Old Version சாப்ட்வேர் அனைத்தையும் ஒரே இடத்தில் இருந்து தரவிரக்கலாம்.

நவம்பர் 3, 2010 at 5:07 பிப 8 பின்னூட்டங்கள்

புதிய மென்பொருட்கள் மட்டுமல்ல சில பழைய வெர்சன்
மென்பொருட்களுக்கு இன்னும் முக்கியத்துவம் இருந்து கொண்டு
தான் இருக்கிறது. அந்த வகையில் பழைய வெர்சன் ( Old version)
Software எங்கு தேடினாலும் சில சமயங்களில் கிடைப்பதில்லை.
இந்த பழைய வெர்சன் மென்பொருட்களை எப்படி தரவிரக்கலாம்
என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

தினமும் புதிது புதிதாக அப்டேசனுடன் வெளிவந்து கொண்டிருக்கும்
மென்பொருட்களுக்கு மத்தியில் சில சமயங்களில் நமக்கு பழைய
வெர்சன் மென்பொருள்கள் சிறப்பாக இருக்கும் இப்படி நாம் விரும்பும்
பழைய வெர்சன் மென்பொருளை தரவிரக்க ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.oldversion.com

இந்ததளத்திற்கு சென்று அடிக்கடி நாம் பயன்படுத்தும்
மென்பொருட்களின் old version -ஐ தரவிரக்கலாம். தனித்தனியாக
ஒவ்வொரு துறை வாரியாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. Communication,
Graphics, Multimedia, Internet ,  File Sharing, Utilities , Security,
Enterprise ,FTP உதாரணமாக Winamp மென்பொருளின் முதல்
வெர்சனான winamp 0.2 version முதல் Winamp 5.24 version வரை
அத்தனையும் இங்கே கிடைக்கிறது இதில் எந்த வெர்சன் வேண்டுமோ
அதை சொடுக்கி எளிதாக தரவிரக்கிக் கொள்ளலாம். புதிய வெர்சன்
(Latest version software) மென்பொருள் சில சமயம் பயன்படுத்துவது
சற்று கடினமாக இருக்கிறது என்று நினைக்கும் நபர்களுக்கு
இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

வின்மணி சிந்தனை
பாவம் செய்யாதிருக்க சிறந்த வழி அனைவரின் மீதும்
அன்பு செலுத்துங்கள்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.மண் ஆய்வுக்கூடம் தமிழ்நாட்டில் எங்குள்ளது ?
2.பரிணாம வளர்ச்சிக் கொள்கையை உருவாக்கியவர் யார் ?
3.பெர்முடா முக்கோணம் எந்தக்கடலின் ஒரு பகுதியில் உள்ளது ?
4.கற்பகவிநாயகர் கோவில் கொண்டிருக்கும் ஊர் எது ?
5.ரயில்வே சிக்னலை கண்டுபிடித்தவர் யார் ?
6.பிரெஞ்சு நாட்டு காந்தி எனப்படுபவர் யார் ? 
7.சிறந்த செய்தி மற்றும் சாக்குமெண்டரி படங்களுக்காக
 அமெரிக்கா வழங்கும் விருது எது ? 
8.எர்த் என்ற நூலின் ஆசிரியர் யார் ? 
9.பவானி சாகர் அணைக்கட்டு எந்த மாவட்டத்தில் உள்ளது ? 
10.மேகங்களைப் பற்றிய ஆய்வுத்துறை எது ? 
பதில்கள்:
1.குடுமியான் மலை, 2.சார்லஸ் டார்வின்,3.அட்லாண்டிக், 
4.பிள்ளையார்பட்டி,5.ஹால்,6.சார்லஸ் டிகாலோ,
7.எம்மி விருது, 8.எமிலி ஜோலா,9.ஈரோடு.10.நேபாலஜி
இன்று நவம்பர் 3 
பெயர் : அவுரங்கசீப் ,
பிறந்ததேதி : நவம்பர் 3 , 1618
அவுரங்கசீப் முகலாய பேரரசின் ஒரு 
குறிப்பிடத்தகுந்த பேரரசர்களில் ஒருவர்.
ஷாஜகான் மற்றும் மும்தாஜின் ஐந்தாவது
வாரிசாவார். இவர் ஆலம்கீர் என 
அழைக்கப்பட்டார்.இவரது ஆட்சி காலம் கி.பி. 1658-லிருந்து
கி.பி. 1707 வரையாகும். இவரது ஆட்சிகாலத்தில்
முகலாயப் பேரரசு காபுலில் இருந்து தமிழ்நாடு
வரை பரந்து விரிந்திருந்தது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

அனைவருக்கும் உதவும் சையின்டிபிக் கால்குலேட்டர் (Scientific Calculator) இலவசம். ஆன்லைன் மூலம் பிடிஎப் கோப்புகளை எக்சல் கோப்புகளாக மாற்றலாம்.

8 பின்னூட்டங்கள் Add your own

  • 1. ♠புதுவை சிவா♠  |  7:25 பிப இல் நவம்பர் 4, 2010

    அன்பு நண்பர்களுக்கு,

    உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் இதயம் கனிந்த தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்.

    மகிழ்வு எங்கெங்கும் பெருகட்டும்.

    வாழ்க வளமுடன்.

    மறுமொழி
    • 2. winmani  |  7:41 பிப இல் நவம்பர் 4, 2010

      @ ♠புதுவை சிவா♠
      நண்பருக்கும் நம் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 3. தாமஸ் ரூபன்  |  3:30 முப இல் நவம்பர் 5, 2010

    உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீப திருநாள் நல்வாழ்த்துகள்.

    மறுமொழி
    • 4. winmani  |  1:18 பிப இல் நவம்பர் 5, 2010

      @ தாமஸ் ரூபன்
      உங்களுக்கும் நம் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 5. அங்கிதா வர்மா  |  3:35 முப இல் நவம்பர் 5, 2010

    உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் இதயம் கனிந்த தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்

    மறுமொழி
    • 6. winmani  |  1:19 பிப இல் நவம்பர் 5, 2010

      @ அங்கிதா வர்மா
      உங்களுக்கும் நம் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 7. Jiyath  |  5:27 முப இல் நவம்பர் 5, 2010

    வழமை போல அசத்தல்

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,738 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

நவம்பர் 2010
M T W T F S S
« Oct   Dec »
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: