எளிதாக வெற்றி இலக்கை அடைய உதவும் பயனுள்ள இணையதளம்.
பிப்ரவரி 17, 2011 at 12:12 பிப 6 பின்னூட்டங்கள்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தங்கள்
வாழ்வின் இலக்கை எந்த வகையில் அமைத்து செயல்படுத்தினால்
வெற்றியை எளிதாக பெறலாம் என்பதைப் பற்றித்தான் இந்தப்பதிவு
தேர்வு நேரம் வரும் போது தான் உலககோப்பை கிரிக்கெட்
போட்டியும் வருகிறது மாணவர்களின் கவனம் பெரும்பாலும்
உலககோப்பை கிரிக்கெட் போட்டியை நோக்கித்தான் செல்கிறது,
படிப்பிற்கு என்ன தான் முக்கியத்துவம் கொடுத்தாலும் கிரிக்கெட்
மீது தான் எண்ணம் செல்கிறது என்றும் சொல்லும் மாணவர்கள்,
ஒரு பேப்பரை எடுத்து கிரிக்கெட் பார்ப்பதினால் ஏற்படும் நன்மை
தீமைகளை எழுதி வைத்து ஒரு முறை அதை பார்த்தாலே அவர்
தேர்வு நேரங்களில் கிரிக்கெட் பார்ப்பதற்கு முக்கியத்துவம்
கொடுக்க மாட்டார், இப்படி பலவிதமான ஐடியாக்களை சொல்லி
நம் வாழ்வின் வெற்றி இலக்கை அடைய நமக்கு ஒரு தளம்
உதவுகிறது.
இணையதள முகவரி : http://www.goalforit.com
இந்ததளத்திற்கு சென்று ஒவ்வொரு வயதிலும் குழந்தைகளின்
behavior எப்படி இருக்கும், பள்ளி மாணவர்களாக இருக்கும் போது
அவர்கள் இலக்கை எப்படி வழிகாட்டலாம் என்பதில் இருந்து
கல்லூரி மாணவராக இருக்கும் போது அவரிடம் எப்படி இலகை
பற்றி கூறலாம் என்பதைப்பற்றிய பல தகவல்கள் கிடைக்கிறது.
மாணவர்கள் மட்டும் அல்ல அனைத்து துறையில் இருப்பவர்களும்
தங்கள் வாழ்வில் இலக்கை வெற்றியாக அமைப்பது எப்படி
என்பதை ஆதாரத்துடன் விளக்குகிறது. இலவசமாக இந்ததளத்திற்கு
சென்று ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கி நம் இலக்கையும்
வாழ்வில் எளிதாக அடையலாம். வாழ்வில் வெற்றியை அடைய
விரும்பும் அனைவருக்கும் கண்டிப்பாக இந்தப்பதிவு பயனுள்ளதாக
இருக்கும்.
வின்மணி சிந்தனை இலக்கை அடைய ஒரே வழி எப்போதும் அதைப்பற்றியே நினைத்து செயல்படுங்கள் வெற்றி நிச்சயம்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.எந்த பூச்சியிடத்தில் நகர்வதற்கு உரிய சிறப்பு உறுப்பு இல்லை? 2.நீலகிரி மலையில் உள்ள முக்குருத்தி தேசிய பூங்கா எதற்கான சரணாலயம் ஆகும் ? 3.1995 ஆம் ஆண்டு உலக பெண்கள் மாநாடு நடந்த இடம் எது? 4.7,4,5,1,7,3,4,6,7 இன் முகடு என்ன ? 5.கருப்பு பருத்திமண் அதிகஅளவில் காணப்படுகிற மாவட்டம் எது? 6.இந்திய ரிசர்வ் வங்கி, வங்கியராகவும் முகவராகவும் செயல்படுவது ? 7.’மின்னனார் வணங்குந் தெய்வம்’ என குறிப்பிடப்பட்ட நபர் ? 8.குதுப்மினாரைக் கட்டத் தொடங்கியவர் யார் ? 9.தமிழ்நாட்டில் எந்த வகையிலான கட்ட கிராம உள்ளாட்சி அரசு செயல்படுகிறன்றது ? 10.இந்தியாவில் உள்ள மாநிலங்களில் பரப்பளவின் அடிப்படையில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தை வகிக்கின்றது ? பதில்கள்: 1.பவளபூச்சி,2.புலி,3.பெய்ஜிங்,4.7,5கோயம்புத்தூர், 6.இந்திய அரசுக்காக,7.குசேலர் மனைவி,8.குத்புதீன் ஐபக், 9.மூன்று, 10.பதினொன்றாவது.
இன்று பிப்ரவரி 17பெயர் : ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, மறைந்த தேதி : பிப்ரவரி 17, 1986 இந்திய தத்துவ மெய்யறிவாளர்களுள் முக்கியமானவர்.உலகளவிலும் முக்கியமான தத்துவ ஆசிரியர்களுள் ஒருவராக மதிக்கப்படுகிறார்.பல நாடுகளிலுள்ள மக்களைச் சந்தித்து சொற்பொழிவுகளையும் கலந்துரையாடல்களையும் நிகழ்த்தினார்.அன்றாட மனிதவாழ்வில் அவனுக்குத் தோன்றும் எண்ணங்களையும் உணர்வுகளையும் விழிப்புணர்வுடன் கவனிப்பதன் மூலம் மனிதன் தன்னையே உருமாற்றிக் கொள்ள முடியும் என்று கூறி வந்தார்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: எளிதாக வெற்றி இலக்கை அடைய உதவும் பயனுள்ள இணையதளம்..
1.
Life Direction Network | 6:04 பிப இல் மார்ச் 7, 2011
வாழ்வை உயர்த்தும் இது போன்ற நல்ல தளங்களை தொடர்ந்து தெரியப் படுத்துங்கள். யாரோ சிலர் மட்டுமே படித்து பயனடையும் தளங்களை அனைவரிடமும் கொண்டு செல்லும் விண்மணியின் இலக்கு விண்ணை தொடட்டும்.
2.
winmani | 9:21 பிப இல் மார்ச் 7, 2011
@ Life Direction Network
மிக்க நன்றி
3.
V.Dharmalingam | 2:15 பிப இல் ஜூன் 29, 2011
வாழ்வை உயர்த்தும் இது போன்ற நல்ல தளங்களை தொடர்ந்து தெரியப் படுத்துங்கள். யாரோ சிலர் மட்டுமே படித்து பயனடையும் தளங்களை அனைவரிடமும் கொண்டு செல்லும் வின்மணியின் இலக்கு விண்ணை தொடட்டும்.
4.
winmani | 2:20 பிப இல் ஜூன் 29, 2011
@ V.Dharmalingam
மிக்க நன்றி
5.
V.Dharmalingam | 2:16 பிப இல் ஜூன் 29, 2011
Very useful msg thanks
6.
winmani | 2:21 பிப இல் ஜூன் 29, 2011
@ V.Dharmalingam
மிக்க நன்றி