பேட்டரி-ஐ எப்படி பயன்படுத்த வேண்டும் சொல்லித்தரும் பேட்டரி பழ்கலைக்கழகம்
ஒக்ரோபர் 10, 2010 at 9:21 பிப 2 பின்னூட்டங்கள்
சாதாரண பேட்டரி முதல் ரீசார்ச் செய்யும் பேட்டரி வரை அனைத்தின்
பயன்களையும் அவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் , இவை எப்படி
செயல்படுகிறது என்பதை சொல்ல பேட்டரி பழ்கலைக்கழகம் என்று
ஒன்று உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
பேட்டரி என்று சொன்னவுடன் குறிப்பட காலம் பயன்படுத்தி விட்டு
தூக்கி ஏறியும் நமக்கு இது எப்படி வேலை செய்கிறது. புதிதாக நாமும்
ஒரு பேட்டரி எப்படி உருவாக்கலாம் ? , பேட்டரியின் தரத்தை நீண்ட
நாட்கள் நீடிப்பதற்கு என்னவெல்லாம் கையாள வேண்டும் என்று
சொல்லி நமக்கு உதவுவதற்காக பேட்டரி பழ்கலைக்கழகம் என்று
ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.batteryuniversity.com
இந்ததளத்திற்கு சென்று நாம் பேட்டரி பற்றிய அனைத்து அரிய
செய்திகளையும் அன்று முதல் இன்று வரை பேட்டரி எப்படி மாற்றம்
பெற்று வந்திருக்கின்றது என்று உடனுக்கூடன் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு படியாக நமக்கு பேட்டரி எப்படி வேலை செய்கிறது
என்பதை இரசாயனவியலுடன் கலந்து தெளிவாக எடுத்துச்சொல்கிறது.
ரீசார்ச் பேட்டரி என்றால் எப்படி கையாள வேண்டும் அதில் அடிக்கடி
ஏற்படும் பிரச்சினைகள் என்ன என்பதையும் பட்டியலிட்டு நமக்கு
காட்டுகிறது. புதிதாக நாம் பேட்டரி உருவாக்க விரும்பினாலும்
இந்தத்தளம் எப்படி செய்ய வேண்டும் என்று சொல்லி உதவுகிறது.
2003 முதல் செயல்பட்டு வரும் இந்தத் தளம் இன்றும் அதேபோல்
ஒரே மாதிரி வடிவத்துடன் காட்சித் தருகிறது. கண்டிப்பாக
இந்தத்தளம் பேட்டரியில் புதுமைகள் படைக்க விரும்பும் நபர்களுக்கு
ஒரு பொக்கிஷமாக இருக்கும்.
வின்மணி சிந்தனை உண்மையுடனும் நேர்மையுடனும் நாம் செய்யும் சிறிய வேலை கூட நம் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.நயாபைசா என்பது எந்த ஆண்டு பைசாவாக மாற்றப்பட்டது ? 2.ஒடிசி நடனம் எந்த மாநிலத்தைச் சேர்ந்தது ? 3.ரத்தம் உறைவதற்கு உதவும் வைட்டமின் எது ? 4.இந்திய தேசிய கீதம் எத்தனை வினாடிகளுக்குள் பாடி முடிக்க வேண்டும் ? 5.இம்பிரியல் பாங்க் ஆப் இந்தியாவின் இன்றைய பெயர் என்ன ? 6.இந்தியாவில் இருந்து பர்மா ( மியான்மர்) எப்போது பிரிக்கப்பட்டது ? 7.திரோடு அஹேட் என்ற நூலை எழுதியவர் யார் ? 8.அதிக அளவு நீர் மின்சக்தியை உற்பத்தி செய்யும் நாடு எது ? 9.மின்சார இரயில் என்சின்கள் இந்தியாவில் எங்கு தயாரிக்கப்படுகின்றன ? 10.டேவிஸ் கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது? பதில்கள்: 1.1964, 2.ஒரிசா,3.வைட்டமின் கே, 4.52 வினாடிகள், 5.ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, 6.1937 ஆம் ஆண்டு, 7.பில்கேட்ஸ், 8.ஜப்பான், 9.சித்தரஞ்சன், 10.டென்னிஸ்.
இன்று அக்டோபர் 10பெயர் : ஆர். கே. நாராயண், பிறந்ததேதி : அக்டோபர் 10, 1906 ராசிபுரம் கிருஷ்ணசுவாமி நாராயண் ஆங்கிலத்தில் எழுதிய இந்திய நாவல் ஆசிரியர். இவரின் உணர்ச்சிபூர்வமான நாவல்கள் 20-ம் நூற்றாண்டு இந்தியரின் வாழ்கையைப் பிரதிபலிக்கும் மால்குடி எனும் கற்பனைக் கிராமத்தை தழுவி எழுதப்பட்டவை மிகவும் சிறப்பு பெற்றது.
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: பேட்டரி-ஐ எப்படி பயன்படுத்த வேண்டும் சொல்லித்தரும் பேட்டரி பழ்கலைக்கழகம.
1.
anpudan | 5:44 முப இல் ஒக்ரோபர் 12, 2010
உபயோகமான விஷயம் நண்பரே நன்றிகள் பல, முடிந்தால் மறுமொழிகளை google serch engine ல் வர வைக்க எப்படி ப்ளாக்கில் நிறுவுவது என்று எமக்கு சொல்ல முடியுமா ?
2.
winmani | 6:28 முப இல் ஒக்ரோபர் 12, 2010
@ npudan
நண்பருக்கு ,
பிளாக்-ல் செட்டிங் சென்று பாருங்கள் அதற்கான ஆப்சன் இருக்கும்.
நன்றி