இலவசமாக ஏஜெண்ட் மூலம் சரியான வேலையைத் தேடலாம்.

ஓகஸ்ட் 21, 2010 at 7:42 பிப 9 பின்னூட்டங்கள்

நம் படிப்புக்கும் அனுபவத்துக்கு ஏற்ற சரியான வேலையை பணச்செலவு
இல்லாமல் இலவசமாக ஏஜெண்ட் மூலம் தேடி நல்ல வேலையைப்
பெறலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

நமக்கு தாய் மொழி தமிழ் மட்டும் தான் நன்றாக வரும் , ஆங்கிலம்
அவ்வளவு தொடர்ச்சியாக பேச வராது ஆனால் கணினி புரோகிராம்
மொழி நன்றாக தெரியும், பல பிராஜெக்ட் செய்து இருக்கிறேன் என்று
பலர் இருக்கின்றனர். இவர்களுக்காக வேலையைத் தேட ஒரு
ஏஜெண்ட் இருக்கிறார். ஏஜெண்ட் என்றால் என்னவெல்லாம்
செய்வாரோ அதை எல்லாம் ஒரு இணையதளம் செய்கிறது. நமக்கு
பயோடேட்டா உருவாக்கி தருவதில் இருந்து வேலையை வாங்கி
நம் கையில் கொடுப்பது வரை அத்தனை வேலையையும் இந்தத்
தளம் செய்கிறது. கூடவே நமக்காக வேலைக்கு ஆள் தேவை என்ற
அறிவிப்பு வந்திருக்கும் நிறுவனத்திற்கு நம் பயோடேட்டாவையும்
அனுப்பிவிடுகிறது. நாம் அனுப்ப வேண்டியதில்லை நம் ஏஜெண்ட்
அனுப்பி விடுகிறார். பல மென்பொருள் நிறுவனங்கள் மொழிக்கு
முக்கியத்துவம் கொடுக்காமல் திறமைக்கு முக்கியத்துவம் கொடுத்து
சரியான ஆட்களை இதன் மூலம் தேர்ந்தெடுகின்றனர்.ஆங்கில மொழி
பேச முடியாமல் இருக்கும் நம் தமிழ் நண்பர்களுக்கு இந்தத் தளம்
மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும்
இல்லை.கண்டிப்பாக இந்தப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இணையதள முகவரி : https://www.quietagent.com

வின்மணி சிந்தனை
ஏமாளியாக இருப்பனிடம் தான் கடவுள் தன்மை
இருக்கும் , ஏமாற்றுபவன் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.பச்சையம் இல்லாத தாவரம் எது ? 
2.சோதனைக்குழாய் மூலம் எருமைக்கன்றை உருவாக்கிய
  நாடு எது ?
3.மனித உரிமை தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது ?
4.நீந்தத் தெரியாத மிருகம் எது  ? 
5.எகிப்தின் வெள்ளைத் தங்கம் எது ? 
6.எல்லோரா குகைகள் அமைந்துள்ள நாடு எது ?
7.இந்தியாவின் பெரிய நகரம் எது ? 
8.மிக உயரமான எரிமலை எது ?
9.கங்காரு தாவும் தூரம் எவ்வளவு ? 
10.இடிதாங்கியை கண்டுபிடித்தவர் யார் ? 
பதில்கள்:
1.காளான்,2. இந்தியா,3.டிசம்பர் 10,4.ஒட்டகம்,
5.பருத்தி,6.அவுரங்காபாத்,7.கொல்கத்தா,
8.கேடபாக்சி,9.15 அடி,10.பெஞ்சமின் ஃபிராங்க்ளின்
இன்று ஆகஸ்ட் 21  
பெயர் : சுப்பிரமணியன் சந்திரசேகர்,
மறைந்த தேதி : ஆகஸ்ட் 21, 1995
இவர் ஒரு வானியல் இயற்பியலாளர் ஆவார்.
இந்தியாவில் லாகூரில் பிறந்தவர்.விண்மீன்கள்
பற்றிய இவரது ஆய்விற்காக இவருக்கும்
வில்லியம் ஃபௌலருக்கும் 1983 இல் 
இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

ஹோலோ கிராபிக் செய்தி தொழில்நுட்பத்தின் வளர்ச்சி சிறப்பு வீடியோ ஜீமெயில் வாய்ஸ் மற்றும் வீடியோ சாட் லினக்ஸ்-ல் அடி எடுத்துவைக்கிறது.

