கதை எழுத நினைப்பவர்களுக்கும் கதாசிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்
செப்ரெம்பர் 6, 2010 at 1:40 முப 13 பின்னூட்டங்கள்
கதை எழுத வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் கதாசிரியர்களுக்கும்
ஒரு வரப்பிரசாதமாக இனி ஆன்லைன் -ல் கதை எழுதலாம். பல்வேறு
விதமான படங்களையும் சேர்த்து அழகிய புத்தகம் உருவாக்கலாம்
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
கதை எழுதவேண்டும் என்ற ஆசை நெடுங்காலமாக இருக்கிறது ஆனால்
அதற்கு நேரம் இல்லை கூடவே கதைக்கு தகுந்த மாதிரி நாம் நினைத்த
படங்கள் கிடைக்கவில்லை என்று நினைக்கும் அனைவருக்கும் எளிதாக
ஆன்லைன் மூலம் கதை எழுதலாம். எழுதிய கதையில் விரும்பிய
படங்களை சேர்த்துக்கொள்ளலாம். எழுதிய கதையை ஆன்லைன் மூலம்
நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பலாம். நமக்கு உதவுவதற்காக
ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://storybird.com
இந்தத் தளத்திற்கு சென்று நாம் ஒரு இலவச புதிய கணக்கை உருவாக்கி
கொண்டு கதை எழுத தொடங்க வேண்டியது தான்,.விரும்பிய படங்களை
நாம் விரும்பும் பக்கத்தில் சேர்த்துக்கொள்ளலாம். நேரம் கிடைக்கும்
போது நம் கணக்கை திறந்து கொண்டு ஒவ்வொரு பக்கமாக கதையை
எழுதி கொண்டே போகலாம்.இங்கு இருக்கும் படங்களை பார்க்கும்
போது எல்லோருக்கும் கதை எழுதவேண்டும் என்ற ஆசை வரும்.
நேரம் கிடைக்கும் போது பயன்படுத்திப்பாருங்கள். இலட்சதிற்கும்
மேற்பட்ட கதைகள் இந்தத் தளத்தில் கொட்டிக்கிடக்கின்றன.சிங்கப்பூரில்
இருந்து தோழி வாசகி அவர்கள் தான் ஆன்லைன் மூலம் கதை எழுத
இணையதளம் இருந்தால் கூறுங்கள் என்று கேட்டிருந்தார்
அவர்களுக்காகவும் நம் அனைவருக்காகவும் கதை எழுத ஒரு அழகான
பயனுள்ள தளம்.
வின்மணி சிந்தனை நல்ல எண்ணம், அடுத்தவர்களுக்கு தீங்கு நினைக்காத மனம் கொண்ட எல்லா மக்களும் உயர்ந்த குடியில் பிறந்தவர்கள் தான்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.இத்தாலியின் கொடியை வடிவமைத்தவர் யார் ? 2.உலகில் முதல் அணுசோதனை நடத்திய நாடு எது ? 3.குதுப்மினாரின் உயரம் எவ்வளவு ? 4.உலகின் இரண்டாவது பெரிய நாடு எது ? 5.உலக அமைதிக்கான நோபல் பரிசை நிர்ணயம் செய்வது ? 6.நெருப்புக்கோழிகள் அதிகமாக உள்ள நாடு எது ? 7.ஈபில் கோபுரத்தின் உயரம் எவ்வளவு ? 8.மிக உயரமான சாலைபாலம் எது ? 9.கேரள மாநிலம் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது ? 10.முதலில் உலகப்படத்தை வரைந்தவர் யார் ? பதில்கள்: 1.நெப்போலியன், 2.அமெரிக்கா, 3.240 அடிகள்,4.கனடா, 5.நார்வே பாராளுமன்றம், 6.ஆப்பிரிக்கா, 7.984 அடிகள், 8.பெய்லி பாலம்,9.1956-ல்,10.இராடோஸ்தானிஸ்.
இன்று செப்டம்பர் 6பெயர் : தினமலர் நாளிதழ் தொடங்கிய நாள் : செப்டம்பர் 6 ,1951 தினமலர் இந்தியாவின் தமிழகத்திலிருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ்களில் ஒன்றாகும். இந்நாளிதழ் டி.வி.இராமசுப்பையர் என்பவரால் 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் நாள் தொடங்கப்பட்டது.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: கதை எழுத நினைப்பவர்களுக்கும் கதாசிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.
1.
தணிகாசலம் | 3:32 முப இல் செப்ரெம்பர் 7, 2010
நல்ல பயனான பதிவு . ஆர்வம் இல்லாதவர்களுக்கும் கதை எழுதும் ஆர்வத்தை தூண்டி விடக்கூடிய மென்பொருள். மேலும் தொடருங்கள்.
2.
winmani | 11:18 முப இல் செப்ரெம்பர் 7, 2010
@ தணிகாசலம்
மிக்க நன்றி
3.
charles | 7:47 முப இல் செப்ரெம்பர் 7, 2010
Good Information Winmani sir, Thank You Very Much
4.
winmani | 11:19 முப இல் செப்ரெம்பர் 7, 2010
@ charles
மிக்க நன்றி
5.
வாசுகி | 9:08 பிப இல் செப்ரெம்பர் 7, 2010
தாங்ள் செய்து வரும் சேவைக்கு நன்றி, என் கேள்விக்கு
ஒரு பதிவே கொடுத்து விட்டீர்கள். மிகவும் பயனுள்ள
தளமாக நீங்கள் கொடுத்த தளம் இருக்கிறது.
நன்றி
என் பெயர் வாசவி அல்ல ,
வாசுகி
சிங்கை
6.
winmani | 9:10 பிப இல் செப்ரெம்பர் 7, 2010
@ வாசுகி
மிக்க நன்றி வாசுகி.
7.
சத்தியா | 3:16 பிப இல் செப்ரெம்பர் 9, 2010
ம்… நல்ல நல்ல பதிவைத் தரும்
உங்களிற்கு என் நன்றிகள்.
உங்களிடம் ஒன்று கேட்கலாமா…?
படத்தினை எடிட் செய்து
அந்தப் படத்தின் மேல்
தமிழில் எழுதக் கூடியதாக
ஆன்லைன் மூலம் வசதி உண்டா…?
8.
winmani | 4:27 பிப இல் செப்ரெம்பர் 9, 2010
@ சத்தியா
அன்பு தோழிக்கு , ஆன்லைன் மூலம் ஆங்கிலத்தில் படத்தை எடிட் செய்யும் வசதி
இருக்கிறது. தமிழில் இன்னும் இந்த வசதி வரவில்லை,
மிக்க நன்றி
9.
சத்தியா | 7:25 பிப இல் செப்ரெம்பர் 9, 2010
ம்ம்… பதிலுக்கு மிக்க நன்றிகள் winmani.
10.
winmani | 7:26 பிப இல் செப்ரெம்பர் 9, 2010
@ சத்தியா
மிக்க நன்றி
11.
natesan | 6:22 பிப இல் செப்ரெம்பர் 16, 2010
katha i ezhutuvathu enbathu en ninda kaa asai adhu niraiveriyathul
12.
winmani | 8:04 பிப இல் செப்ரெம்பர் 16, 2010
@ natesan
நன்றி
13.
jmeeramaideen | 12:27 பிப இல் செப்ரெம்பர் 21, 2010
kathai ezhuthavum valaithazam uzzatha? arumainga!