்த மென்பொருளை இலவசமாக தரவிரக்கலாம், PDF, EPUB, XML,
HTML, KBJ, போன்றஅனைத்து பார்மெட் இபுத்தகங்களையும் துணை
புரியும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு Folder ஆக
இபுத்தகங்களை சேமித்து வைத்து படிப்பதைவிட நம் கணினியில்
இருக்கும் இந்த அப்ளிக்சேனை இயக்கி நூலகத்தில் இருப்பது
போல் ஒரு உணர்வுடன் புத்தகங்களை படிக்க உதவுகிறது,
இபுத்தகம் சேமித்து வைத்திருக்கும் அனைவருக்கும் இந்தப்பதிவு
பயனுள்ளதாக இருக்கும். இதைப்பற்றிய ஒரு சிறப்பு வீடியோவையும்
இத்துடன் இணைத்துள்ளோம்.
வின்மணி சிந்தனை ஒருவர் படிக்கும் புத்தகங்களை வைத்தே அவரின் குண நலன்களை கூறிவிடலாம்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.இந்திய தேர்தல் ஆணையம் எத்தனை உறுப்பினர்களை கொண்ட ஒரு அமைப்பு ? 2.களப்பிரர்களை விரட்டிய பாண்டிய அரசன் ? 3.’நரை முடித்து சொல்லால் முறை தோழன்’ ? 4.இந்தியா விடுதலைப் பெற்ற 50 வது ஆண்டு தொடங்கப்பட்ட திட்டம் ? 5.இமயமலையின் வடகிழக்கு பகுதி 300 செ.மீ அதிகமாக மழை பெற காரணமாக இருக்கும் கிளை ? 6.கெண்டை மீனின் உடலில் உள்ள செதில்கள் ? 7.செல் கொள்கையை உருவாக்கியாவர் ? 8.வட்ட வடிவ ஜீனோம் அல்லாத DNA இவ்வாறு அழைக்கப்படுகிறது ? 9.ஒரி கி.பி.நிறையுள்ள பந்தின் முடுக்கம் 1 மீ.வி^-1 அளவை அடையத்தேவையான விசையை கணக்கிடு? 10.X-கதிரை கண்டறிந்தவர் யார் ? பதில்கள்: 1.3, 2.கடுங்கோன்,3.கரிகாலன்,4.ஒன்பதாம் ஐந்தாண்டுத் திட்டம்,5.வங்காள விரிகுடா கிளை,6.டீனாய்டு,7.ஸ்க்வான், 8.பிளாஸ்மிட்,9.1N, 10.ராண்ட்ஜன் .
இன்று பிப்ரவரி 20பெயர் : கா. நமச்சிவாயம், பிறந்த தேதி : பிப்ரவரி 20, 1876 தமிழகத்தின் சிறந்த புலவராக தமிழறிஞராக விளங்கியவர் தமிழ்ப்பேராசிரியர்.தைத்திங்கள் முதல்நாளைத் தமிழ்த் திருநாளாகக் கொண்டாட வழி செய்தவர்.திருவள்ளுவருக்கு முன் - திருவள்ளுவருக்குப் பின் என தமிழகத்துக்கு ஒரு சகாப்தகால அளவு கிடைக்க வழிவகுத்தவரும் இவரே. இதற்கு உற்ற துணையாக உ.வே.சாமிநாதய்யரும்,மறைமலை அடிகளாரும் இருந்தனர்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: இ-புத்தகத்தை அழகாக அடுக்கிவைப்பதற்கும் படிப்பதற்கும் உதவும் இலவச அப்ளிக.
1.
எஸ்.கே | 5:02 பிப இல் மார்ச் 5, 2011
nice application Thank you!
2.
winmani | 6:51 பிப இல் மார்ச் 5, 2011
@ எஸ்.கே
மிக்க நன்றி
3.
♠புதுவை சிவா♠ | 7:57 முப இல் மார்ச் 8, 2011
Thanks winmani
4.
winmani | 12:48 முப இல் மார்ச் 9, 2011
@ ♠புதுவை சிவா♠
மிக்க நன்றி
5.
ensontham | 3:16 பிப இல் செப்ரெம்பர் 26, 2011
நல்ல பதிவு