Archive for ஒக்ரோபர், 2010
விக்கிப்பீடியா கட்டுரையை எளிய ஆங்கிலத்தில் படிக்க ட்ரிக்ஸ்
அனைத்து தகவல்களின் களஞ்சியம் என்று அழைக்கப்படும்
விக்கிப்பீடியாவின்(Wikipedia) கட்டுரைகளை இனி நிமிடத்தில்
எளிய ஆங்கிலத்தில் மாற்றி படிக்கலாம் இதைப் பற்றித்தான்
இந்தப்பதிவு.
ஆங்கிலம் கற்பவர்களுக்கும் ( learn english ) ஆங்கில கட்டுரை
எழுத நினைப்பவர்களுக்கும் உடனடியாக தகவல்களை தெரிந்து
கொள்ள செல்வது விக்கிப்பீடியாவுக்கு தான் அந்த அளவிற்கு
விக்கிப்பீடியா பல தரப்பட்ட மக்களுக்கு பயனுள்ளதாகவே
இருக்கிறது. ஆனால் இதில் இருக்கும் சில கட்டுரைகள் மற்றும்
தகவல்கள் ஆங்கிலத்தில் வல்லுனர்களாக இருந்தால் தான்
படிக்க முடியும் என்ற நிலை இருக்கிறது. இந்தப்பிரச்சினையை
தீர்த்து நமக்கு உதவுவதற்காக ஒரு இணையதளம் உள்ளது.
இணையதள முகவரி : http://againbutslower.com
இந்ததளத்திற்கு சென்று நாம் எந்த கட்டுரை படிக்க வேண்டுமோ
அந்த கட்டுரையின் பெயரை கொடுக்கலாம் அல்லது விக்கிப்பீடியாவின்
எந்த கட்டுரை வேண்டுமோ அந்த கட்டுரையை தேடி பின் அதன்
இணையதள முகவரியை காப்பி செய்து Enter a Wikipedia article name
or URL to check for a simpler one: என்று இருக்கும் கட்டத்திற்குள்
கொடுத்து Again, but slower என்று இருக்கும் பொத்தானை அழுத்தவும்
இப்போது நமக்கு இணையதளத்தின் இடது பக்கத்தில் விக்கிப்பீடியாவின்
Original article -ம் வலது பக்கத்தில் எளிதாக மாற்றி Simple article -ஆக
கொடுக்கப்பட்டிருக்கும். விக்கிப்பீடியா ஆங்கிலக் கட்டுரையை
எளிய ஆங்கிலத்தில் படிக்க விரும்பும் நபர்களுக்கு இந்தப்பதிவு
பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை பிறரை ஒரு போதும் ஏளனமாக எண்ணக்கூடாது , இறைவனின் படைப்பில் அனைவரும் சமமானவர்களே.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.முதன் முதலில் 6 பேர் பயணித்த விண்கலம் எது ? 2.தாவரங்களில் பெரும்பாலும் எந்த வைட்டமின் காணப்படுவது இல்லை ? 3.இந்தியாவில் மாங்கனீசு கிடைக்கும் இடம் எது ? 4.புகார் துறைமுகத்தை உருவாக்கிய மன்னன் யார் ? 5.முதல் பெண் இந்திய விமான பைலட் யார் ? 6.இசைத்தட்டை கண்டுபிடித்தவர் யார் ? 7.வாயில் உள்ள உமிழ்நீர்ச் சுரப்பிகளில் பெரியது எது ? 8.மத்தியப்பிரதேசம் மன்னாவில் கிடைக்கும் கனிமம் எது ? 9.வானிலை ஆராய்ச்சி நிலையத்தை ஆரம்பித்தவர் யார் ? 10.தோல் சம்பந்தப்பட்ட பொருட்களை பாலிஷ் செய்ய உதவும் திரவம் எது ? பதில்கள்: 1.கொலம்பியா, 2.வைட்டமின் B12, 3.மத்தியப்பிரதேசம், 4.கரிகாலன்,5.துர்கா பானர்ஜி, 6.பீட்டர் கோல்ட் - 1948, 7.ப்ரோடிட், 8.வைரம், 9.வில்லியம் பெட்ரி 10.டர்பன்டைன்.
இன்று அக்டோபர் 22பெயர் : ஜான்சி ராணி லட்சுமிபாய் , பிறந்த தேதி : அக்டோபர் 22, 1828 வட இந்தியாவின் ஜான்சி நாட்டின் இராணி. 1857 இந்தியக் கிளர்ச்சியில் பெரும் பங்காற்றி இந்தியாவில் பிரிட்டனின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடியாகக் கணிக்கப்படுகிறவர்.வெள்ளையர் எதிர்ப்புக்காக நேதாஜி பெண்கள் படை உருவாக்கியபோது அதற்கு "ஜான்சிராணி ரெஜிமெண்ட்" என்று பெயரிட்டார்
41 வெளிநாடுகளுக்கு இணையம் மூலம் இலவசமாக பேக்ஸ் அனுப்பலாம்.
அமெரிக்கா, கனடா , ஜப்பான் , சீனா போன்ற 41 நாடுகளுக்கு
இலவசமாக பேக்ஸ் (Fax) அனுப்பலாம் எப்படி என்பதைப்
பற்றித்தான் இந்தப்பதிவு.
தகவல்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கும் ,
ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு அனுப்புவதற்கும்
முன்பு நாம் அதிகமாக பயன்படுத்திக்கொண்டிருந்த பேக்ஸ் (Fax)
என்ற இயந்திரத்தின் பயன்பாடு அதிகமாக இல்லை என்று
கூறினாலும் சில முன்னனி நிறுவனங்கள் இன்றும் பேக்ஸ்
பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கின்றது. இதற்காக நாம்
இப்போது வெளிநாட்டில் இருக்கும் நண்பருக்கோ அல்லது
நிறுவனத்திற்கோ பேக்ஸ் அனுப்ப வேண்டும் என்றால் எந்தவித
பணச்செலவும் இல்லாமல் இலவசமாக நம் இணையம் மூலமே
அனுப்பலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு இணையதளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.myfax.com/free/sendfax.aspx
41 நாடுகளுக்கு மட்டும் தான் நாம் இலவசமாக இந்ததளம்
மூலம் பேக்ஸ் அனுப்ப முடியும். இந்தியாவிற்கு பேக்ஸ்
இலவசமாக அனுப்பும் வசதி இந்த தளத்தில் கொடுக்கப்படவில்லை.
அமெரிக்கா, கனடா, ஜப்பான், சீனா,கொரியா,இத்தாலி,பிரான்ஸ்,
இஸ்ரேல் போன்ற மற்ற அனைத்து (41) நாடுகளுக்கும் நாம்
இந்த இணையதளம் மூலம் இலவசமாக பேக்ஸ் அனுப்பலாம்.
ஒரு நாளைக்கு இரண்டு பேக்ஸ் செய்தி மட்டுமே அனுப்ப
முடியும். 178 File Format -க்கு துணை செய்கிறது. 10 MB அளவிலான
கோப்பு வரை நாம் அனுப்ப முடியும். இந்ததளத்தின் மூலம் நாம்
பேக்ஸ் அனுப்ப எந்த பயனாளர் கணக்கும் தேவையில்லை.
வெளிநாட்டு வேலைக்கு பேக்ஸ் அனுப்பும் நம் தமிழ்
நண்பர்களுக்கு இந்தப் பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை மனசாட்சிக்கு விரோதம் செய்யாமல், அடுத்தவரை ஏமாற்றாமல் இருக்கும் நம் வாழ்வில் துன்பம் ஒரு போதும் வருவதில்லை.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.உலகிலேயே பழமை வாய்ந்த மலைத்தொடர் எது ? 2.பூவாத தாவரம் எது ? 3.பாம்புகள் எந்த இனத்தை சார்ந்தவை ? 4.எந்த நாடு மிகப்பெரிய இரானுவத்தை கொண்டிருக்கிறது ? 5.இந்தியாவின் தரைவிட்டு பாயும் விண்கலம் எது ? 6.குளிர்சாதனப்பெட்டியில் பயன்படுத்தப்படும் வாயு எது ? 7.வேகவதி என்ற பெயர் கொண்ட நதி எது ? 8.'மை ட்ரூத் ' என்ற புத்தகத்தை எழுதியவர் யார் ? 9.நேட்டோ நாடுகளின் தலமைச்செயலகம் எந்த நாட்டில் உள்ளது? 10.பாத்திரங்களுக்கு ஈயம் பூசப்பயன்படுவது எது ? பதில்கள்: 1.ஆரவல்லி, 2.நாய்குடை , பாசி, 3.பல்லி இனம், 4.சீனா,5.பிருத்வி, 6.அமோனியா, 7.வைகை, 8.இந்திராகாந்தி, 9.பெல்ஜியம், 10.வெள்ளீயம்.
