41 வெளிநாடுகளுக்கு இணையம் மூலம் இலவசமாக பேக்ஸ் அனுப்பலாம்.

ஒக்ரோபர் 21, 2010 at 7:51 பிப 8 பின்னூட்டங்கள்

அமெரிக்கா, கனடா , ஜப்பான் , சீனா போன்ற 41 நாடுகளுக்கு
இலவசமாக பேக்ஸ் (Fax) அனுப்பலாம் எப்படி என்பதைப்
பற்றித்தான் இந்தப்பதிவு.

தகவல்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கும் ,
ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு அனுப்புவதற்கும்
முன்பு நாம் அதிகமாக பயன்படுத்திக்கொண்டிருந்த பேக்ஸ் (Fax)
என்ற இயந்திரத்தின் பயன்பாடு அதிகமாக இல்லை என்று
கூறினாலும் சில முன்னனி நிறுவனங்கள் இன்றும் பேக்ஸ்
பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கின்றது. இதற்காக நாம்
இப்போது வெளிநாட்டில் இருக்கும் நண்பருக்கோ அல்லது
நிறுவனத்திற்கோ பேக்ஸ் அனுப்ப வேண்டும் என்றால் எந்தவித
பணச்செலவும் இல்லாமல் இலவசமாக நம் இணையம் மூலமே
அனுப்பலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு இணையதளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.myfax.com/free/sendfax.aspx

41 நாடுகளுக்கு மட்டும் தான் நாம் இலவசமாக இந்ததளம்
மூலம் பேக்ஸ் அனுப்ப முடியும். இந்தியாவிற்கு பேக்ஸ்
இலவசமாக அனுப்பும் வசதி இந்த தளத்தில் கொடுக்கப்படவில்லை.
அமெரிக்கா, கனடா, ஜப்பான், சீனா,கொரியா,இத்தாலி,பிரான்ஸ்,
இஸ்ரேல் போன்ற மற்ற அனைத்து (41) நாடுகளுக்கும் நாம்
இந்த இணையதளம் மூலம் இலவசமாக பேக்ஸ் அனுப்பலாம்.
ஒரு நாளைக்கு இரண்டு பேக்ஸ் செய்தி மட்டுமே அனுப்ப
முடியும். 178 File Format -க்கு துணை செய்கிறது. 10 MB அளவிலான
கோப்பு வரை நாம் அனுப்ப முடியும். இந்ததளத்தின் மூலம் நாம்
பேக்ஸ் அனுப்ப எந்த பயனாளர் கணக்கும் தேவையில்லை.
வெளிநாட்டு வேலைக்கு பேக்ஸ் அனுப்பும் நம் தமிழ்
நண்பர்களுக்கு இந்தப் பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

வின்மணி சிந்தனை
மனசாட்சிக்கு விரோதம் செய்யாமல், அடுத்தவரை
ஏமாற்றாமல் இருக்கும் நம் வாழ்வில் துன்பம் ஒரு போதும்
வருவதில்லை.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.உலகிலேயே பழமை வாய்ந்த மலைத்தொடர் எது ?
2.பூவாத தாவரம் எது ?
3.பாம்புகள் எந்த இனத்தை சார்ந்தவை ?
4.எந்த நாடு மிகப்பெரிய இரானுவத்தை கொண்டிருக்கிறது ?
5.இந்தியாவின் தரைவிட்டு பாயும் விண்கலம் எது ?
6.குளிர்சாதனப்பெட்டியில் பயன்படுத்தப்படும் வாயு எது ?
7.வேகவதி என்ற பெயர் கொண்ட நதி எது ?
8.'மை ட்ரூத் ' என்ற புத்தகத்தை எழுதியவர் யார் ?
9.நேட்டோ நாடுகளின் தலமைச்செயலகம் எந்த நாட்டில் உள்ளது?
10.பாத்திரங்களுக்கு ஈயம் பூசப்பயன்படுவது எது ?
பதில்கள்:
1.ஆரவல்லி, 2.நாய்குடை , பாசி, 3.பல்லி இனம்,
4.சீனா,5.பிருத்வி, 6.அமோனியா, 7.வைகை,  
8.இந்திராகாந்தி, 9.பெல்ஜியம், 10.வெள்ளீயம்.
இன்று அக்டோபர் 21 
பெயர் : ஆல்பிரட் நோபல் ,
பிறந்ததேதி : அக்டோபர் 21, 1833
நோபல் பரிசினை உருவாக்கிய சுவீடன் நாட்டு
அறிவியலாளர். டைனமைட் வெடிமருந்தைக் 
கண்டுபிடித்தவர். ஆல்ஃபிரட் நோபெல் ஒரு 
வேதியாளர், பொறியாளர், புத்தாக்குனர், 
ஆயுதத்தயாரிப்பாளராகவும் திகழ்ந்தார். தன்னுடைய உயிலின்
மூலம், தன் பெரும் சொத்தைக் கொண்டு நோபல் பரிசை
நிறுவினார். இவரின் நினைவாக நோபெலியம் (Nobelium)
என்னும் synthetic தனிமம் பெயரிடப்பட்டது.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

மிகவும் பயனுள்ள பூமியின் காலண்டர் விநோத இணையதளம் விக்கிப்பீடியா கட்டுரையை எளிய ஆங்கிலத்தில் படிக்க ட்ரிக்ஸ்

8 பின்னூட்டங்கள் Add your own

  • 1. சுல்தான்  |  6:53 முப இல் ஒக்ரோபர் 24, 2010

    9.நேட்டோ நாடுகளின் தலமைச்செயலகம் எந்த நாட்டில்
    உள்ளது?

    9.பிரேசில்

    இது தவறான பதில்
    உண்மையான பதில் ப்ருச்செல்ஸ்

    மறுமொழி
    • 2. winmani  |  1:25 பிப இல் ஒக்ரோபர் 24, 2010

      @ சுல்தான்
      நண்பருக்கு , நம்மிடம் இருக்கும் தகவலின் படி பிரேசில் என்று தான் இருக்கிறது.
      சிரமம் பார்க்காமல் மறுபடியும் ஒரு முறை பாருங்கள். கண்டிப்பாக
      திருத்திக்கொள்ளலாம்.
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 3. ♠புதுவை சிவா♠  |  5:39 பிப இல் ஒக்ரோபர் 24, 2010

    very useful information winmani thanks

    மறுமொழி
    • 4. winmani  |  9:09 பிப இல் ஒக்ரோபர் 24, 2010

      @ ♠புதுவை சிவா♠
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 5. Sankar  |  5:36 முப இல் ஒக்ரோபர் 25, 2010

    நேட்டோ நாடுகளின் தலமைச்செயலகம் பெல்ஜியம் நாட்டில் உள்ளது. ஊரின் பெயர் ப்ருச்செல்ஸ்

    மறுமொழி
    • 6. winmani  |  11:11 முப இல் ஒக்ரோபர் 25, 2010

      @ Sankar
      நண்பருக்கு திருத்திக்கொள்கிறோம்.
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 7. viswa  |  9:36 முப இல் ஒக்ரோபர் 25, 2010

    Hi,
    Really it useful information, But how to receive fax without fax machine.

    மறுமொழி
    • 8. winmani  |  11:13 முப இல் ஒக்ரோபர் 25, 2010

      @ viswa
      மிக்க நன்றி

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,742 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஒக்ரோபர் 2010
தி செ பு விய வெ ஞா
« செப்   நவ் »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: