Archive for நவம்பர், 2010
கணினியில் வந்திருக்கும் புது விளையாட்டு என்ன என்பதை வீடியோவுடன் அறியலாம்.
நாளுக்கு நாள் புதிது புதிதாக விளையாட்டுக்கள் வெளிவந்து
கொண்டிருக்கும் நிலையில் அனைத்து புது விளையாட்டுகளையும்
அதைப்பற்றிய விரிவான தகவல்களையும் வீடியோவுடன் நமக்கு
எடுத்துச்சொல்ல ஒரு தளம் இருக்கிறது இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.
விளையாட்டு குழந்தைகளை மட்டுமல்ல அனைத்து தரப்பு மக்களும்
தற்போது ஈர்த்து வருகிறது. முப்பரிமானம்(3D)-யில் உருவாக்கப்படும்
விளையாட்டுக்கள் பெரும்பாலும் எல்லா தரப்பு மக்களையும்
கவர்கிறது. தினமும் பல புதிய விளையாட்டுக்கள் வெளிவந்து
கொண்டிருக்கும் நிலையில் புதிய விளையாட்டு பற்றிய அனைத்து
தகவல்களையும் கொண்ட ஒரு தளம் உள்ளது.
Continue Reading நவம்பர் 21, 2010 at 8:30 முப பின்னூட்டமொன்றை இடுக
ஆன்லைன்-ல் வீடியோவுடன் நமக்கு தொழில்நுட்பம் சொல்ல வருகின்றனர் பிரபலங்கள்.
ஆன்லைன் மூலம் பாடம் சொல்லிக்கொடுப்பதில் (Virtual class room)
தொடங்கி அறிவு சார்ந்த விளக்கங்களையும் , முன்னேறத் துடிக்கும்
இளைஞர்களுக்கு பயிற்சிகளையும் நேரடியாக பிரபலங்களே ஆடியோ
வீடியோவுடன் சொல்கின்றனர் யார் வேண்டுமானாலும் இதில் சேர்ந்து
பயனடையலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
அறிவுப்பசியுடன் இருக்கும் யாரும் இந்த இணையதளம் மூலம் தங்கள்
அறிவை மேம்படுத்திக்கொள்ளலாம். நமக்கு பிடித்த துறை என்ன
என்பதை தேர்ந்தெடுத்து அந்தத் துறையில் நாம் சேர்ந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு துறையிலும் முக்கியமான பல பிரபலங்கள் உள்ளனர்
நேரடியாக நாம் அவர்களின் பேச்சையும் வீடியோவுடன் கேட்கலாம்
உடனடியாக நமக்கு எழும் கேள்விகளுக்கும் அவர்களே பதில்…
Continue Reading நவம்பர் 20, 2010 at 10:39 முப 6 பின்னூட்டங்கள்
இணையதளத்தில் பயன்படுத்தப்படிருக்கும் மொத்த கலர் (Color) எளிதாக கண்டுபிடிக்கலாம்.
நாம் பார்க்கும் பெரும்பாலன இணையதளங்களில் சில இணைய
தளங்களின் வண்ணம் (Color) நமக்கு பார்க்க அழகாக இருக்கும்
இப்படி நமக்கு பிடித்த இணையதளங்களின் வண்ணத்தை எளிதாக
கண்டுபிடிக்கலாம் எப்படி என்பதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
இணையதள வடிவமைப்பாளரும் இணையதளத்தின் உரிமையாளரும்
தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஒன்று வண்ணங்களை சரியாக
பயன்படுத்துவது தான் , மேலும் அதிகமான வண்ணங்கள்
பயன்படுத்தாமல் இரண்டு அல்லது மூன்று வண்ணங்களுக்குள்
உருவாக்கப்படும் பல இணையதளங்கள் மக்கள் மத்தியில் நல்ல
வரவேற்பை பெற்றிருக்கின்றன என்றால் அது மிகையாகாது அந்த
அளவிற்கு வண்ணத்துக்கு இருக்கும் முக்கியத்துவதை உணந்து
சில அழகாக பயன்படுத்தப்பட்டிருக்கும் இணையதளங்களின்
வண்ணங்களை எளிதாக கண்டுபிடிக்கலாம் நமக்கு உதவுவதற்காக
ஒரு தளம் உள்ளது.
Continue Reading நவம்பர் 19, 2010 at 10:58 பிப 7 பின்னூட்டங்கள்
கார் ரிப்பேர் செய்ய வீடியோவுடன் சொல்லிக்கொடுக்கும் இணையதளம்
நான்கு சக்கர வாகனங்கள் வாங்குவதை விட அதன் பராமரிப்பு செலவு
தான் அதிகமாக இருக்கும். கார் ரிப்பேர் என்று வந்துவிட்டால் என்ன
பிரச்சினை என்பதை உடனடியாக அறிந்து கொள்வதற்கு வசதியாகவும்
அதை எப்படி சரி செய்வது என்பதை பற்றியும் வீடியோவுடன்
சொல்லிக்கொடுக்க ஒரு இணையதளம் உள்ளது இதைப்பற்றித்தான்
இந்தப்ப்பதிவு.
படம் 1
எங்கோ வெளியூர் காரில் செல்ல வேண்டி இருக்கிறது இடையில்
வாகனம் சிறியப் பிரச்சினைக்காக நின்றால் நம் நேரம் வீணாகும்
இதற்காக நாம் மெக்கானிக் படிக்க செல்ல வேண்டாம் இணையதளத்தின்
மூலம் நான்கு சக்கர வாகனங்களில் நீங்கள் பயன்படுத்தும் வாகனத்தின்
நிறுவனம் மற்றும் மாடல் தேர்ந்தெடுத்து இதில் அடிக்கடி ஏற்படும்
பிரச்சினை என்ன என்பதையும் அதற்கு தீர்வையும் வீடியோவுடன்
பார்க்கலாம். சாதரன கார் பெல்ட் மாற்றுவதில் இருந்து இன்ஜின்
மாற்றுவது வரை அனைத்தையும் எந்த ஒளிவும் மறைவுமின்றி
வீடியோவுடன் ….
