டிவிட்டரில் உங்கள் செல்வாக்கை ஒரே நிமிடத்தில் கண்டுபிடிக்கலாம்.
செப்ரெம்பர் 2, 2010 at 10:05 பிப பின்னூட்டமொன்றை இடுக
காலையில் பல் தேய்ப்பதில் இருந்து மாலையில் கேரம் விளையாடுவது
வரை அத்தனையையும் பகிர்ந்து கொள்ளும் டிவிட்டரில் உங்களின்
செல்வாக்கு எந்த நிலையில் இருக்கிறது என்று எளிதில்
கண்டுபிடிக்கலாம் எப்படி என்பதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.
தினமும் டிவிட் செய்யாவிட்டால் எனக்கு தூக்கமே வராது என்று
சொல்லும் பல பேரின் டிவிட்டர் செல்வாக்கை நாம் எளிதாக
கண்டுபிடிக்கலாம் கூடவே அவர்களின் நண்பர்களின் செல்வாக்கையும்
பார்க்கலாம். டிவிட்டரில் ஒருவரின் செல்வாக்கை கண்டுபிடிக்க
ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://tweetlevel.edelman.com
இந்தத்தளத்திற்கு சென்று நம் டிவிட்டரின் பயனாளர் பெயரை
கொடுக்க வேண்டும் அடுத்த நிமிடம் டிவிட்டரில் நம் செல்வாக்கு
எப்படி இருக்கிறது என்று காட்டும். யாருடைய டிவிட்டர் பயனாளர்
பெயர் வேண்டுமானாலும் கொடுத்து அவர்களின் டிவிட்டர் நிலையை
அறியலாம் கூடவே நாம் செய்த டிவிட்-ன் Influence,Popularity,
Engagement மற்றும் Trust போன்ற அனைத்தையும் நொடிப்பொழுதில்
நாம் தெரிந்து கொள்ளலாம்.
வின்மணி சிந்தனை லஞ்சம் வாங்கும் நபர்களின் குடும்பம் ஒரு போதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.செய்த பாவத்தை அனுபவித்தே ஆகவேண்டும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.முகம்மது நபிகள் பிறந்த இடம் எது ? 2.குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார் ? 3.ஆக்டோபஸுக்கு எத்தனை இதயங்கள் ? 4.சர்வதேச உணவுப்பொருள் எது ? 5.காகமே இல்லாத நாடு எது ? 6.எரிமலை இல்லாத கண்டம் எது ? 7.கிறிஸ்துமஸ் மரத்துக்கு என்ன பெயர் ? 8.உடலில் இரத்தம் பாயாத பகுதி எது ? 9.தமிழ்நாட்டின் மரம் எது ? 10.முதன்முதலில் நினைவு அஞ்சல்தலை வெளியீட்ட நாடு எது? பதில்கள்: 1.மெக்கா, 2.விஸ்வநாதன் ஆனந்த், 3.மூன்று, 4.முட்டைகோஸ்,5.நீயூசிலாந்து, 6.ஆஸ்திரேலியா, 7.SPRUCE, 8.கருவிழி,9.பனைமரம்,10. பெரு.
இன்று செப்டம்பர் 2பெயர் : ராஜசேகர ரெட்டி, மறைந்ததேதி : செப்டம்பர் 2, 2009 இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இந்திய அரசியல்வாதியாகவும், ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராகவும் இருந்தார். இந்திய மக்களவைக்கு நான்கு முறையும் ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்துக்கு நான்கு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: டிவிட்டரில் உங்கள் செல்வாக்கை ஒரே நிமிடத்தில் கண்டுபிடிக்கலாம்..
Subscribe to the comments via RSS Feed