இன்று அக்டோபர் 21பெயர் : ஆல்பிரட் நோபல் , பிறந்ததேதி : அக்டோபர் 21, 1833 நோபல் பரிசினை உருவாக்கிய சுவீடன் நாட்டு அறிவியலாளர். டைனமைட் வெடிமருந்தைக் கண்டுபிடித்தவர். ஆல்ஃபிரட் நோபெல் ஒரு வேதியாளர், பொறியாளர், புத்தாக்குனர், ஆயுதத்தயாரிப்பாளராகவும் திகழ்ந்தார். தன்னுடைய உயிலின் மூலம், தன் பெரும் சொத்தைக் கொண்டு நோபல் பரிசை நிறுவினார். இவரின் நினைவாக நோபெலியம் (Nobelium) என்னும் synthetic தனிமம் பெயரிடப்பட்டது.
மிகவும் பயனுள்ள பூமியின் காலண்டர் விநோத இணையதளம்
பூமியில் இருக்கும் ஒவ்வொரு நாட்டின் முக்கிய நாட்களையும்
விடுமுறை தின தகவல்களையும் சில நிமிடங்களில் எளிதாக
நாம் தெரிந்துகொள்ளலாம் எப்படி என்பதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.

படம் 1
இறைவன் படைத்த பூமியில் ஓவ்வொரு நாட்டிற்கும் சில முக்கிய
தினங்களையும் விடுமுறை நாட்களையும் நாம் அமைத்து அந்த
தினத்தை கொண்டாடுகிறோம் இப்படி ஓவ்வொரு நாடுகளிலும் சில
முக்கிய தினங்கள் இருக்கின்றன இந்த அனைத்து தகவல்களையும்
சில நிமிடங்களில் நாம் அறிந்து கொள்ளலாம் நமக்கு உதவுவதற்காக
ஒரு இணையதளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.earthcalendar.net

படம் 2

படம் 3
பூமியின் காலண்டர் என்ற பெயரில் இருக்கும் இந்ததளத்திற்கு சென்று
நாம் உலகத்தின் எந்த நாட்டின் முக்கிய நாட்களையும் விடுமுறை
தினத்தையும் சில நிமிடங்களில் பார்க்கலாம். ஒவ்வொரு நாளும்
இன்றைய தினத்தில் என்ன முக்கியமான நாள் என்று நாம் இந்தத்
தளத்திற்கு சென்று எளிதாக அறியலாம். அடுத்து படம் 2-ல் காட்டியபடி
மூன்றாவது மெனுவாக இருக்கும் Holidays by Country என்ற
பொத்தானை அழுத்தி எந்த வருடம் , எந்த நாடு என்பதையும்
தேர்ந்தெடுத்துக்கொண்டு Show Holidays என்ற பொத்தானை
அழுத்தி பார்க்காலம் (படம் 3-ல் காட்டப்பட்டுள்ளது). இதே போல்
ஒவ்வொரு நாட்டிலும் வேவ்வேறு மதத்தவர்கள் கொண்டாடும்
அனைத்து பண்டிகைகளையும் எளிதாக அறியலாம். உலக நாடுகளின்
விடுமுறை தினத்தையும் முக்கிய நாட்களையும் அறிய விரும்பும்
நபர்களுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை கட்சியின் சுயலாபத்துக்காக மக்களை ஏமாற்றுபவர்களுக்கு சரியான பரிசு கிடைக்கும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.நிலப்பரப்பே இல்லாத பிரதேசம் எது ? 2.டர்பண்டைன் எதிலிருந்து எடுக்கப்படுகிறது ? 3.ஆங்கிலக்கவிதையின் தந்தை என்று வர்ணிக்கப்படுபவர் யார்? 4.அஜந்தாவில் எத்தனை குகைகள் உள்ளது ? 5.இந்தியாவின் முதல் எலக்ட்ரானிக் ரயில் பெயர் என்ன ? 6.மனித உடலில் நரம்புகளின் உணர்ச்சி வேகம் எவ்வளவு ? 7.மனித இனத்தின் சரியான கர்ப்ப காலம் எத்தனை நாட்கள்? 8.லாத்வியா நாட்டின் தலைநகரம் எது ? 9.எரிமலையில் உருவான அமெரிக்க மாநிலம் எது ? 10.பாம்பு தனது நாக்கை அடிக்கடி வெளியே நீட்டுவதன் காரணம்? பதில்கள்: 1.வட துருவம், 2.பைன் மரத்தில் இருந்து, 3.ஜெப்ரிசரர், 4.27 குகைகள்,5.டெக்கான் குயின், 6.மணிக்கு 300 கி.மீ, 7.280 நாட்கள், 8.ரிகா, 9.ஹவாய்தீவு, 10.முகர்வதற்காக.
