உலகத்தின் தலைசிறந்த டாக்குமெண்டரி பிலிம் -களை இலவசமாக பார்க்கலாம்.
நவம்பர் 23, 2010 at 11:27 முப 10 பின்னூட்டங்கள்
டாக்குமெண்டரி திரைப்படங்கள் தினமும் பல வந்து கொண்டே தான்
இருக்கிறது இதில் உலகின் சிறந்த டாக்குமெண்டரி பிலிம்களை
இலவசமாக பார்க்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள் மட்டுமல்ல தன்
எண்ணத்தை பதிவு செய்ய வேண்டும் என்ற கொள்கை உள்ளவர்கள்
கூட முதலில் நாடுவது டாக்குமெண்டரி பிலிம்களை தான் அந்த
அளவிற்கு டாக்குமெண்டரி பிலிம்கள் தற்போது பிரதான இடத்தை
பிடித்து வருகிறது அழகான கதை அம்சம், குறுகிய நேரம் , பெரும்
பொருட்செலவில்லை , பிரபல நடிகர்கள் தேவையில்லை என
எந்த பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல் உருவாக்கப்படும் இந்த
டாக்குமெண்டரி பிலிம்களை நாம் ஒரே இடத்தில் இருந்து
பார்க்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://topdocumentaryfilms.com
டாக்குமெண்டரி பிலிம்களில் சிறந்தவையாக உள்ள திரைப்படங்களை
பட்டியலிடுகிறது அதுவும் துறை வாரியாக ஆக்சன்,காமெடி,
விளையாட்டு, அரசியல், அறிவியல் , டெக்னாலஜி ,பொழுதுபோக்கு
என பல துறைகளில் டாக்குமெண்டரி பிலிம்களை தேர்ந்தெடுத்து
பார்க்கலாம். நமக்கு பிடித்த திரைப்படத்திற்கு பின்னோட்டத்தையும்
சமர்பிக்கலாம். வேலைப்பளுக்கு இடையில் கிடைக்கும் நேரத்தில்
இது போன்ற டாக்குமெண்டரி பிலிம்கள் நமக்கு மனதளவில் சிறிய
ஒய்வு அளிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
வின்மணி சிந்தனை லஞ்சம் வாங்காமல் வேலை செய்யும் அதிகாரிக்கு வாய்விட்டு நன்றி சொல்லுங்கள்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.இந்தியாவில் ஒரு மாநிலத்தின் குறைந்த பட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை என்ன ? 2.எந்த மாநில மொழியாகவும் இல்லாமல் ஆட்சி மொழியாக உள்ள மொழி எது ? 3.பி.சி.ராய் கோப்பை வழங்கப்படும் விளையாட்டு எது ? 4.விளையாட்டு வீரருக்கு வழங்கப்படும் உயர்ந்த விருது என்ன ? 5.திருக்குறளில் அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள் எத்தனை? 6.சங்ககாலம் என்று எந்த காலத்தை குறிப்பிடுகின்றனர் ? 7.ராமாயணத்தை மலையாள மொழியில் மொழிபெயர்த்தவர் யார்? 8.”கூலி"என்னும் புகழ் பெற்ற ஆங்கில்நாவலை எழுதியவர் யார்? 9.தெருக்கூத்து கலைக்கு கர்நாடகத்தில் என்ன பெயர் ? 10.இந்தியாவின் ஷேக்ஸ்பியர் என அழைக்கப்பட்டவர் யார் ? பதில்கள்: 1.60பேர், 2.ஆங்கிலம்,3.கால்பந்து,4.ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது, 5.38,6.கி.மு 500 முதல் கி.பி.200 வரை, 7வல்லதோள், 8.முல்க்ராஜ் ஆனந்த், 9.பயலாட்டம்.10.காளிதாஸர்.
இன்று நவம்பர் 23பெயர் : சுரதா , பிறந்த தேதி : நவம்பர் 23, 1921 இராசகோபாலன் என்ற தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக்கவிதைத் தொகுப்புகள் தந்தவர்.செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: உலகத்தின் தலைசிறந்த டாக்குமெண்டரி பிலிம் -களை இலவசமாக பார்க்கலாம்..
1.
jiyath | 2:30 பிப இல் நவம்பர் 26, 2010
முக்கியமான படங்களை பார்த்து மகிழ்ந்தேன். வழங்கியவர் jiyathahamed
2.
winmani | 5:36 பிப இல் நவம்பர் 27, 2010
@ jiyath
மிக்க நன்றி
3.
♠புதுவை சிவா♠ | 4:35 பிப இல் நவம்பர் 26, 2010
பயனுள்ள தகவலை தந்தமைக்கு நன்றி வின்மணி
4.
winmani | 5:38 பிப இல் நவம்பர் 27, 2010
@ ♠புதுவை சிவா♠
மிக்க நன்றி
5.
Ravi kumar | 6:53 பிப இல் நவம்பர் 26, 2010
thanks
6.
winmani | 5:41 பிப இல் நவம்பர் 27, 2010
@ Ravi kumar
மிக்க நன்றி
7.
ilavarasantamil | 5:48 முப இல் நவம்பர் 27, 2010
நன்றி
8.
Rajthilak | 11:05 பிப இல் திசெம்பர் 13, 2010
விளையாட்டுக்கான் உயரிய விருது – “ராஜீவ்காந்தி கேல் ரத்னா” விருது என்று நினைக்கிறேன், சரி பார்க்கவும் !
9.
winmani | 11:28 பிப இல் திசெம்பர் 13, 2010
@ Rajthilak
நண்பருக்கு திருத்தியாச்சு,
மிக்க நன்றி
10.
sivaparkavi | 12:59 பிப இல் ஜனவரி 10, 2012
பார்த்து மகிழ்ந்தேன்.
sivaparkavi