மொபைல் மூலம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க உதவும் சோசியல் நெட்வொர்க்
பிப்ரவரி 4, 2011 at 1:21 பிப 8 பின்னூட்டங்கள்
பெருகிவரும் சோசியல் நெட்வொர்க்-ன் வளர்ச்சியில் ஒவ்வொரு
நிறுவனமும் சலுகையை வாரி வழங்கி வருகின்றது. அந்த
வகையில் இன்று புதிதாக வளர்ந்து வரும் சோசியல்
நெட்வொர்க்கான Mobiluck என்பதன் மூலம் இருக்கும்
இடத்துடன் தகவல் பரிமாறிக்கொள்ளும் வசதி வந்துள்ளது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
நண்பர்களுடன் டீக்கடையில் உட்கார்ந்து அரட்டை அடித்து
கொண்டிருக்கும் போது , நாம் இருக்கும் இடத்திற்கு அருகில்
உள்ள நண்பர்களை அழைக்க வேண்டாம் அவர்களும் இந்த
சோசியல் நெட்வொர்க்-ல் பயனாளராக இருந்தால் அவருக்கு
உங்க நண்பர் கந்தசாமி இந்த டீக்கடையில் நண்பர்களுடன்
பேசிக்கொண்டு இருக்கிறார், டீக்கடை 1 கி.மீ தொலைவில்
இருக்கிறது என்ற செய்தியை பகிர்ந்துகொள்ள உதவுகிறது
இந்த சோசியல் நெட்வொர்க்.
இணையதள முகவரி : http://www.mobiluck.com/en/
நம்முடன் இந்த சோசியல் நெட்வொர்க்-ல் உள்ள நண்பர்கள்
ஒவ்வொருவரும் தற்போது எங்கே இருக்கின்றனர் என்ற
தகவலை இலவசமாகவே கொடுக்கிறது. இந்ததளத்திற்கு
சென்று இலவசமாக நமக்கென்று ஒரு பயனாளர் கணக்கு
உருவாக்கிக்கொள்ள வேண்டும். மொபைல்-க்கு என்று
சிறப்பாக உருவாக்கப்பட்ட இந்த சோசியல் நெட்வொர்க்-ல்
200 வகையான மொபைல் மாடல்களுக்கு துணை செய்கிறது.
ஜீடாக் முதல் யாகூ, ஸ்கைப், MSN போன்ற அனைத்து சாட்
ரூம் வசதிகளை பயன்படுத்திக்கொள்ளலாம். புதுமை
விரும்பிகளுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை நல்லது செய்பவர்களிம் கெட்ட எண்ணம் உள்ளவர்கள் நெடுநாள் நட்பு கொள்ள முடியாது.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.மார்ச் திட்டக்குழுவை நேரு அமைத்த ஆண்டு என்ன ? 2.ராஜீவ் காந்தி பிரதமராக நியமிக்கப்பட்ட ஆண்டு என்ன ? 3.புதுடெல்லியில் முக்கூட்டுறவு உச்சிமாநாடு நடைபெற்ற ஆண்டு என்ன ? 4.முதல் ஜெனீவா மாநாடு நடைபெற்ற வருடம் என்ன ? 5.மாஸ்கோ அணுவெடிப்பு தடுப்பு ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு என்ன ? 6.26 வது சட்டத்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு என்ன ? 7.சூயஸ் கால்வாய் எகிப்து உடமையான ஆண்டு என்ன ? 8.பொதுத்தேர்தலில் மொரார்ஸி பிரதமரான ஆண்டு என்ன ? 9.பாட்னா பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு என்ன ? 10.கிரிப்ஸ் திட்டம் வெளியான ஆண்டு என்ன ? பதில்கள்: 1.1950, 2.1984,3.1966,4.1954, 5.1963, 6.1971, 7.1956, 8.1977, 9.1918, 10.1929.
இன்று பிப்ரவரி 4பெயர் : கே.ஆர்.நாராயணன், பிறந்த தேதி : பிப்ரவரி 4, 1921 பத்தாவது இந்தியக் குடியரசுத் தலைவர். இவர் இப்பொறுப்பை வகித்த ஒரே தலித்தும் மலையாளியும் ஆவார்.குடியரசுத் தலைவர் பதவிக்கே பெருமை சேர்த்தவர்.சமூக நீதியின் காவலர்.இந்திய அரசு இன்றும் இவரது பெயரால் விருது வழங்கி சிறந்த சாதனையளர்களை ஊக்குவிக்கிறது. PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: மொபைல் மூலம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க உதவும் சோசியல் நெட்வொர்க்.
1.
♠புதுவை சிவா♠ | 5:23 பிப இல் பிப்ரவரி 14, 2011
Thanks winmani
2.
winmani | 8:44 பிப இல் பிப்ரவரி 14, 2011
@ ♠புதுவை சிவா♠
மிக்க நன்றி
3.
ஆகாய மனிதன்... | 5:41 பிப இல் பிப்ரவரி 14, 2011
காலமெல்லாம் காதல்,
வாழ்க வளமுடன் !
4.
facebook | 11:15 பிப இல் பிப்ரவரி 17, 2011
i love it
5.
Mohammed Ramees | 11:28 பிப இல் பிப்ரவரி 24, 2011
thanks……………..
6.
durai | 8:48 பிப இல் நவம்பர் 7, 2011
romba payanulla thalam.nanri..
7.
winmani | 10:42 பிப இல் நவம்பர் 7, 2011
@ durai
மிக்க நன்றி
8.
durai | 8:50 பிப இல் நவம்பர் 7, 2011
thanks