இன்று அக்டோபர் 20பெயர் : வீரேந்தர சேவாக் , பிறந்ததேதி : அக்டோபர் 20, 1978 இந்தியாவின் துடுப்பாளர். வலதுகைத் துடுப்பாளரான இவர் இந்திய அணியின் துவக்கத் துடுப்பாளராகக் களமிறங்குபவர்.1998-ல் ஒருநாள் போட்டிகளிலும் 2001-ல் டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா சார்பாக அறிமுகமானார்.தென்னாபிரிக்காவுக்கு எதிராக 278 பந்துகளில் 300 ஓட்டங்களைப் பெற்றமை தேர்வுத் துடுப்பாட்டத்தில் அதிவேகமான முச்சதச்சாதனையாகும்.
உலகஅளவில் கால்பந்தாட்ட ரசிகர்களை இணைக்கும் பிரம்மாண்ட வலைப்பூ
அனைத்து நாடுகளிலும் இருக்கும் கால்பந்து விளையாட்டின்
ரசிகர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் எப்படி இருக்கும்
இவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்க ஒரு இணையதளம்
உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
கிரிக்கெட் திருவிழாவைக் காட்டிலும் கால்பந்து திருவிழா பார்க்கும்
ரசிகர்கள் உலக அளவில் அதிகம். இப்படி உலக அளவில் இருக்கும்
கால்பந்து விளையாட்டின் ரசிகர்கள் அனைவரையும் இணையத்தில்
ஒரே இடத்தில் இணைப்பதற்காக ஒரு இணையதளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.footbo.com
இந்தத்தளத்திற்கு சென்று கால்பந்து விளையாட்டில் எந்த அணி
பற்றிய துல்லியமான விபரங்கள் வேண்டுமோ அந்த அணியின்
பெயரை கொடுத்து தேடலாம். நமக்கென்று புதிதாக இலவசமாக
ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கிக் கொண்டு உலகத்தின் எந்த
கால்பந்து அணியின் ரசிகராகவும் சேரலாம் அந்த அணியில்
தற்போதையை செய்திகள், மாற்றங்கள் அதோடு அந்த அணி
பற்றிய பிரபலங்களின் கருத்துக்கள் என அனைத்து தகவல்களையும்
ஒரே இடத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். உலகில் எங்கெல்லாம்
எப்போது கால்பந்து போட்டி நடக்கிறது அந்த போட்டியில் பங்கு
பெற நாம் செய்ய வேண்டிய அனைத்து தகவல்களும் இங்கு
கிடைக்கிறது. கால்பந்து பற்றி நமக்கு எழும் அத்தனை
சந்தேகங்களுக்கும் விடை அளிக்கும் ஒரு பயனுள்ள தளமாகவே
இது இருக்கிறது.
வின்மணி சிந்தனை தன்னைப் பற்றி கர்வம் கொள்ளாமல் இருக்கும் எவருக்கும் (கடவுளை நம்பாதவருக்கும் )இறைவன் அருள் பரிபூரணமாக இருக்கும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.தோலால் சுவாசிக்கும் உயிரினம் எது ? 2.ஆஸ்கார் விருதுக்கான சிலையை எந்த உலோகத்தில் செய்கின்றனர் ? 3.அன்னை தெரசாவுக்கு இந்தியகுடியுரிமை எப்போது கிடைத்தது? 4.எந்த விஞ்ஞானியின் பிறந்த நாள் அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது ? 5.உலகிலேயே மிகப்பெரிய நாணயச்சாலை எங்குள்ளது ? 6.தேசியக்கொடியில் பச்சை நிறம் மட்டுமே உள்ள நாடு எது ? 7.ஜெராக்ஸ் மிஷினை கண்டுபிடித்தவர் யார் ? 8.இந்தியாவில் வாஸ்கோடாகாமா நகரம் எந்த மாநிலத்தில் இருக்கிறது ? 9.பூமத்திய ரேகை எண்ணும் பெயர் கொண்ட நாடு எது ? 10.ஒரு நாளிகை என்பது எத்தனை நிமிடம் ? பதில்கள்: 1.மண்புழு,2.வெண்கலம், 3.1962,4.சர்.சிவி.ராமன், 5.பிலடெல்பியா-அமெரிக்கா,6.லிபியா,7.செஸ்டர் கார்ல்சன், 8.கோவா, 9.ஈகுவடார், 10.24 நிமிடம்.
