தூக்கத்தைப்பற்றி விரிவான ஆராய்ச்சி செய்யும் புதுமையான தளம்
ஒக்ரோபர் 7, 2010 at 9:21 பிப 2 பின்னூட்டங்கள்
தூக்கம் குறைவதினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதைப்
பற்றிதான் நமக்கு தெரிந்திருக்கும் ஆனால் சரியான தூக்கத்தினால்
நோய் மட்டுமல்ல அத்தனையையும் குணப்படுத்தலாம் என்று
விரிவான ஆராய்ச்சி செய்கிறது தூங்கும் கல்வி என்ற இணையதளம்
இதைப்பற்றித் தான் இந்தப்பதிவு.
தூங்குவதைக் கூட கடமையாக செய்யும் பலபேருக்கு மத்தியில்
தூங்குவதை சுகமாகவும் அதே சமயத்தில் பாடமாகவும் சொல்லி
விரிவான ஆராய்ச்சி செய்கிறது ஒரு இணையதளம். இந்தத் தளத்திற்கு
சென்று தூக்கம் பற்றிய நம் அனைத்து சந்தேகங்களையும் கேட்கலாம்.
படுத்தால் தூக்கம் வர அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது என்பதில்
இருந்து தூங்கும் நேரம் மிகக் குறைவாகத்தான் இருக்கிறது என்பது
வரை அனைத்து கேள்விகளையும் கேட்கலாம்.
இணையதள முகவரி : http://www.sleepeducation.com
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எவ்வளவு
நேரம் தூங்க வேண்டும். அதிகமாக தூங்கினால் ஏற்படும் பிரச்சினை
போன்றவற்றை ஆராய்ச்சி செய்து இந்தத்தளத்தில் வெளியீட்டுள்ளனர்.
இந்தத்தகவல்கள் அனைத்தும் American Academy of Sleep Medicine
கொடுக்கும் தகவல்கள் கண்டிப்பாக இந்தத்தளத்தின் அனைத்து
தகவல்களும் தங்களுக்கு தூக்கம் பற்றிய விழிப்புணர்வையும்
பாடத்தையும் கற்றுகொடுக்கும்.
வின்மணி சிந்தனை நாம் பேசும் வார்த்தை அடுத்தவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்காவிட்டாலும் துன்பம் கொடுக்காமல் இருக்க வேண்டும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.உடல் உறுப்புகளில் தானாக இயங்கும் உறுப்பு எது ? 2.அரேபிய தீபகற்பத்தில் மிகவும் சிறிய தீவு என்று எதை அழைக்கிறோம் ? 3.ஒவியர்கள் அதிகமாகப் பயன்படுத்தும் வண்ணக்கலவை எது ? 4.ஒற்றைத் தளவாடத்தின் மீது செல்லும் இரயிலுக்கு என்ன பெயர் ? 5.நிகற்பம் என்றால் என்ன ? 6.இத்தாலியின் கல்கத்தா என்று வர்ணிக்கப்படும் நகரம் எது ? 7.இந்திய ஊழியர் சங்கத்தை தோற்றுவித்தவர் யார் ? 8.சர்வதேச நதி என்று எதை அழைக்கிறோம் ? 9.ரஷ்யாவின் தந்தை என்று வர்ணிக்கப்படுபவர் யார் ? 10.ஒரு போதும் மலராதப்பூ எது ? பதில்கள்: 1.இதயம், 2.பஹைரன்,3.சிவப்பு, 4.மோனோ இரயில், 5.100 கோடிக்கு தமிழில் நிகற்பம் என்று பெயர், 6.நேப்பிள்ஸ், 7.கோபாலகிருஷ்ண கோகலே, 8.ரைன் நதி, 9.லெனின், 10.அத்திப்பூ.
இன்று அக்டோபர் 7பெயர் : குரு கோவிந்த் சிங், மறைந்த தேதி : அக்டோபர் 7, 1708 சீக்கிய மதத்தவரின் பதினொரு குருக்களில் பத்தாவது குருவும் அவர்களது இறுதி மனித குருவுமாவார். ஒன்பதாவது சீக்கிய குருவின் மகனான இவர் இந்தியாவின் பீகாரில் பட்னாவில் பிறந்தவர். 1675 முதல் இறப்பு வரை சீக்கியரின் குருவாக இருந்தார்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: தூக்கத்தைப்பற்றி விரிவான ஆராய்ச்சி செய்யும் புதுமையான தளம்.
1.
Rajalakshmi | 4:29 பிப இல் ஒக்ரோபர் 17, 2010
I like this topic
2.
winmani | 9:54 முப இல் ஒக்ரோபர் 18, 2010
@ Rajalakshmi
நன்றி