Continue Reading நவம்பர் 18, 2010 at 6:10 முப 6 பின்னூட்டங்கள்
ஆன்லைன்-ல் படத்தில் உள்ளதை எழுத்துக்களை எழுத்துள்ள கோப்புகளாக (OCR) மாற்றலாம்.
சில முக்கியமான ஆங்கிலப்பத்திரிகை கட்டுரைகளை நாம் Scan செய்து
படமாக (JPEG, bmp) வைத்திருப்போம். இந்த JPEG படமாக சேமித்ததை
எழுத்துக்களாக தனியாக பிரிக்கலாம். OCR என்று சொல்லக்கூடிய Optical
Character Recognition டூல் மூலம் ஆன்லைன் வழியாக படத்திலுள்ள
எழுத்துக்களை தனியாக பிரிக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
JPG, GIF, TIFF , BMP போன்ற படங்களில் உள்ள எழுத்துக்களை தனியாக
பிரித்து கொடுப்பதற்காக ஒரு இணையதளம் உள்ளது.
Continue Reading நவம்பர் 17, 2010 at 8:28 முப 4 பின்னூட்டங்கள்
இனி இலவசமாக டெக்ஸ்ட் ஹோஸ்டிங் ( Free Text Hosting ) செய்யலாம்.
சொந்தமாக இணையதளம் இல்லாதவர்களும் இலவசமாக உங்கள்
எழுத்துக் கோப்புகளை ( Text Hosting ) செய்யலாம் இதைப்பற்றித்
தான் இந்தப்பதிவு.
படம் 1
நாம் தட்டச்சு செய்து வைத்திருக்கும் எழுத்துக்களை ஆன்லைன் மூலம்
இலவசமாக Host செய்யலாம், நமக்கென்று தனி இணையதள முகவரியும்
கடவுச்சொல் ( Password) வசதியும் இருக்கிறது. எந்தப்படமும் இல்லாத
எழுத்துக்களை ( Plain Text ) கோப்புகளை மட்டும் நாம் இலவசமாக
ஹோஸ்ட் செய்யலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
Continue Reading நவம்பர் 16, 2010 at 3:12 பிப 10 பின்னூட்டங்கள்
எந்த ஒரு பயனாளர் கணக்கும் இல்லாமல் ஆன்லைன் -ல் சாட்( அரட்டை) செய்யலாம்.
கணினி பயன்படுத்துவதில் அதிகமான பேர் நண்பர்களுடன் சாட் என்று
சொல்லக்கூடிய அரட்டை அடிக்க கூகுள் டாக் , யாகூ மெசஞ்சர் போன்ற
மென்பொருட்களை தங்கள் கணினியில் தரவிரக்கியும் ஒரு புதிய
பயனாளர் கணக்கு உருவாக்கியும் பயன்படுத்துகின்றனர் ஆனால் எந்த
பயனாளர் கணக்கும் இல்லாமல் ஆன்லைன் -ல் சாட் செய்யலாம்
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
எந்த ஒரு பயனாளர் கணக்கு இல்லாமல் ஆன்லைன் மூலம் எளிதாக நம்
நண்பர்களுடனும் தெரிந்தவர்களுடனும் அரட்டை அடிக்க நமக்கு
ஒரு தளம் உதவுகிறது.
Continue Reading நவம்பர் 15, 2010 at 1:57 பிப 2 பின்னூட்டங்கள்
அனைத்து மொழிகளுடன் அதிக விளக்கம் தரும் புதுமையான டிக்ஸ்னரி
ஆங்கில வார்த்தைக்கு ஒன்றல்ல இரண்டல்ல பல மொழிகளில்
ஆன்லைன் மூலம் அர்த்தம் தெரிந்து கொள்ளலாம் துறைவாரியாகவும்
தனித்தனியாகவும் தெரிந்து கொள்ளலாம் இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு
பொதுவாக டிக்ஸ்னரி என்று எடுத்துக்கொண்டால் ஆங்கில
வார்த்தைக்கு இணையான தமிழ் , ஆங்கிலம், ஹிந்தி , மலையாளம்
என்று தனித்தனியாக டிக்ஸ்னரி கிடைக்கும் ஆனால் ஒரு ஆங்கில
வார்த்தைக்கு 67 மொழிகளில் அர்த்தம் தெரிந்து கொள்ளும் டிக்ஸ்னரி
ஒன்று உள்ளது.
Continue Reading நவம்பர் 14, 2010 at 4:02 முப 18 பின்னூட்டங்கள்
அமெரிக்கா வாழ் இந்தியர்கள் Postal தகவல்களை முழுமையாக அறியலாம்.
அமெரிக்காவில் இருந்து உலகின் எந்த நாட்டிற்கும் தபால் மற்றும்
பார்சல் அனுப்ப எவ்வளவு செலவாகும் என்று சில நொடிகளில்
அறிந்து கொள்ளலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
அமெரிக்காவில் இருக்கும் நண்பர்கள் உலகில் அனைத்து நாடுகளிலும்
இருக்கும் தங்கள் சொந்த பந்தங்களுக்கு தபால் மற்றும் பார்சல் அனுப்ப
எவ்வளவு செலவாகும் என்று துல்லியமாக தெரிந்து கொள்ளலாம்.
நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
Continue Reading நவம்பர் 13, 2010 at 12:16 முப 4 பின்னூட்டங்கள்