இன்று அக்டோபர் 19பெயர் : சுப்பிரமணியன் சந்திரசேகர், பிறந்த தேதி : அக்டோபர் 19, 1910 இவர் ஒரு வானியல் இயற்பியலாளர் ஆவார். இந்தியாவில் லாகூரில் பிறந்தவர்.விண்மீன்கள் பற்றிய இவரது ஆய்விற்காக இவருக்கும் வில்லியம் ஃபௌலருக்கும் 1983 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரித்தெடுக்க உதவும் இலவச மென்பொருள்.
வீடியோவில் இருந்து ஆடியோவை மட்டும் தனியாக பிரித்தெடுக்க
உதவும் ஒரு இலவச மென்பொருள் பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
சில வீடியோக்களில் உள்ள ஆடியோ மட்டும் நமக்கு தேவைப்படும்
அப்படி பட்ட நேரத்தில் வீடியோ எடிட்டிங் செய்பவர்களிடம் சென்று
வீடியோவில் இருந்து ஆடியோவை மட்டும் பிரித்தெடுக்க பணமும்
நேரமும் செலவாகும் ஆனால் இனி எளிதாக நம் கணினி மூலமே
வீடியோவில் இருந்து ஆடியோவை மட்டுமல்ல முக்கியமான பிரேம்-ல்
இருக்க்கும் போட்டோவை கூட சேமிக்கலாம் நமக்கு உதவுவதற்காக
ஒரு மென்பொருள் உள்ளது. இங்கு கொடுத்திருக்கும் சுட்டியை
சொடுக்கி மென்பொருளை தரவிரக்கிக்கொள்ளவும்.
தரவிரக்க முகவரி : http://www.softwareclub.ws/download/scvcs1303.exe
இந்த மென்பொருளை தரவிரக்கி நம் கணினியில் நிறுவிக்கொள்ளவும்
அடுத்து மென்பொருளை திறந்ததும் படம் 1-ல் இருப்பது போல் வரும்
இதில் (Step 1) Input video file என்பதில் நாம் மாற்ற விரும்பும் வீடியோ
கோப்பை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். அடுத்து Play என்ற பொத்தானை
அழுத்தி வீடியோவில் உள்ளதில் எதை புகைப்படமாக சேமிக்க
வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து கொண்டு (Step2 ) Save Frame என்பதை
சொடுக்கவும். அடுத்து ( Step 3) -ல் Convert to என்பதில் நாம் மாற்ற
வீடியோ கோப்பை வேறு பார்மட்டுக்கு மாற்ற விரும்பினால் அதை
தேர்ந்தெடுக்கவும். அடுத்து இருக்கும் (step 4) தான் நாம் தேர்ந்தெடுத்த
வீடியோ கோப்பை எந்த ஆடியோ பார்மட்டுக்கு மாற்ற வேண்டுமோ
அதை தேர்ந்த்டுத்துக்கொண்டு ( Step 5) Output video file என்பதில்
நம் கணினியில் எந்த இடத்தில் சேமிக்க வேண்டும் என்பதை
தேர்ந்தெடுத்துக்கொள்ளவும் எல்லாம் தேர்ந்தெடுத்து முடித்த பின்
( Step 6 ) split என்ற பொத்தானை அழுத்தவும். வீடியோவில்
இருந்து ஆடியோவை வேகமாக பிரிக்க விரும்பும் நண்பர்களுக்கு
இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை தேவையான நேரத்தில் செலவு செய்யாத பணமும் காலம் கடந்து பெய்யும் மழையும் பயனற்றது.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.தக்காளிப்பழத்தின் தாயகம் எது ? 2.தரைப்படை வீரர்கள் கல்லூரி முதலில் அமைந்த இடம் எது? 3.மனிதன் ஒரு அரசியல் மிருகம் என்று கூறியவர் யார் ? 4.முதன் முதலாக ஜனநாயக முறை தோன்றியது எந்த நாட்டில்? 5.போலியோ மருந்தை கண்டுபிடித்தவர் யார் ? 6.குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வதிப்பதில் முதலிடத்தில் உள்ள நாடு எது ? 7.’தினத்தந்தி’ நாளிதழைத் தொடங்கியவர் யார் ? 8.கார்பெட் தேசிய பூங்கா எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது? 9.வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன ? 10.நவீன பாரளுமன்ற முறையை உருவாக்கிய இங்கிலாந்து மன்னர் யார் ? பதில்கள்: 1.அமெரிக்கா,2.புனே, 3.அரிஸ்டாட்டில்,4.இஸ்ரேல், 5.ஜோனாஸ் சாக்,ஆல்பர்ட் சாபின்,6.சீனா,7.சி.பா.ஆதித்தனார், 8.உ.பி, 9.ஜோசப் பெஸ்கி, 10.முதலாம் எட்வட்ர்ட்.
இன்று அக்டோபர் 18பெயர் : தாமஸ் ஆல்வா எடிசன் மறைந்ததேதி : அக்டோபர் 18, 1931 அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும்,தொழிலதிபரும் ஆவார்.பல முக்கியமான மின் சாதனங்களை உருவாக்கியுள்ளார்.இவரின் மிக முக்கியமான வெள்ளொளிர்வு விளக்குக்கான காப்புரிமம் இன்று தான் பெற்றார்.அதிக அளவு காப்பூரிமைக்கு சொந்தகாரர். தனது பெயரில் 1093 சாதனை உரிமங்களைப் பதிவு செய்துள்ளார் எடிசன்
குழந்தைகள் பணத்தை எப்படி செலவளிக்க வேண்டும் சொல்லித்தரும் பயனுள்ள தளம்.
குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் பணத்தை எப்படி பயனுள்ள வழிகளில்
செலவு செய்யலாம் என்று சொல்லித்தர ஒரு இணையதளம் உள்ளது.
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
ஆரம்பத்தில் செலவு செய்வதை பயனுள்ள வழியில் செலவு செய்யா
விட்டால் பின் எவ்வளவு தான் முயன்றாலும் பணம் நம் கையில்
இருந்து தண்ணீராக செலவு செய்வதை யாராலும் தடுக்க முடியாது.
குழந்தையாக இருக்கும் போதே பணத்தை எப்படி எல்லாம் பயனுள்ள
வழிகளில் செலவு செய்யலாம் என்று நம் குழந்தைகளுக்கு சொல்லிக்
கொடுக்க ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://zefty.com
இந்தத்தளத்திற்கு சென்று நம் குழந்தைகளுக்கு புதிதாக ஒரு பயனாளர்
கணக்கு உருவாக்கி கொடுக்க வேண்டியது மட்டும் தான் நம் வேலை
பயனாளர் கணக்கு உருவாக்கியதும் குழந்தைகள் அந்த பயனாளர்
கணக்கின் வழியாக உள்சென்று தங்களுக்கு கிடைக்கும் பாக்கெட் மணி
முதல் பிறந்த நாள் போன்ற நாட்களில் கிடைக்கும் பணம் வரை
அத்தனையையும் எப்படி பயனுள்ள வழியில் செலவு செய்யலாம் என்று
எளிமையாக சொல்லிக்கொடுக்கிறது. குழந்தைகள் அதிகமாக எதில்
பணம் செலவு செய்கின்றனர் அதை எப்படி எல்லாம் குறைக்கலாம்
என்று படிப்படியாக சொல்லிக்கொடுக்கிறது. கூடவே குழந்தைகளுக்கு
மட்டும் இல்லாமல் பெற்றோர்களும் தங்கள் பணத்தை எப்படி பயனுள்ள
வழியில் செலவு செய்யலாம் என்றும் சொல்லிக்கொடுக்கிறது.
அநாவசியமாக பணம் செலவு செய்ய விரும்பாத நபர்களுக்கு
இந்தத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை வெற்றி பெற்றவர்கள் அனைவரும் பல விதமான போராட்டங்களை சந்தித்தப்பின் தான் அதை அடைந்திருக்கிறார்கள்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.சலவைக்கல் எதிலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது ? 2.உள்நாட்டு போக்குவரக்குக்கு அதிகம் பயன்படும் இந்திய நதி எது ? 3.நாயை விட பல மடங்கு மோப்பசக்தி கொண்ட உயிரினம் எது? 4.பேருந்தை கண்டுபிடித்தவர் யார் ? 5.இந்திய மிக நீண்ட கோபுரம் எது ? 6.இந்தியாவின் முக்கிய உணவுப்பயிர் எது ? 7.பாரதிதாசன் நடத்திய பத்திரிகையின் பெயர் என்ன ? 8.அதிகமான மாவட்டங்கள் கொண்ட இந்திய மாநிலம் எது? 9.மலேரியா நோயில் எத்தனை வகையுண்டு ? 10.நபிகள் நாயகம் அதிகம் பாசம் வைத்திருந்த அவரது மகள் பெயர் என்ன ? பதில்கள்: 1.சுண்ணாம்புக்கல்,2.கங்கை, 3.விலாங்குமீன்,4.கிரிப்டோகிராபி, 5.குதுப்மினார்,6.நெல்,கோதுமை, 7.குயில், நெதர்லாந்து, 8.உ.பி 55 மாவட்டம், 9.3, 10.அன்னை பாத்திமா
இன்று அக்டோபர் 17பெயர் : கவிஞர் கண்ணதாசன் , மறைந்ததேதி : அக்டோபர் 17, 1981 புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கம் மேற்பட்ட திரைப்படப்பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர்.தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
ஒரே நேரத்தில் நம் கோப்புகளை 8 தளங்களில் அப்லோட் செய்யும் புதுமை.
இணையதளங்களில் இலவசமாக பதிவேற்றம் செய்து வைக்க
ரேபிட்ஷேர் , மெகா அப்லோட் , டெபாசிட்ஃபைல் போன்ற தளங்களுக்கு
தனித்தனியாக சென்று பதிவேற்றம் செய்கிறோம் ஆனால் ஒரே
நேரத்தில் நம் கோப்புகள் அனைத்தையும் மேலே குறிப்பிட்ட அத்தனை
தளங்களிலும் பதிவேற்றம் செய்யலாம் எப்படி என்பதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.
ஆன்லைன் மூலம் தனித்தனியாக பதிவேற்றம் செய்யும் நம் கோப்புகள்
அனைத்தையும் ஒரே நேரத்தில் ஒரு தளத்தில் பதிவேற்றம் செய்வதன்
மூலம் நம் கோப்புகளை அனைத்து தளங்களுக்கும் அனுப்ப முடியும்
நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://flashmirrors.com
இந்ததளத்திற்கு சென்று படம் 1 -ல் காட்டியபடி இருக்கும் Short Description
என்பதை சொடுக்கி நாம் பதிவேற்றம் செய்யும் கோப்புகள் பற்றிய
சிறு குறிப்பு கொடுத்துவிட்டு Browse என்ற பொத்தானை அழுத்தி
பதிவேற்றம் செய்யும் கோப்பினை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.
அடுத்து Enter email என்ற வார்த்தையை சொடுக்கியதும் ஒரு
கட்டம் வரும் அதற்குள் நம் இமெயில் முகவரியை கொடுக்கவும்
எல்லாம் கொடுத்து முடித்த பின் Upload என்ற பொத்தானை அழுத்தி
நம் கோப்பை பதிவேற்றம் செய்யவும். நாம் பதிவேற்றம் செய்யும்
இந்த கோப்பு RapidShare , HotFile , DepositFiles, FileFactory,
MegaUpload, Uploading , FileShare , FreakShare ,Uploaded.to,
TurboUpload , UploadBox , ExtaBit, EnterUpload ,uGotFile
போன்ற அனைத்து தளங்களுக்கும் பதிவேற்றம் செய்யப்பட்டு
தரவிரக்க முகவரி நமக்கு இமெயிலில் அனுப்பப்பட்டிருக்கும்.
நம் இணையதள வாசிகளுக்கு கண்டிப்பாக இந்தப்பதிவு
பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை புத்திசாலிகளும், தன்மானம் கொண்டவர்களும் யாருக்கும் அடிபணிந்து வேலை செய்வது கிடையாது.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.செயற்கை காந்தத்தை முதன் முதலில் உருவாக்கியவர் யார் ? 2.உலகிம் மிகத்துல்லியமான கடிகாரம் எது ? 3.சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தை உருவாக்கியவர் யார் ? 4.முதுகு தண்டுவடத்தின் சராசரி நீளம் என்ன ? 5. இயற்கை வைத்தியம் என்ற நூலை எழுதியவர் யார் ? 6.சென்னை மாகாணம் என்பதை தமிழ்நாடு என்று மாற்றியவர் யார்? 7.சர்வதேச நீதிமன்றம் எங்கு அமைந்துள்ளது ? 8.இரயில் போக்குவரத்து இல்லாத நாடு எது ? 9.மனித உரிமைக்கழகம் எப்போது தொடங்கப்பட்டது ? 10.மத்திய பிரதேச மாநிலங்களில் பேசப்படும் மொழி எது ? பதில்கள்: 1.ஜான்கண்டோன், 2.அணுவினால் தயாரான கடிகாரம் , 3.பியரிடி கோபர்டின்,4.430 மில்லி மீட்டர்,5.மொராஜி தேசாய், 6.அறிஞர் அண்ணா, 7.ஹேக் , நெதர்லாந்து, 8.ஆப்கானிஸ்தான், 9. 1961 மே 28, 10.இந்தி.
இன்று அக்டோபர் 16பெயர் : வீரபாண்டிய கட்டபொம்மன் , மறைந்ததேதி : அக்டோபர் 16, 1799 தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டவர்களுள் முதன்மையான மன்னர். ஆங்கிலேயர்களை எதிர்த்து வரி கட்டாமல் போருக்கு அழைத்த சிங்கம்.நாட்டு மானத்துக்காக தன் உயிரை கொடுத்த உத்தமர். உங்களால் நம் தேசத்துக்கு பெருமை.