9 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Sasi  |  6:36 முப இல் ஓகஸ்ட் 22, 2010

    இந்த தளம் திறக்க முடியவில்லை , தயவு செய்து இதை திறப்பதற்கான வேற வழிகள் தந்து உதவவும்
    நன்றி
    சசி

    மறுமொழி
  • 3. HASAN  |  7:39 முப இல் ஓகஸ்ட் 22, 2010

    your link doesnt work…..ERROR MSGE COMES ………

    This Connection is Untrusted

    You have asked Firefox to connect
    securely to http://www.quietagent.com, but
    we can’t confirm that your connection is secure.
    Normally, when you try to connect securely,
    sites will present trusted identification to prove that you are
    going to the right place. However, this site’s identity can’t be verified.

    மறுமொழி
    • 4. winmani  |  7:57 முப இல் ஓகஸ்ட் 22, 2010

      @ HASAN
      பலபேரின் Resume இந்தத்தளத்தில் இருப்பதால் தகவல் திருடப்பட்டுவிடக்கூடாதே
      என்பதற்காக செக்யூரிட்டி கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. நீங்கள் Get Security certificate ஒகே கொடுத்தால் பிரச்சினை இல்லாமல் தெரியும்.
      முயற்சித்துப் பாருங்கள். வரவில்லை என்றால் வேறு உலாவியில் பயன்படுத்திப்
      பாருங்கள்.
      நன்றி

      மறுமொழி
  • 5. Hanimakers  |  11:10 முப இல் ஓகஸ்ட் 22, 2010

    நீங்கள் தரும் அணைத்து செய்திகளும் மிகவும் பயமிக்கதாக உள்ளது… நன்றிகள்… சேவை தொடர வாழ்த்துக்கள்…

    மறுமொழி
  • 7. rammohan1985  |  12:46 பிப இல் ஓகஸ்ட் 23, 2010

    சிறந்த பகிர்தல்!

    இனி மேலாவது வேலை பெற்றுத் தருவதாகக் கூறி ஏமாற்றும் பேர்வழிகளிடம் சிக்கி, வழி தெரியாமல் விழிக்கும் தமிழ் மக்கள் விழிப்புணர்வு பெறுவார்களாக!

    மறுமொழி
  • 8. ஜெகதீஸ்வரன்  |  9:02 முப இல் ஓகஸ்ட் 26, 2010

    முதலில் மெயில் பாஸ்வேர்டை பதிவு செய்ய கோருகிறது. அது வெற்றிகரமாக முடிந்து Account created! என்ற வாசகத்துடன் மற்ற தகவல்களை பூர்த்தி செய்ய சொல்கிறது. அதில் Country, What is your highest level of education?, What job level are you looking for? என மூன்றிக்கும் ஸ்ரோல் பார் வைக்கப்பட்டுள்ளது.அது வேலை செய்ய வில்லை.எனவே பதிவு செய்ய
    முடியவில்லை.

    மறுமொழி
    • 9. winmani  |  9:24 முப இல் ஓகஸ்ட் 26, 2010

      @ ஜெகதீஸ்வரன்
      நண்பருக்கு ,
      பயர்பாக்ஸ் உலாவியில் முயற்சி செய்யுங்கள். பிரச்சினை தீர்ந்து விடும்.
      நன்றி

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,745 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஓகஸ்ட் 2010
தி செ பு விய வெ ஞா
« ஜூலை   செப் »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: