ஆன்லைன் -ல் புகைப்படத்தை ஒரே நிமிடத்தில் அழகான சிறிய துண்டுகளாக பிரிக்கலாம்.
ஒக்ரோபர் 14, 2010 at 3:37 முப 4 பின்னூட்டங்கள்
புகைப்படத்தை அழகுப்படுத்துவது ஒரு கலை தான் அந்த வகையில்
நம் புகைப்படத்தை அழகான சிறிய சிறிய துண்டுகளாக பிரிக்கலாம்
ஒரே நிமிடத்தில் அதுவும் ஆன்லைன் மூலம் எப்படி என்பதைப்பற்றித்
தான் இந்தப்பதிவு.
போட்டோஷாப் போன்ற எந்த மென்பொருட்களும் பயன்படுத்தாமல்
நம் புகைப்படத்தை அழகான சிறிய சிறிய துண்டுகளாக பிரிக்கலாம்
நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://bighugelabs.com/hockney.php
இந்தத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி Browse என்ற
பொத்தானை அழுத்தி நாம் மாற்ற விரும்பும் புகைப்படத்தை
தேர்ந்தெடுத்துக் கொள்ளவும் அடுத்து எத்தனை துண்டுகளாக
பிரிக்க வேண்டும் என்பதை Number of Polaroids என்பதில்
கொடுக்கவும் அடுத்து Background color போன்றவற்றை
தேர்ந்தெடுத்துக்கொண்டு Create என்ற பொத்தானை அழுத்தவும்
ஒரே நிமிடத்திற்குள் நம் புகைப்படம் அழகான சிறிய துண்டுகளாக
மாற்றப்பட்டு ஒரே படமாக இருக்கும். மாற்றிய புகைப்படத்தை
பேஸ்புக் , டிவிட்டர் போன்ற சமூக தளங்களிலும் பதிவேற்றம்
செய்யலாம். இந்ததளத்திற்கு சென்று ஒரு இலவச கணக்கை
உருவாக்கிக் கொண்டு மேலும் பல சேவைகளை பெறலாம்.
புகைப்பட கலைஞர்கள் மற்றும் புகைப்படம் எடுத்துப் பழகும்
நண்பர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை எல்லா உணவு வகைகளும் இருந்தும் அதை சாப்பிடாமல் இருப்பது தான் உண்மையான உண்ணா நோன்பு.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.பூனைக்கு இனிப்பை சுவைக்கிற சக்தி உண்டா ? 2.உலகின் மிகப்பெரிய பாதாள ஏரி எந்த நாட்டில் உள்ளது ? 3.தொலைக்காட்சி எந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது ? 4.நமது உடலில் எத்தனை வகை குரூப் ரத்தம் உள்ளது ? 5.மலேசியாவில் மூன்றில் ஒரு பங்கு எந்த நாட்டு மக்கள் வசிக்கின்றனர் ? 6.இடி மின்னல் நாடு என்பது எந்த நாடு ? 7.அச்சகம் கண்டுபிடித்தவர் யார் ? 8.திமிங்கலத்தில் இதயம் ஒரு நாளைக்கு எத்தனை முறை துடிக்கும் ? 9.ஏழு தீவு நகரம் என்பது என்ன ? 10.பூமியின் சுழற்சி எந்த திசையில் இருக்கிறது ? பதில்கள்: 1.கிடையாது, 2.அமெரிக்கா,3.1926, 4.4 வகை குரூப், 5.சீனர்கள், 6.பூடான் நாடு, 7.ஜான் கூடன் பர்க் 1463, 8. 9 முறை, 9. மும்பை, 10.மேற்கில் இருந்து கிழக்கு.
இன்று அக்டோபர் 14பெயர் : சிவசங்கரி , பிறந்ததேதி : அக்டோபர் 14, 1942 ஒரு குறிப்பிடத்தக்க தமிழக எழுத்தாளர். நாவல், சிறுகதை,பயணக் கட்டுரை,இலக்கியக் கட்டுரை, நேர்காணல்,மொழிபெயர்ப்பு எனப்பல தளங்களில் இயங்குகிறார். 1993 இலிருந்து "இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு" என்ற செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகிறார்.
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: ஆன்லைன் -ல் புகைப்படத்தை ஒரே நிமிடத்தில் அழகான சிறிய துண்டுகளாக பிரிக்கல.
1.
♠புதுவை சிவா♠ | 4:48 முப இல் ஒக்ரோபர் 15, 2010
thanks winmani
2.
winmani | 5:05 முப இல் ஒக்ரோபர் 15, 2010
@ ♠புதுவை சிவா♠
நன்றி
3.
shareef | 10:24 முப இல் ஒக்ரோபர் 15, 2010
super sir
4.
winmani | 6:15 பிப இல் ஒக்ரோபர் 15, 2010
@ shareef
மிக்க நன்றி