ஆன்லைன்-ல் திரைப்படங்களை இலவசமாக பார்க்கவும் தரவிரக்கவும் சிறந்த தளம்.
பிரம்மாண்ட ஆங்கிலதிரைப்படங்களை ஆன்லைன் மூலம்
சட்டத்திற்குட்பட்டு பார்க்கவும் எளிதாக தரவிரக்கவும் ஒரு
இணையதளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
பிரம்மாண்டத்திற்கும் பொருட் செலவிற்கும் குறைவே இல்லாத
ஆங்கிலத் திரைப்படங்களை நாம் எளிதாக பார்க்கலாம். இலவசமாக
தரவிரக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.moviemotion.net
ஆக்சன், காமெடி , பிரமிப்பு , த்ரில்லிங் போன்ற வரிசையில் சிறந்த
ஆங்கிலத்திரைப்படங்கள் அனைத்தையும் நாம் ஒரே இடத்தில்
இருந்து பார்க்கவும் தரவிரக்கவும் இந்தத்தளம் நமக்கு உதவுகிறது.
மற்ற தளங்களைக் காட்டிலும் இந்தத்தளத்தில் நாம் குவாலிட்டி
அதிகமான வகையில் திரைப்படங்களை கண்டு ரசிக்கலாம்.
எல்லாத்துறையிலும் சிறந்த படங்களை தேர்ந்த்தெடுத்து ஒவ்வொரு
துறை வாரியாக கொடுத்திருப்பதால் படங்களை தேடும் நேரம்
குறைகிறது. மாணவர்களுக்கு ஆங்கில அறிவை வளர்க்கும் பல
சிறந்த திரைப்படங்கள் இந்ததளத்தில் உள்ளது. ஆங்கிலப்படங்களை
விரும்பி பார்க்கும் நம்மவர்களுக்கு இந்தத்தளம் பயனுள்ளதாக
இருக்கும்.
வின்மணி சிந்தனை மனமும் செயலும் ஒரே இடத்தில் இருந்தால் நாம் வெற்றி பெறுவது உறுதி.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.காகித முறையை கண்டுபிடித்தவர்கள் யார் ? 2.சிங்கம் மணிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் ஓடும் ? 3.மனித மூளையின் சராசரி எடை என்ன ? 4.சென்னையில் மின்சார இரயில் எந்த ஆண்டு வந்தது ? 5.ஓட்டகச்சிவிங்கியின் கழுத்தில் எத்தனை எலும்புகள் உள்ளது ? 6.அமெரிக்க அதிபரின் காரின் எண் என்ன ? 7.எந்த மயிலுக்கு தோகை இருக்கும் ? 8.இந்தியாவிற்கு சினிமா எந்த ஆண்டு வந்தது ? 9.அனுக்களில் மிகவும் லேசானது எது ? 10.சீனர்களின் அதிர்ஷ்ட எண் என்ன ? பதில்கள்: 1.சீனர்கள், 2.80 கி.மீ,3.1.4 கிலோ, 4.1931, 5.ஏழு எழும்புகள், 6.100, 7.ஆண் மயிலுக்கு, 8.1851, 9. ஹைட்ரஜன், 10.8.
இன்று அக்டோபர் 15பெயர் : அப்துல் கலாம் , பிறந்ததேதி : அக்டோபர் 15, 1931 ஒரு சிறந்த விஞ்ஞானியும் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், பொறியியலாளரும் ஆவார்.இந்தியவிண்வெளி ஆய்வு மையம் (ISRO), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) ஆகியவற்றின் பணிகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார். இளைஞர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும் ஒரு இந்தியர். உங்களால் நம் தேசத்துக்கு பெருமை.
ஆயுதபூஜை தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
இனிய ஆயுதபூஜை தின வாழ்த்துக்கள்
செய்யும் ஒவ்வொரு செயலிலும் கருவியாகவும்,
அறிவாகவும் இருந்து செயல்படும் நம் இறைவனுக்கு
என்றென்றும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இன்று தொடங்கும் நம் அனைத்து காரியங்களிலும்
இறைவன் அருள் பரிபூரணமாக இருந்து வெற்றியை
நமக்கு தரட்டும். நண்பர்கள் அனைவருக்கும் இனிய
ஆயூத பூஜை தின நல்வாழ்த்துக்கள்.
படத்தை சொடுக்கி பெரியதாக்கி பாருங்கள்.