பிராஜெக்ட் செய்யும் கல்லூரி மாணவர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் உதவும் வி-பேப்பர்ஸ்

திசெம்பர் 7, 2010 at 1:12 பிப 4 பின்னூட்டங்கள்

என்ஜினியரிங் ( Engineering ) மாணவர்கள் முதல் அனைத்து கல்லூரி
மாணவர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் உதவும் வகையில்
விபேப்பர்ஸ் ( We Papers) என்று ஒரு தளம் உள்ளது இந்ததளத்தில்
நம் பாட சம்பந்தமான பல டாக்குமெண்டுகளையும் தொழில்
சம்பந்தமான பல தகவல்களை தேடிப்பார்க்கலாம், நம்மிடம் இருக்கும்
தகவல்களை சேமித்தும் வைக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

Agriculture முதல் Computer Science வரை , Arts and Humanities முதல்
Engineering வரை மொத்தம் 42 துறை சார்ந்த பல கட்டுரைகள் மற்றும்
பிராஜெக்ட் ரிப்போர்ட்கள் என பல அறிய தகவல்கள் இந்ததளத்தில்
கிடைக்கிறது. செமினார் முதல் பிஸினஸ் வரை அனைத்துக்கும் நாம்
பல தகவல்களை இங்கு இருந்து தெரிந்து கொள்ளலாம் நமக்கு
உதவுவதற்காக இந்த தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.wepapers.com

இந்ததளத்திற்கு சென்று எந்தத்துறையில் நாம் படிக்கிறோமோ அந்தத்
துறையை அல்லது எந்ததுறையைப்பற்றி விரிவான தகவல்கள்
வேண்டுமோ தேர்ந்தெடுத்துக்கொண்டு சொடுக்கவும் அடுத்து வரும்
திரையில் நாம் தேர்ந்தெடுத்தத் துறையில் பேராசிரியரின் கட்டுரைகள்
முதல் அந்த்துறைப்பற்றி உள்ள அத்தனை கட்டுரைகளும் எளிதாக
கிடைக்கும்.பிடிஎப் , வேர்டு , எக்சல், பவர்பாயிண்ட் என அனைத்து
வகையான கோப்புகளையும் இது தேடி கொடுக்கும் கூடவே நாம்
எந்தத்துறை என்று தெரியாவிட்டாலும் Search என்பதில் என்ன
வேண்டுமோ அதை கொடுத்தும் தேடலாம். இத்தளத்தில் நமக்கு
ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கி நம்மிடம் இருக்கும் பிராஜெக்ட்
தகவல்களையும் பதிவேற்றம் செய்யலாம். பிராஜெக்ட் தகவல்கள்
அனைத்தையும் ஒரே இடத்தில் கொடுக்கும் இந்த்தளம் நம்
அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

வின்மணி சிந்தனை
அரை குறை வித்தைகள் படித்தவனின் வேலை
அனுபவசாலியின் முன் எடுபடாது.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இந்தியாவின் முதல் பெண் டாக்டர் யார் ? 
2.எந்த வைட்டமின் குறைபாடினால் மாலைக்கண் நோய் 
 எற்படுகிறது ?
3.தன்னமிக்கையை அதிகரிக்க என்ன பூ பயன்படுத்தப்படுகிறது ?
4.மழையின் அளவை கணக்கிடஉதவும் கருவியின் பெயர் என்ன?
5.திட்டக்கமிஷன் எப்போது துவக்கப்பட்டது ?
6.கருப்பு மான்கள் எவ்வளவு வேகத்தில் ஓடக்கூடியது ?
7.எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியப்பெண்மணி ?
8.கோழியின் உடலில் சராசரியா எத்தனை இறகுகள் உள்ளது?
9.கட்டின்ல் பிஷ் என்ற மீனுக்கு எத்தனை இதயம் உள்ளது ?
10.இங்கிலாந்தில் வெளியீட்ட முதல் அஞ்சல் தலை என்ன ?
பதில்கள்:
1.முத்துலெட்சுமி,2. வைட்டமின் ஏ,3.முல்லைப்பூ, 
4.ரெயின் கேஜ், 5.1950, 6.1மணிக்கு 6.5 கி.மீ,
7.பச்சேர் திரிபால்,8.8 ஆயிரத்துக்கும் மேல், 9.மூன்று.
10.பென்னி பிளாக்.
இன்று டிசம்பர் 7 
பெயர் : நோம் சோம்சுக்கி ,
பிறந்ததேதி : டிசம்பர் 7, 1928
அமெரிக்காவில் வாழும் ஓர் பேரறிஞர். பல 
துறைகளில் அடிப்படையான அறிவாக்கங்கள் 
தந்திருக்கின்றார். மொழியியல் துறையில் 
தோற்றுவாய் இலக்கணம் (generative grammar)
என்னும் அறிவுக்கொள்கையை முன்வைத்தவர். உள்ளம்,
அறிவுத்திறன், உள்ளறிவு, உள்ளுணர்தல் முதலியவற்றைத்
தொடர்பு கொள்ளும் அறிதிறன் அறிவியல் (cognitive science)
என்னும் துறையில் பெரும் புரட்சியைத் தூண்டியவர் இவர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

நம் நிறுவனத்துக்கு ஆன்லைன்-ல் இலவசமாக லோகோ(Logo) நாமே உருவாக்கலாம் 60 மில்லியன் ரெக்காட்ஸ் தகவல்களுடன் வலம் வருகிறது தகவல் உலகம்.

4 பின்னூட்டங்கள் Add your own

  • 1. ♠புதுவை சிவா♠  |  11:40 முப இல் திசெம்பர் 10, 2010

    Thanks winmani

    it’s really useful me .

    “அரை குறை வித்தைகள் படித்தவனின் வேலை
    அனுபவசாலியின் முன் எடுபடாது.”

    🙂

    மறுமொழி
    • 2. winmani  |  12:13 பிப இல் திசெம்பர் 10, 2010

      @ ♠புதுவை சிவா♠
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 3. Bibin Suresh  |  11:07 முப இல் ஏப்ரல் 22, 2011

    supr sir……….

    மறுமொழி
  • 4. சாக்பீஸ்  |  1:16 பிப இல் ஜூலை 1, 2012

    ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயன்படும் பல அருமையான பதிவுகளை வழங்கியிருக்கிறீர்கள். தளராது தொடருங்கள் தங்கள் சேவையை! வாழ்த்துக்கள்.

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,745 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

திசெம்பர் 2010
தி செ பு விய வெ ஞா
« நவ்   ஜன »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: