நாளை செய்ய வேண்டிய வேலையை நிர்வகிக்க உதவும் Effective Task Reminder.

திசெம்பர் 23, 2010 at 1:12 முப 4 பின்னூட்டங்கள்

நாளை செய்ய வேண்டிய வேலையை குறித்து வைத்துக்கொள்ள
நமக்கு உதவுவது Remainder Note தான் என்றாலும் பல நேரங்களில்
எழுதி வைக்க நேரமில்லை , சில நேரங்களில் எழுதிவைத்ததை
படிக்க நேரமில்லை என்று சொல்லும் அனைவருக்கும் உதவுவதற்காக
ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

செய்ய வேண்டிய வேலைகளை குறிப்பெடுத்து வைத்துக்கொண்டு அந்த
வேலையை பற்றிய விபரங்களை அந்தந்த நாளில் நமக்கு இமெயிலில்
தெரிவிக்க ஒருத்தர் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று
எண்ணும் அனைவருக்கும் உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://pleasenotify.me

” தயவு செய்து எனக்கு ஞாபகப்படுத்து “ இது தான் இணையதளத்தின்
பெயர். இந்ததளத்திற்கு சென்று நாம் நம் இமெயில் முகவரியினை
கொடுத்து என்ன வேலை எந்த நாள் செய்ய வேண்டும் என்பதையும்
வேலை பற்றிய விபரங்களையும் தட்டச்சு செய்து  எந்த இமெயில்
முகவரிக்கு ஞாபகப்படுத்த வேண்டுமோ அந்த இமெயில் முகவரியும்
கொடுத்து Send என்ற பொத்தானை அழுத்த வேண்டும் அருகிலே
Email -லில் எப்படி வரும் என்பதற்கான Preview -ம் கொடுக்கின்றனர்
எளிமையான முகப்பு பக்கத்தை கொண்டு வலம் வருகிறது.
இப்போது நாம் யாரிடம் பேசினாலும் எனக்கு இமெயிலில் ஒருமுறை
ஞாபகப்படுத்து என்று கூறும் அனைவருக்கும் இந்தத்தளம்
பயனுள்ளதாக இருக்கும்.

வின்மணி சிந்தனை
மரியாதையை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு மறக்காமல்
சொல்லி கொடுக்க வேண்டும்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.ஆப்பிள் செயற்கைக் கோள் எந்த ஆண்டு விண் வெளியில்
  ஏவப்பட்டது ?
2.100 ஆண்டுகளுக்கு மேல் நடத்தப்பட்டு நின்று போன 
  நாளேடு எது?
3.மெஸ்மரிசத்தை கண்டுபிடித்தவர் யார் ?
4.தேனின் வேறு பெயர் என்ன ?
5.நகம் வெட்டும் போது ஏன் வலிப்பதில்லை ?
6.தமிழில் தோன்றிய முதல் நாவல் பெயர் என்ன ?
7.மந்த வாயூவுக்கு இன்னொரு பெயர் என்ன ?
8.கம்யூனிஸ்டுகளின் பைபிள் என்று கூறப்படும் நூல் எது ?
9.நான்காம் எஸ்டேட் என்பது என்ன ?
10.மலேரியாவைப் பரப்பும் ஒருவகை கொசுவின் பெயர் என்ன ?
பதில்கள்:
1.1981,2.The Mail,3.மெஸ்மர், 4.கொங்கு,
5.நரம்பு மண்டலத்துடன் தொடர்பு இல்லை,6.மாயூரம்,
7.ஹீலியம், 8.மூலதனம், 9.பத்திரிகைகள்,10.அனோபிலிஸ்.
இன்று டிசம்பர் 23 
பெயர் : பி. வி. நரசிம்ம ராவ்
மறைந்த தேதி : டிசம்பர் 23, 2004
இந்தியாவின் ஒன்பதாவது பிரதமர். ஆந்திர
மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய 
காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்.தென் 
இந்தியாவைச் சேர்ந்த முதல் இந்தியப் 
பிரதமர். இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான ராவ்,
1962 முதல் 1971 வரை மத்திய அமைச்சரவையில் 
பங்கு வகித்ததுடன் 1971 முதல் 1973 வரை ஆந்திரப்
பிரதேச மாநிலத்தின் முதல்வராகவும் பதவி வகித்துள்ளார்.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

மொபைல்,மோடம், பிரிண்டர் என அனைத்து வகை Device -க்கும் Driver ஒரே இடத்தில் பதிலீடாக (alternative) உள்ளதை தேடிக் கொடுக்கும் பயனுள்ள இணையதளம்.

4 பின்னூட்டங்கள் Add your own

  • 1. எஸ்.கே  |  2:39 முப இல் திசெம்பர் 28, 2010

    மிக அருமை! நன்றி!

    மறுமொழி
    • 2. winmani  |  2:58 முப இல் திசெம்பர் 28, 2010

      @ எஸ்.கே
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 3. mukunth  |  12:07 பிப இல் திசெம்பர் 28, 2010

    How it is better than google calendar which gives multiple reminder option including SMS?

    Please explain

    மறுமொழி
    • 4. winmani  |  12:12 பிப இல் திசெம்பர் 28, 2010

      @ mukunth
      கூகிள் கொடுக்கும் சலுகைகள் முன் இது ஒன்றும் பெரிதாக இல்லை என்றாலும் எளிமையாக யார் வேண்டுமானாலும் எந்த பயனாளர் கணக்கும் இல்லாமல் ரீமைண்டர் செய்து வைக்கலாம் என்பது தான் இதன் சிறப்பு.
      நன்றி

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,746 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

திசெம்பர் 2010
தி செ பு விய வெ ஞா
« நவ்   ஜன »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: